PDA

View Full Version : தத்வ மஞ்சரி - தொடர்?!



bmbcAdmin
02-04-2012, 02:06 AM
அன்புள்ள வாசகர்களே!
சுமார் 40 பேர் தொடர்ந்து அடியேன் எதை வெளியிட்டாலும் பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது!
படிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
ஈமெயில் குழுவில் அனுப்பப்படும் செய்திகளுக்கும் இதுபோன்ற போரத்தில் வெளியிடப்படும் செய்திகளுக்கும்
உள்ள வித்யாசம், செய்தியை வெளியிட்டவர் அதை எத்தனைபேர் பார்த்தார்கள் என்பதையாவது தெரிந்துகொள்ள
ஏதுவாக இருக்கும். ஈமெயில் குழுவில் அந்த வசதிகூட கிடையாது.
நாமாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் அத்தனைபேரும் வாசித்திருப்பார்கள் என்று?

இப்படி எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல் குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதுபோல் அடம் பிடித்தால்
எப்படி உங்களுக்கு எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று தெரிந்து தொடர்ந்து வெளியிடுவது?
இதனால் ஒரு நிலையில் எல்லாமே அலுத்துப்போகிறது.
அடியேன் யாரையும் எதற்காகவும் குறைசொல்வதில்லை, ஆனால்
அடியேனின் எந்த செயலுக்காவது தொடர்ந்து ஆதரவில்லாதபோது
அடியேன் இதைச் செய்யவதில் பெருமாளுக்கு விருப்பம் இல்லை போலும் என்றுதான் எண்ணுவேன்.

இந்தத் தொடரில் மேலும் பல பதிவுகள் காத்திருக்கின்றன
வாசகர்கள் கருத்தை அறிந்துகொண்டு மேலும் தொடர்வதா விடுவதா என்பதை முடிவு செய்யவேண்டும்.
தாஸன்
என்.வி.எஸ்

pcram
02-04-2012, 04:53 AM
மாண்புமிக்க ஸ்வாமின்

தாங்கள் அப்படி நினைக்காதீர்கள். தாங்கள் எழுதும் ஒவ்வொரு சத்து நிறைந்த ஆன்மிக
கருத்துக்களை ச்ரத்தயாக நானும் என்னைப்போல் மற்றவரும் படிக்கிறார்கள் என்று
என்னால் கூறமுடியும். உடனக்குடன் உங்களுக்கு அவர்களுடைய பாராட்டுக்களை
தெரிவிக்க முடியவில்லை என்றால் பல இயலாமையால் இருக்க
கூடும். ஆனால்
உங்களின் விடாத அயராத ஒய்வில்லாத உழைப்பு என்னைப்போல் மற்ற அங்கத்தினர்களுக்கு
எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என்ற தங்களுக்கு தெரியாது. உடனுக்குடன் சந்தேகங்களுக்கு
பதில், வீடியோ மூலம் விளக்கங்கள் ,வீடியோ மூலம் ஆங்காங்கே நடக்கும் சேவைகள் ,ஈமெயில்
அல்லது facebook வழியாக புதிய ஆன்மிக தொகுப்புக்கள் இவையெல்லாம் NVS என்ற ஒரு
மேதையின் சாதனை.
வாழ்க வளமுடன் , நலமுடன்
Dasan

PC RAMABADRAN