P.S.NARASIMHAN
07-01-2015, 09:10 AM
நம் தமிழ் நாட்டில் மாத்திரம் தை மாத பிறப்பு தினத்தை பொங்கல்' பண்டிகை என்று சொல்கிறோம். ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகையை சங்கராந்தி பண்டிகை என்று தான் சொல்கிறார்கள். அது என்ன 'பொங்கல்' 'மாட்டு பொங்கல்' என்றல்லாம் சொல்கிறோம்.தினம் தான் பொங்கல் செய்கிறோம். தமிழ் நாட்டில் மாத்திரம் ஏன் 'பொங்கல் பண்டிகை என்று சொல்கிறோம்? காரணம் ஏதாவது உண்டா? மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகையை எந்த பெயரில் அழைக்கிறார்கள்
bmbcAdmin
07-01-2015, 07:33 PM
ஶ்ரீ:
பொங்கல் - பெயர் காரணம் - ஒரு ஆராய்ச்சி!
பொங்கல் - பொங்கச் செய்வது, சமைப்பது, பக்குவம் செய்வது, வேகம்பெறச் செய்வது,
எழுச்சிபெறச் செய்வது, நிறைவடையச் செய்வது, ஏற்புடையதாக்குவது, பொங்குகை, பெருங்கோபம்,
மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல்,
பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன.
வில்லிபுத்தூரார் பாரதத்தில் பாண்டவர்களை பகடையாடி வீழ்ச்சியடையச் செய்த சகுனியைப் பார்த்து,
"பொங்கல் உனக்கு வைப்பேன் மாமனே ..." என்கிறான்.
எனவே, ஒரு காரணம்பற்றி நன்றியாகப் படைக்கப்படும் அன்னம் 'பொங்கல்' ஆகும் என்பது தெளிவாகிறது.
தமிழர்கள் இல்லத்தில், மார்கழி விடைபெற்று தைப்புகும் சங்கம நேரத்தில் (இதற்கே சங்க்ராந்தி என்று பெயர்)
பொங்கலைப் பொங்கச் செய்து, இந்த ஆண்டு முழுவதும் எழுச்சியான ஆண்டாக அமையவேண்டும்
என்று இஷ்ட தெய்வத்தை ப்ரார்த்தனை செய்வதே இதன் பயன்பாடாகும்.
இதனால்தான் தமிழ் நாட்டில் ஒவ்வொரு கோவிலிலும் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும்போது பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
மாடுகள் கால்நடைகளுக்கு நன்றிசெலுத்த பொங்கல் வைத்து பூஜைசெய்யும் விழா மாட்டுப்பொங்கல் ஆகும்.
கன்னிப்பெண்கள் தம் சகோதரர்கள் நலமாக இருக்கவேண்டும் என்பதற்காக பறவை பட்சிகளை வேண்டி வைக்கப்படும் பொங்கல் கன்னிப்பொங்கல் ஆகும்
அதுவே கனுப்பொங்கல் என்றாகியது.
பொங்கல் சமயம் வெளியூர் சென்றிருந்தவர்கள்கூட அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பி விழா எடுத்து குடும்பத்துடன்
சந்தோஷமாகக் குதூகலித்து இருப்பர், அந்த சமயத்தில் தம் நெடுநாள் சிநேகிதர்கள், ஊர் பெரியமனிதர்கள் அவரவர்
இல்லத்தில் மாலைவேளையில் சென்று பொங்கல் விழா இனிது நடைபெற்றதா? நலமாக இருக்கிறீர்களா என குசலம்
விசாரிப்பது 'காணும் பொங்கல்' ஆகும்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2019 vBulletin Solutions Inc. All rights reserved.