PDA

View Full Version : அவனோடு நானும் சேவிக்கலாமா?pcram
08-04-2012, 08:40 AM
ஸ்வாமின்
அடியேனுக்கு ஒரு சந்தேஹம். ஆத்தில் பையன் ஸ்தோத்ரங்கள் சொல்லிவிட்டு
பெருமாளுக்கு கர்பூரார்த்தி நெய்வேத்யம் செய்த பின் பெருமாளை சேவிக்கும்போது
நானும் அதே சமயத்தில் சேவித்தால் தவறா.அதாவது அவனோடு நானும் சேவிக்கலாமா.
தயவு செய்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி . வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
தாசன்
ராமபத்ரன்

bmbcAdmin
08-04-2012, 11:08 PM
ஸ்வாமின்
அடியேனுக்கு ஒரு சந்தேஹம். ஆத்தில் பையன் ஸ்தோத்ரங்கள் சொல்லிவிட்டு
பெருமாளுக்கு கர்பூரார்த்தி நெய்வேத்யம் செய்த பின் பெருமாளை சேவிக்கும்போது
நானும் அதே சமயத்தில் சேவித்தால் தவறா.அதாவது அவனோடு நானும் சேவிக்கலாமா.
தயவு செய்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி . வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
தாசன்
ராமபத்ரன்
நமஸ்காரம்.
ஸ்வாமி தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது, புரியவேண்டும் என்பதற்காக கீழே சில வினாக்களை எழுப்புகிறேன்,
குதற்கமாக அதாவது விதண்டாவாதமாக கேட்கவில்லை.

முதலில் தேவரீருக்கு ஏன் இதுபோன்ற சந்தேஹங்கள் வருகின்றன என்பதற்கான அடிப்படையை ஆராயவேண்டும்.
1. பையனுடன் யாரைச் சேவிக்கிறீர்கள்? பெருமாளைத்தானே? பையைனை இல்லையே?
2. பையைனைக் காட்டிலும் தாங்கள் பெரியவர் என்ற எண்ணம் தங்கள் மனத்தில் இருப்பதால் இப்படி தோன்றுகிறதா?
3. தேவரிருடைய ஆசார்யனை எப்போதாவது குடும்பத்துடன் சென்று ஸேவித்திருக்கிறீர்களா?
4. அப்படிச் ஸேவித்திருந்தால் தாங்கள் தனியாக பையன் தனியாக ஸேவிக்கவேண்டும் என்று ஆசார்யன் விரும்பியதுண்டா?
5. தேவரீர் பத்னியுடன் பெருமாள் ஸேவிப்பீர்கள் அல்லவா? பத்னியும் தேவரீரைவிட வயதில் சிறியவர் தானே?

தேவரீருக்கு இது தவறாக தோன்ற வேறு காரணம் இருந்தால் குறிப்பிடவும்.
இதுபோன்ற சிறிய விஷயங்களில் எல்லாம் தேவரீரைப்போன்ற முதியவர்கள் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.
இன்னும் சற்று விசாலமாச் சிந்தியுங்கள்.
இந்த அண்ட சராசரம் அனைத்தும் ப்ரஹ்மாவின் ஒரு பகல் ஒரு இரவில் தோன்றி மறைந்துவிடுகின்றன.
மழைக்காலத்தில் தோன்றும் ஈசல்கள் என்று பிறந்ததோ சில மணி நேரத்தில் அன்றே மடிந்து விடுகின்றனவாம்.
ப்ரஹ்மாவின் வயதுடன் நம் வாழ்நாளை ஒப்பிட்டால் அது நீரில் தோன்றி சில விநாடிகளில் மறையும் நீர்க்குமிழியுடன்கூட
ஒப்பிட முடியாது. ஆயினும் அழிவது சரீரம் மட்டும்தான். துக்கம், சிரமம், கஷ்டம் போன்ற அனைத்தும் சரீரத்துக்கு மட்டும்தான்
ஆன்மா ஆனந்தமயமானது, அது அந்த ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலக்கும் ஆனந்தமயமான தருணத்தை எதிர்நோக்கி
இருக்கவேண்டியது ஒரு வைஷ்ணவனின் ஸ்வாபாவிகம்.
கொசு கடித்தால் வலிக்கிறது, தட்டுகிறோம், தடவிக்கொள்கிறோம் என்பதுபோல் இந்த பூலோக நிகழ்வுகளை
தற்காலிகத் தேவைக்காக எதையோ செய்துவிட்டு அதில் பற்றற்று மனதிலிருந்து அவற்றைத் துடைத்தெதறியவேண்டும்.
மனைவி, மக்கள், உற்றார், உறவினர் நண்பர்கள் என அனைவருக்கும் நாம் நல்லது என்று திண்ணமாக நம்புபவற்றை
செய்துகொண்டு, அதன் பின் விளைவுகளை பகவான் கையில் ஒப்படைத்துவிட்டு பகவான் ஸ்வயமேவ காரயதி
என்றிருப்பதே நிம்மதியாக இருக்க ஒரே வழியாகும்.
அடியேன் ஏதாவது அதிக ப்ரசிங்கித் தனமாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
தாஸன்
என்..வி.எஸ்.

pcram
09-04-2012, 03:35 AM
ஸ்வாமின்
தாங்கள் அதிகப்ரசங்கிதனமாக பதில் கூறி இருக்கிறீர்கள் என்று சொல்ல எனக்கு அருகதை இல்லை.
நான் அனேக தடவைகள் ஆச்சார்யனை குடும்பத்துடன் சேவித்து இருக்கிறேன். அடியேனுடைய
தந்தை, தாத்தா மிக ஸ்ரேஷ்ட ஆசார்ய வம்சத்தில் இருந்து வந்தவர்கள். நான் ஏன் இந்த
கேள்வியை கேட்டேன் என்றால் சமீபத்தில் என்னுடைய மிகவும் வேண்டப்பட்ட ஆத்தில்
சென்றிருந்தபோது பையன் நெய்வேத்யம் கர்பூராத்தி ஆனவுடன் தந்தை பையனு-
டன் சேவித்த போது பையன் நான் சேவித்த பிறகு சேவித்தால் என்ன, என்ன அவசரம்
என்று சற்று
முகம் சுளித்த மாதிரி சொன்னதால் எனக்கு ஒரு மாதிரி மனதில் பட்டது. இதை யாரிடமாவது
சொல்லி தீர்க்கவேண்டும் என்று தங்களுக்கு எழுதினேன் . மன்னிக்கவும் நான் ஏதாவது
தப்பாக எழுதி இருந்தால். என் குடும்பத்தில் இந்த மாதிரி குழப்பம் இதுவரியில் இல்லை.
வயது ஆனாலும் சரி நன்றாக படித்தவராக இருந்தாலும் சரி சில சமயங்களில் தன்னையும்
அறியாமல் குழப்பங்கள் வரத்தான் செய்கிறது.அப்போது தங்களை அணுக வேண்டி இருக்கிறது.
தாசன்

ramabadran

bmbcAdmin
09-04-2012, 07:23 AM
ஶ்ரீ:
ஸ்வாமின் க்ஷமிக்கவேண்டும்.
அந்தப் பையன் மடியாக இருந்திருப்பான், ஆராதனம் முடிவதற்குள்
மற்றவர்கள் தன்மேல் பட்டுவிடப்போகிறார்களே என்ற ஆதங்கத்தில் அப்படி முகம் சுளித்திருக்கலாம்.
பொதுவாக இதுபோல் பெருமாள் ஸந்நிதிகளில் (கோயிலோ - ஆகமோ) நடக்கும் இதுபோன்ற
நிகழ்ச்சிகளை பெருமாள் "அர்ச்சக முகேந ஆவிர்பவித்து" சில விஷயங்களை நமக்குத்
தெரிவிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
அது எல்லா காலத்துக்கும் பொதுவானதாக இருக்கவேண்டியதில்லை.
அந்த நேரத்திற்கு எதையோ தங்களுக்கு தெரிவிக்கவேண்டி நடந்தது என எடுத்துக்கொள்ளவேண்டும்.
க்ஷமிக்கவேணும்.
தாஸன்
என்.வி.எஸ்