PDA

View Full Version : தீட்டு விஷயம்P.S.NARASIMHAN
18-02-2015, 10:27 AM
ஒரு குடும்பத்தில் யாரொருவருக்கு மாத்திரம் மரண தீட்டு இருந்தால் அன்னாருக்கு தீட்டு போகும் வரையில் பூஜா மண்டபத்தையும் மூடி ஆராதனையும் கூடாது என்றால் எப்படி. தீட்டு இல்லாதவர்கள் பெருமாள் ஆராதனையும் அல்லது நிவேதனமும் செய்யகூடாதா.

bmbcAdmin
18-02-2015, 04:58 PM
ஶ்ரீ:
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தீட்டு வருவதென்பது மிக மிக அரிதான விஷயம்.
மாமனார் இறந்துபோனால் மாப்பிள்ளையாகிய மகனுக்கும் மாட்டுப்பெண்ணுக்கும் 3 நாட்கள் மட்டும் தீட்டு வரும்.
பெரும்பாலும் அந்த 3 நாட்கள் அவர்கள் தீட்டு வீட்டில்தான் இருக்கவேண்டியதாக சூழ்நிலை அமையும்.
வேறு தீட்டு எதையும் யூகிக்கமுடியவில்லை. அந்த ஒருவர் யார் என்பதைப் பொறுத்து எடுக்கவேண்டிய முடிவு.
தூரமானவளைத் தனியறையில் ஒதுக்கி வைப்பதுபோல அந்த ஒருவரைத் தனியறையில் விட்டு மற்றவர்கள்
எப்போதும்போல் இருக்கலாம்.
அந்த ஒருவர் ஒதுக்கமுடியாத நபரானால், மற்றவர்கள் ஒதுங்க வேறு இடம் பார்த்துக்கொண்டு அங்கே நடத்திக்கொள்ளலாம்.
தாஸன்

R.Varadarajan
18-02-2015, 06:04 PM
Swamin,
My mother-in-laws Aabdheekam is coming next month. Can I stay in my brothers'/sisters' place and attend? While attending the 3 day function,can I return to the aforesaid houses? Does it cause any theettu to them? Should I take bath after attending the function on returning to their home?
I don't want any thing bad to them.
Kindly clarify.
Sorry for the inconvenience.
I am putting this in the forum so that the information is useful to all.
Or is it correct to assume that after the first 3 days after the passing away,I have no more theettu?
varadarajan

bmbcAdmin
18-02-2015, 10:49 PM
ஶ்ரீ:
ஸ்வாமின்,
எந்த தீட்டுமே 10 நாளைக்குமேல் கிடையாது.
வருஷ ஆப்தீகம் (ஒரு வருடம் நிறைவடைந்து முதல் ச்ராத்தம்) செய்யும்போது தீட்டு எதுவுமே கிடையாது.
முதல் நாள் தஹனம், 2ம் நாள் சஞ்சயனம், பத்துநாள் அபர கார்யம், ஏகோதிஷ்டம், ஸபிண்டீகரணம் உட்பட எதுவுமே
பிசாசு வழிபாடோ பில்லி சூன்யமோ கிடையாது.
(இதை நான் தங்களுக்காக எழுதவில்லை, நிறைய பேருக்கு இந்த சந்தேஹம் இருப்பதால் அது தீரவேண்டும் என்பதற்காக
கொஞ்சம் கடினமான வார்த்தைப் ப்ரயோகத்திற்கு மன்னிக்கவும்).
எனவே, இதனால் எல்லாம் யாருக்கும் எந்தத் தீங்கும் நிகழாது கவலைப்படவேண்டாம்.

இந்தத் தருணத்தில் எனக்கு ஒரு பழைய ஞாபகம் வருகிறது:
15 - 20 வருடங்களுக்கு முன்பு (கொஞ்சம் துடுக்காகப் பேசக்கூடிய காலம்) யாரோ இறந்த 2ம் நாள் சஞ்சயன காரியம்
திருவல்லிக்கேணி க்ருஷ்ணாம்பேட்டையில் பண்ணி வைத்துக்கொண்டிருக்கும்போது நடந்தது.
நித்யவிதிக்காக வைத்திருந்த சொம்பை அருகில் இருந்த ஒரு பையனை எடுத்துக்கொடுக்கச் சொன்னேன்.
அவனும் எடுத்துக்கொடுத்துவிட்டான், அருகில் இருந்த அவனுடைய தகப்பனார் கொதிப்படைந்துவிட்டார்.
"அதெப்படி நான் உயிருடன் இருக்கும்போது என் பையனை நித்யவிதிச் சொம்பைத் தொடச் சொல்லலாம்" என்று கத்தினார்.
அடியேனுக்கும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.
"அருகில் நின்று கொண்டிருந்ததால் எதேச்சயாக எடுத்துத்தரச் சொல்லிவிட்டேன், அது சரி,
அது என்ன சாதாரண சொம்பு தானே, அது என்ன ரிமோட் கண்ட்ரோல் டைம் பாமா? அவன் அதைத் தொட்டவுடன்
நீர் கபாலம் வெடித்துச் சாவதற்கு?
இப்படிஅதிமாக டென்ஷன் ஆவதனால் வேண்டுமானால் உமக்கு ஏதாவது நேரலாம் அமைதியாக இரும்.
இப்படியெல்லாம் ஒருவருக்கு ஒரு கெடுதல் செய்ய இயலும் என்றால்,
யாருக்குவேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் செய்யலாம், நாங்கள் எல்லாம் இந்தமாதிரி ஸ்மசானத்தில் அல்லல்படத்
தேவையில்லை, மிரட்டியே நிறைய பணம் சம்பாதித்துவிடலாம் என்றேன்".
சற்று நேரத்திற்குப்பின் ஒரு வழியாக அவர் சமாதானம் ஆனார்.
என்.வி.எஸ்