Announcement

Collapse
No announcement yet.

Shocking News and Shocking reply which is correct? Who knows?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Shocking News and Shocking reply which is correct? Who knows?

    Gopala Krishnan
    படிக்கவே பகீர்னு இருக்கு. பிரதமர் என்கிற போர்வையில் ஒரு கார்பொரேட் சீஇஒ.
    --------------------------------
    மோடி அரசின் `சாதனை. ரூ.8500 மருந்து ரூ.1 லட்சம் ஆனது
    ========================================================
    தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை’ பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்விக்கும் விதமாக நீக்கினார். இதைத்தொடர்ந்து உயிர் காக்கும் மருந்துகளின் விலை மிகக் கடுமையாக, 14 மடங்கு உயர்ந்துள்ளது. புற்றுநோய் மருந்தின் விலை 8500ரூபாயிலிருந்து 1,10,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.


    இது உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும் என சுகாதாரத்துறையில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    புற்றுநோய்க்கான மருந்தான கில்வெக்’ மாத்திரையின் விலை ரூ.8500லிருந்து 1 லட்சத்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது
    உலகில் எந்த நாட்டிலும் மருந்தின் விலை 14 மடங்காக உயர்ந்ததில்லை.


    ரத்தக் கொதிப்பிற்கான பிளேவிக்ஸ்’ மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
    வெறி நாய்க்கடிக்கான ஊசியின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7000ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
    தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.


    இந்திய நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் கவலைக்குரிய விசயம் என்னவெனில், அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 4.1 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயினால் அவதியுறுகின்றனர்.
    4 கோடியே 7 லட்சம் பேர் இதய நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
    22 லட்சம் பேர் காச நோயினால் துயருகின்றனர்.
    11 லட்சம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
    25 லட்சத்திற்கும் மேலான ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.இந்நிலையில் மருந்துகளின் விலையேற்றம் மக்களை கடுமையாக பாதிக்கும்.
    ஏழை மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் உயிர் வாழ உரிமையே இல்லையா? உயிர் வாழும் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது பாஜக அரசின் செயல் என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.


    இன்னொரு பக்கம்
    மருந்து விலைகளின் கட்டுப்பாட்டை நீக்கியதைத் தொடர்ந்து சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 விழுக்காடு கூடியுள்ளது.
    டோரண்ட் மற்றும் லுர்ப்பின் மருந்து கம்பெனிகளின் லாபங்கள் முறையே 1.5 விழுக்காடும் 0.7 விழுக்காடும் அதி கரித்துள்ளது.
    அரசின் இந்த முடிவை தொடர்ந்து சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் பங்குகளின் விலையும் 2 விழுக்காடு வரை கூடியுள்ளது.
    ஜிஎஸ்கே பார்மா மற்றும் டேவிஸ் லேப் கம்பெனிகளின் பங்குகளின் விலை 1 விழுக்காடும் கிளென்மார்க் கம்பெனி யின் பங்கின் விலையும் கூடியுள்ளது.,மருந்துவிலை அதிகரிப்பை எதிர்த்து அரசியல் வேறுபாடின்றி அனைத்துத்தரப்பு மக்களும் குரலெழுப்ப வேண்டும்,


    உங்களின் எதிர்ப்பை காட்ட இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யவும்.


    Like · Comment · Share
    Mugunthan Veereragavan likes this.


    Narayanan Swaminathan https://www.facebook.com/rajasankar/...02?pnref=story


    Raja Sankar
    மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?


    சுருக்கமான பதில்: இல்லை. அத்தியாவசிய மருந்துகள் என 652 மருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அவைகள் விலை எப்பவும் அரசால் கட்டுப்படுத்தப்படும். பார்க்க http://www.nppaindia.nic.in/DPCO2013.pdf இன் இணைப்பு. ஜூலை 2014 இல் மேலும் 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என அறிவிக்கப்பட்டன. இது அறிவித்தவுடன் மருந்துகம்பெனிகள் மும்பை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் இதை நீக்க கோரி அணுகின. செப்டம்பர் 2014 இல் மேற்கண்ட உத்தரவுக்கு அரசு ஒரு விளக்கம் அளித்தது. இதிலே ஜூலை 2014 உத்தரவு அப்படியே இருக்கும் ஆனால் மேற்கொண்டு உத்தரவுகள் ஏதும் வராது. எனவே ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துவிலைகள் அப்படியே இருக்கும்.


    லட்சரூபாய் எல்லாம் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. அது கடைந்தெடுத்த டுப்பாக்கூர். இதைப்பற்றி தெரிந்துகொள்ள விரிவான பதிலை படிக்கவும்.


    விரிவான பதில்: தேசிய மருந்து விலைகள் கட்டுப்பாட்டு ஆணையம் என்பது 29 ஆகஸ்ட் 1997 இல் அமைக்கப்பட்டது. இதன் வேலை அத்தியாவசிய மருந்துகள் என்பது எவை என தீர்மானிப்பதும் அதன் விலையை நிர்ணையிப்பதும் ஆகும். இது மத்திய கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் வருகிறது. இது தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் என்பதை அவ்வப்போது வெளியிடும். மருந்து தயாரிப்பவர்களும் விற்பவர்களும் தங்களுடைய விற்பனையை இந்த ஆணையத்திடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அளிக்கவேண்டும் அதைப்பொறுத்து ஆணையம் மருந்து விலையில் தலையிடலாமா என்பதை முடிவு செய்யும்.


    பார்க்க http://www.medindia.net/…/pharm_indu...ainisation.asp
    http://www.nppaindia.nic.in/index1.html


    மே 15 2013 அன்று கடைசியாக 652 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் என அறிவித்தது. இந்த மருந்துகளை பார்க்க http://www.nppaindia.nic.in/DPCO2013.pdf போய் NLEM என தேடினால் 24 ஆம் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும். டிபி வியாதிக்கு 6 மருந்துகளையும் நீரிழிவு வியாதிக்கும் 7 மருந்துகளையும் கேன்சர் வியாதிக்கு 31 மருந்துகளையும் உள்ளடக்கியது.


    ஜூலை 2014 இல் இன்னோர் உத்தரவு மூலம் இன்னும் 108 மருந்துகளை இந்த அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த லிங்கில் பாருங்கள் http://www.nppaindia.nic.in/wh-new-2...w-44-2014.html (இதிலே 50 தான் இருக்கு மிச்சம் 58 எங்கேன்னா அது ஒவ்வொரு மருந்து அளவையும் சேர்த்து கணக்கிட்டு இருக்காங்க)


    இந்த உத்தரவை எதிர்த்து மருந்து கம்பெனிகள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். காரணம் மருந்து கட்டுப்பாடு சட்டம் 2013 இன் 19 ஆம் பிரிவு அவரச கால நிலையிலுமோ அல்லது ஒரே கம்பெனி மருந்துவிலையை கட்டுப்படுத்தும் நிலையிலுமோ(monopoly) மட்டுமே மருந்து விலை கட்டுப்பாடு ஆணையம் விலைய கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறது. ஆனால் ஜூலை உத்தரவில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என.


    பதிலுக்கு கட்டுப்பாட்டு ஆணையம், மருந்துவிலைகளில் இருக்கும் வித்தியாசத்தை சொல்கிறது. எ.கா. Gliclazide எனும் மருந்து 29.5 ரூபாயில் இருந்து 44.25 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. அதெப்படி 15 ரூபாய் வித்தியாசம் என கேட்கும் முன் ஜெனிரிக் மருந்து என்றால் என புரிந்து கொள்ளவேண்டும். காப்புரிமையால் கட்டுப்படுத்தப்படாத மருந்துகள் ஜெனிரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். மேலும் பார்க்க http://en.wikipedia.org/wiki/Generic_drug


    Gliclazide மருந்து விலைகள்
    http://www.medindia.net/drug-pr…/gli...ycor-80-mg.htm - 44.25
    http://www.medindia.net/drug-pri…/gl...deb-80-mg.htm- 29.50
    http://www.medindia.net/drug-pri…/gl...liza-80-mg.htm - 32.00
    மொத்த விலைகளும் http://www.medindia.net/drug-price/gliclazide.htm


    இது பற்றி தெரிவதற்கு முன்னர் நானும் ஏமாந்திருக்கேன். ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு 320 கொடுத்து வாங்கினேன். ஆனால் அதே மருந்து 120க்கும் கிடைக்கிறது. அதிலிருந்து மருத்துவர் எழுதிக்கொடுத்தாலும் அங்கிருக்கும் மருந்துக்கடையில் வாங்காமல் வேறு மருந்துக்கடையில் ஜெனிரிக் இருக்கா என கேட்டு குறைந்த விலை மருந்தை வாங்குவது. எல்லாம் அதே தான் ஆனால் விலை மட்டும் தான் வித்தியாசம்.


    சரி இன்னும் அந்த லட்ச ரூபா மேட்டருக்கு வரலையேன்னு கேக்குறது புரியது அதுக்கு வர்றேன்.


    இந்த லட்ச ரூபா ஆளுங்க எல்லோரும் இந்த http://www.dnaindia.com/…/report-can...rice-goes-up-…
    சுட்டியை அடிப்படையாக கொண்டு தான் பொங்கல் வடை எல்லாம் சுடுகிறார்கள்.


    இதிலே சொல்லப்பட்டிருக்கும் Glivec என்பது 8500 இல் 1,08,000 ஆக ஏறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது Gleevec அல்லது Imatinib எனவும் விற்கப்படுகிறது. இதன் விலை ரூ 900 ஆம் தான். 8500 அல்ல. பார்க்க
    http://www.medindia.net/drug-price/imatinib/celonib.htm


    இதன் முழு விலைகளையும் பார்க்க http://www.medindia.net/drug-price/imatinib.htm மொத்தம் 18 கம்பெனிகளை இதை தயாரிக்கின்றன.


    இந்த Glivec என்பதற்கு இன்னோர் கதை இருக்கிறது. இந்த மருந்தை தயாரித்த நோவாட்டிஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் வரை இதற்கு காப்புரிமை கேட்டு சுப்ரீம் கோர்ட் இதை மறுத்துவிட்டது. எனவே இது ஜெனிரிக் ஆக விற்கப்படுகிறது. பார்க்க http://en.wikipedia.org/…/Novartis_v..._India_%26_Ot…
    http://en.wikipedia.org/wiki/Imatinib


    ஜெனிரிக் ஆக விற்கும் மருந்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும் என்று இருக்கும் மருந்தை விலை ஏறிவிடும் என பூச்சாண்டி காட்டுவது என்ன விதமான டுபாக்கூர்த்தனம் என தெரியவில்லை. அதுவும் சுப்ரீம் கோர்ட்டே காப்புரிமை தரமறுத்த பிரபலமான மருந்துக்கே இப்படி அண்டப்புளுகு ஆகாசபுளுகு புளுகவேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை. இதற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியும் டிஎன்ஏ பத்திரிக்கை ஏற்க மறுத்துவிட்டது. பார்க்க http://dnasyndication.com/…/Cancer_d...g…/DNMUM316965


    இதை விரிவாக விளக்கும் சுட்டிகள். முழுதாக படித்தால் புரியும்.
    http://spicyip.com/…/cancer-drug-pri...going-from-80…


    http://spicyip.com/…/govt-withdraws-...s-to-cap-pric…


    தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள்
    http://www.nppaindia.nic.in/…/pre…/w...t-15-9-14.html
    http://www.nppaindia.nic.in/wh-new-2...w-65-2014.html
    http://www.nppaindia.nic.in/wh-new-2...w-64-2014.html


    சரி இப்போ என்ன நடக்கும்? இப்படி மருந்துவிலையை கட்டுப்படுத்த வழியே இல்லையா அப்படீன்னா இருக்கு. அது அரசே மருந்துகளை அதிகளவில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு கொடுப்பது தான்.


    மருந்து கண்டுபிடிப்பவர்கள் குறைந்த பட்சம் 10-20 வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்தும் தான் மருந்து கண்டுபிடிக்கிறார்கள். அந்த செலவை யாரேனும் ஒருவர் ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும். திருட்டுவிசிடியில் படம் பார்க்கிறார்கள் என படம் தயாரிப்பை நிறுத்திவிட்டால் யாரும் சாகப்போவதில்லை ஆனால் மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் செய்தால்? எனவே உழைப்பும் பணம் செலவு செய்வதையும் யாரேனும் ஒருவர் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.


    ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இதை செயல்படுத்தி வருகின்றன. அம்மா மருந்தகம் ஞாபகம் வருகிறதா? மத்திய அரசும் இதை செயல்படுத்த ஆரம்பித்து உள்ளது. அதுவே தீர்வாக இருக்கும்.


    எனவே லட்ச ரூபாய் ஏறுகிறது, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது என்பதெல்லாம் பொய். யார் வேண்டுமானாலும் தயாரிக்கும் மருந்துகளின் விலை லட்சக்கணக்கில் ஏறும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த புளுகுகள்.


    கூடவே மோடி அமெரிக்கா போனார் மருந்துவிலை ஏறிவிட்டது எல்லாம் தமிழ் சினிமா கதைக்கு நல்லாயிருக்கலாம் ஆனால் அதுவும் சுத்த பொய். காரணம் இந்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் எல்லாம் ஐரோப்பிய கம்பெனிகள். நோவாரிட்டிஸ் கம்பெனி சுவிட்சர்லாந்து கம்பெனி. சுவிட்சர்லாந்து கம்பெனிக்கு மோடி அமெரிக்காவில் ஒப்பந்தம் போட்டு வர்றார் என யோசிக்க மிகவும் அபாரமான டுபாக்கூர்த்தனம் வேண்டுமல்லவா?


    இது பற்றி வந்த பல சுட்டிகளை இணைத்திருக்கிறேன்.
    http://in.reuters.com/…/india-drug-p...KBN0HE0Z42014…
    http://www.livemint.com/…/Price-caps...hurt-Indian-u…
    http://www.thehindu.com/…/nonessenti...cle6439154.ece
    http://www.thehindu.com/…/pricing-ro...cle6453089.ece


    http://articles.economictimes.indiat.../54868306_1_n…
    http://www.dnaindia.com/…/standpoint...-control-of-d…

  • #2
    Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

    Confirming just what i wrote in reply to Sri;Brahmanyan. we are in for a more dangerous govt,that will be run by Ambanis and Adanis.
    Throw them out at the earliest opportunity.
    varadarajan

    Comment


    • #3
      Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

      Originally posted by R.Varadarajan View Post
      Confirming just what i wrote in reply to Sri;Brahmanyan. we are in for a more dangerous govt,that will be run by Ambanis and Adanis.
      Throw them out at the earliest opportunity.
      varadarajan
      ஶ்ரீ:
      திரு.வரதராஜன் அவர்களின் முந்தைய பதிவைப்பார்த்து அடியேன் கூட ஓ அப்படியா என்று சற்று அதிர்ந்தேன்,
      ஆனால் இந்தப் பதிவைப் பார்த்தபின்தான் திரு.வரதராஜன் அவர்கள் முழுமையாக பதிவைப் படிக்காமல் அவசரமாக
      (அல்லது உள்நோக்கத்துடன்)தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்தியுள்ளார்
      என்பது தெளிவாகிறது. எனவே இவருடைய முந்தைய பதிவும் அப்படிப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும், இருக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

      திரு.மூர்த்தி மாமா தன்னுடைய அபிப்ராயமாக எதையும் தெரிவிக்கவில்லை?!

      எது எப்படியோ, எல்லாம் இறைவன் திருவுள்ளப்படிதான் நடக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
      நம்பிக்கைதான் வாழ்க்கை!
      தயவுசெய்து அரசியலைப்பற்றி இந்த போரத்தில் விவாதித்து நமக்குள் பேதங்களை வளர்த்துக்கொள்ளவேண்டாம்.
      தாஸன்,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

        I may have been hasty,but what i stated is true/will be true to you all over time.
        However I feel deeply hurt for the statement....
        முழுமையாக பதிவைப் படிக்காமல் அவசரமாக
        (அல்லது உள்நோக்கத்துடன்)தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்தியுள்ளார்
        என்பது தெளிவாகிறது. எனவே இவருடைய முந்தைய பதிவும் அப்படிப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும், இருக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

        Read More at :http://www.brahminsnet.com/forums/sh...rect-Who-knows


        I have no ....உள்நோக்கம்.... in my posts.
        I too was a fan of Modi. But no more.
        Good Bye!
        varadarajanj

        Comment


        • #5
          Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

          Originally posted by R.Varadarajan View Post
          I may have been hasty,but what i stated is true/will be true to you all over time.
          However I feel deeply hurt for the statement....

          I have no ....உள்நோக்கம்.... in my posts.
          I too was a fan of Modi. But no more.
          Good Bye!
          varadarajanj
          ஶ்ரீ:
          அன்பு நண்பர் திரு.வரதராஜன் அவர்களுக்கு,
          என்ன இது சின்ன குழுந்தைபோல "குட் பை"?
          என்ன நேர்ந்துவிட்டது?
          தங்கள் பதிவில் உள்நோக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அடியேன் பதிவில் நிச்சயம் உள்நோக்கம் உண்டு!:
          இதோ அந்த நோக்கம்:
          "எவ்வளவு இனிய நண்பர்களாயினும்
          அரசியல் சர்ச்சையில் ஈடுபட்டால்
          அது விபரீதமாகத்தான் முடியும்" என்பதை நிரூபிக்கவே இப்படி ஒரு பதிவு
          அடியேன் எதிர்பார்த்ததுபோலவே தங்கள் ரியாக்*ஷன்!!
          புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

          அடியேன் மோடிக்கோ அல்லது எந்த அரசியல்வாதிக்குமோ விசிறி அல்ல
          ஆனால் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் சொல்வதை பெரும்பகுதி நம்புவேன்
          அந்த வகையில் சோ அவர்கள் இன்னமும் மோடியைப் பற்றி நம்பும் விதமாகவே எழுதிக்கொண்டிருக்கிறார்.
          எனவே நாமும் அந்த நம்பிக்கையை இழந்துவிடவேண்டாம்.
          மற்றவை இறைவன் கையில்
          எனவே இனி நாம் அரசியல் பற்றி விவாதிக்காதிருப்போமாக.
          தாஸன்,
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

            ஸ்வாமின், என்னுடைய பதிவில் இரு வேறுபட்ட statement இரு நண்பர்கள்ளால் தெரிவிக்கபட்டுள்ளது. எதை நம்புவது ? எதை நிராகரிப்பது ? என்பதை அறிந்து கொள்ள வேண்டி இந்த பதிவை பதிந்தேன். வேறு நோக்கங்கள் இல்லை. என்னை பொருத்தவரயில்
            அரசியலில் நான் ஒரு எந்த கட்சி சாராத பொது ஜனம். யாருக்கும் சார்பு
            நிலை இல்லை. நேர்மையான அரசு - திறமையான நிர்வாகம் - எல்லா
            மக்களுக்கும் சுபிட்சம் - இதுவே என் எதிர்பார்பபு. இது வரையில் கை
            கூடவில்லை. திரு.வரதராஜன் சார் மற்றும் ஸ்ரீ என் .வி எஸ். அவர்கள்
            இருவரும் இந்த பதிவினை பார்த்துவிட்டு, பதிவில் கூறியுள்ள கருத்தில் எதை நம்புவது - எதை வேண்டாம் என்று தள்ளுவது என்று தெரிவித்தால் நல்லது. (I will stop here to express through Tamil Language - because of fluency is getting disrupt, as I am weak in Tamil Text Language expression)
            We are only spectators and not politicians. As regards to politics, Shri.NVS 's has given right suggestion to avoid politics in this forum. I agree.I too request all to cooperate with
            him. with regards, ggmoorthyiyer.

            Comment


            • #7
              Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

              Originally posted by ggmoorthyiyer View Post
              ஸ்வாமின், என்னுடைய பதிவில் இரு வேறுபட்ட statement இரு நண்பர்கள்ளால் தெரிவிக்கபட்டுள்ளது. எதை நம்புவது ? எதை நிராகரிப்பது ? என்பதை அறிந்து கொள்ள வேண்டி இந்த பதிவை பதிந்தேன். வேறு நோக்கங்கள் இல்லை. என்னை பொருத்தவரயில்
              அரசியலில் நான் ஒரு எந்த கட்சி சாராத பொது ஜனம். யாருக்கும் சார்பு
              நிலை இல்லை. நேர்மையான அரசு - திறமையான நிர்வாகம் - எல்லா
              மக்களுக்கும் சுபிட்சம் - இதுவே என் எதிர்பார்பபு. இது வரையில் கை
              கூடவில்லை. திரு.வரதராஜன் சார் மற்றும் ஸ்ரீ என் .வி எஸ். அவர்கள்
              இருவரும் இந்த பதிவினை பார்த்துவிட்டு, பதிவில் கூறியுள்ள கருத்தில் எதை நம்புவது - எதை வேண்டாம் என்று தள்ளுவது என்று தெரிவித்தால் நல்லது. (I will stop here to express through Tamil Language - because of fluency is getting disrupt, as I am weak in Tamil Text Language expression)
              We are only spectators and not politicians. As regards to politics, Shri.NVS 's has given right suggestion to avoid politics in this forum. I agree.I too request all to cooperate with
              him. with regards, ggmoorthyiyer.
              ஶ்ரீ:
              மதிப்பிற்குரிய மூர்த்தி மாமா அவர்கட்கு,
              நமஸ்காரம்,
              திரு.வரதராஜன் உட்பட நாம் அனைவருமே கட்சி சார்புடையவர்கள் அல்ல
              ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
              ஆள்பவனின் பெயரோ, அடையாளமோ முக்கியமல்ல, நாடு சுபிட்சமாக இருக்கவேண்டும் என்பதே நம் அனைவரது நோக்கம்.
              ஆனால் நம்மைப்போன்ற நடுநிலையாளர்களை, தங்களின் வியாபார நோக்கத்திற்காக மீடியாக்கள்
              தவறாக வழிநடத்துகின்றன என்பது மட்டும் அனைவரும் அறிந்த உண்மை.

              இந்த அரசைப்பற்றிய ஊழல் செய்திகளோ, தவறான கொள்கை முடிவெடுத்து நாட்டுக்குத் தீமை விளைவித்ததாகவோ
              எந்தச் செய்தியும் துக்ளக் போன்ற தரமான அரசியல் பத்திரிகைகளில் வெளிவரவில்லை என்பது ஒன்றே சற்று நம்பிக்கை தரும் விஷயம்.

              ஆனால் க்ரீன்பீஸ் போன்ற என்.ஜி.ஓக்களைக் கொண்டு வெளிநாட்டினர் அரசைப்பற்றிய தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்
              என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
              அரசு அமைந்து ஒரு வருடம்தான் ஆகிறது, இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன
              என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
              ஊழல் வழக்கிற்கு ஆளானவர்களே, வழக்கில் தண்டனை வழங்கப்படாதவரை
              குற்றவாளி என்று கூறமுடியாது என்று வாதிடும்போது, எந்தவித வழக்கும் வராத,
              விசாரணைக்கும் ஆளாகாத சூழலில், வெறும் வதந்திகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு
              தற்போதே ஒரு முடிவுக்கு வருவதால் எந்தப் பயனும் இல்லை.

              நாமே நினைத்தாலும் தற்போது எதையும் செய்ய முடியாது, எனவே அடுத்த தேர்தல்
              நெருங்கும் சமயத்தில் பொறுப்புடன் சாதக பாதகங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்
              அதுவரை இந்த அரசியல் செய்திகளுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைப்போம்.
              தாஸன்,
              என்.வி.எஸ்


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #8
                Re: Shocking News and Shocking reply which is correct? Who knows?

                Dear Sri NVS,

                Namaskaram,

                I agree with you that members of our Forum should desisit the temptation of airing political views while discussing important subjects.

                Warm regards,
                Brahmanyan,
                Bangalore.

                Comment

                Working...
                X