Announcement

Collapse
No announcement yet.

Vikramaditya & Vedanta

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vikramaditya & Vedanta

    Courtesy:https://thommaljayaramanmadhavan.wor...E%A8%E0%AF%8D/


    कोई लाख करे चतुराई,
    कर्म का लेख मिटे ना रे भाई ।
    இந்த மனிதன் இருக்கிறாரே – இவர் தன்னைத் தானே அதி-புத்திசாலி என்று நினைத்துக் கொள்கிறார்! உலகத்தோடு கபட-நாடகமாடுகிறார்!
    ஆனால், சாஸ்திரம் சொல்கிறது, 'ஜாக்கிரதை! பார்ப்பவர் ஒரு கோடி கண்களால் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்!'
    ஜீவனத்தில் மங்களம் உண்டாக வேண்டுமென்று விரும்பினோம் என்றால், மனதால் – வாக்கால் – செயலால் ஒருபோதும் பாவத்தைச் செய்யக் கூடாது! இதுவே குரு புகட்டும் – சந்தர்கள் புகட்டும் – சாஸ்திரங்கள் புகட்டும் பாடம்!
    நம்முடைய ஜீவனத்தில் சத்தியத்தைச் சொல்ல முடியவில்லை என்றால் பரவாயில்லை – சாஸ்திரம் சொல்கிறது – பொய் சொல்லாதே! யாருக்கும் ஒத்தாசை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, யாரையும் காலைவாரி விடாதே!
    कह मुनीस हिमवंत सुनु जो बिधि लिखा लिलार।
    देव दनुज नर नाग मुनि कोउ न मेटनिहार॥
    நமது கர்ம-பலன் இருக்கிறதே, அதுவே நமது பிராரப்தமாகி விடுகிறது! எது ஜீவனத்தில் நடக்கவிருக்கிறதோ – ஞாபகமிருக்கட்டும் – அது நடந்தே தீரும்! எது நடக்கவிருக்கிறதோ, அதை யாராலும் நிறுத்தவும் முடியாது! எதை நம்மால் நிறுத்த முடியாதோ, அதைக் குறித்து நாம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறோம்!
    இன்று மனிதருடைய மனம் நிம்மதியில்லாமல் இருக்கிறதே, அதற்கு காரணம் என்ன? அதற்குப் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் – அவர் தன்னைத் தானே ரொம்ப பெரிய ஞானி என்று எண்ணுவது தான்! தன்னைத் தானே அதி-மேதாவி என்று எண்ணிக் கொள்வது தான்!
    மனிதன் நினைக்கிறார், 'நான் சூரியனின் கதியை நிறுத்தி விடுவேன்!'
    என்னுடைய கர்மாவால் – என்னுடைய பிரதாபத்தால் – என்னுடைய பிரபாவத்தால் – கர்மாவின் பலனை மாற்றி விடுவேன்!
    ஆனால், அப்படி ஆவதில்லை!
    எதை நாம் நம்முடைய ஜீவனத்தில் செய்தோமோ, அது திரும்ப நமக்கு எதிரில் வந்தே தீரும்! அதில் சந்தேகம் எதுவுமில்லை! ஒவ்வொரு மனிதருடைய பிறப்புக்கு முன்னால் அவருடைய பாக்கியம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது!
    अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
    अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवता ॥
    பகவான் சொல்கிறார், 'ஹே அர்ஜுனா, மூடத்தனத்தில் மூழ்கி இருக்காதே! நான் என்ன சொல்கிறேனோ, அதைச் செய்! பிறப்புக்கு முன்னால், உன்னுடைய பர்சனாலிடி ஒன்றுமிருக்கவில்லை; உன்னுடைய என்டிடி (தனித்தன்மை) ஒன்றுமிருக்கவில்லை. எப்போது உன்னுடைய சரீரம் விட்டுவிடுமோ, அப்போதும் உன்னுடைய பர்சனாலிடி, தனித்தன்மை ஒன்றுமிருக்காது! உன்னுடைய கர்ம-பலனை வைத்தே, இந்த உலகம் உன்னை நினைத்துப் பார்க்கும்! பிறகு, ஏன் ஹா-ஹா என்பதிலேயே உன்னுடைய ஜீவனம் கழிய வேண்டும்?'
    எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்! இவ்வளவு சாஸ்திரங்கள் மண்டிக் கிடக்கும் நமது பாரததேசம்! ஆனால், மனிதரின் மனதில் நிம்மதியில்லை!
    2
    விக்கிரமாதித்தமஹாராஜர் ராஜசபையில் வீற்றிருந்தார். விக்கிரமாதித்தமஹாராஜரோ பரமஞானியாக இருந்தார். தங்களுடைய வழக்குகளை தீர்த்துக் கொள்ள தேவர்களும் இவரிடம் வந்து கொண்டிருப்பார்கள்!
    இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் மஹாராஜரிடம் சொன்னார்கள், 'எங்கள் விவகாரத்தை நீங்கள் தீர்த்து வையுங்கள்.'
    விக்கிரமாதித்தமஹாராஜர் சொன்னார், 'சொல்லுங்கள், என்ன பிரச்சனை? எதைத் தீர்த்து வைக்க வேண்டும்?'
    முதல்-மனிதர் சொன்னார், 'மஹாராஜா, என்னுடைய வாதம் இது தான் – ஈஸ்வரன் ஒரு தடவை பாக்கியத்தில் எதை எழுதி விட்டாரோ, பிறகு, அவர் மறுபடியும்-மறுபடியும் விலக்குவதோ, அழிப்பதோ, திருத்துவதோ கிடையாது!'
    இரண்டாவது-மனிதர் சொன்னார், 'அவர் பரம-சாமர்த்தியசாலியானால் – அவரே சுவயம் ஈஸ்வரன் என்றால் அவருக்கு எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவரோ பரம-சுதந்திரமானவர்! அவருடைய தலையில் என்ன பாரமிருக்கிறதா? அவரைத் தட்டிக் கேட்பவர் யாருமில்லை! அவர் ஏன் எழுதிக் கொண்டிருப்பார், மஹாராஜா? அவருக்கு அவ்வளவு சாமர்த்தியமிருக்கிறது – அவர் எழுதியே விட்டார் என்றாலும், அவரால் அழிக்கவும் முடியும்; விலக்கவும் முடியும்; கூட்டவும் முடியும்; குறைக்கவும் முடியும்!'
    முதல்-மனிதர் சொன்னார், 'இல்லை, சிருஷ்டிகர்த்தா ஒரு தடவை எழுதினார் என்றால் எழுதியது தான்! அவரிடம் அவ்வளவு நேரமிருப்பதில்லை – மறுபடியும்-மறுபடியும் உட்கார்ந்து அழித்துக் கொண்டிருப்பதற்கு; விலக்குவதற்கு; கூட்டிக் குறைத்துக் கொண்டிருப்பதற்கு!'
    விக்கிரமாதித்தமஹாராஜாவுக்கு தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டது!
    3
    விக்கிரமாதித்தமஹாராஜா நினைத்தார், 'நான் பெரிய-பெரிய தீர்ப்புகளைச் சொல்லி இருக்கிறேன்! ஆனால், இவர்களுக்கு பதில் சொல்வதென்றால், என்ன பதில் சொல்வது? ஏனென்றால், இரண்டுபேரும் சொல்வதில் ரொம்ப வலு இருக்கிறது – ரொம்ப கனமிருக்கிறது!'
    விக்கிரமாதித்தமஹாராஜா தடுமாறிப் போய் விட்டார் – யார் சொல்வதை சரி என்று சொல்வது – யார் சொல்வதை தவறு என்று சொல்வது!
    ரொம்ப சமயம் வரைக்கும் அவர் ஆராய்ந்து பார்த்தார்; ஆழ்ந்து சிந்தித்தார்; யோசித்துப் பார்த்த பிறகும், எப்போது ஒரு விடையும் தோன்றவில்லையோ, அப்போது அவர் அந்த இரண்டு வழக்காளிகளிடம் சொன்னார், 'இன்றையிலிருந்து சரியாக எட்டு நாட்களுக்குப் பிறகு வாருங்கள்; உங்களுடைய பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்!'
    இப்போது விக்கிரமாதித்தமஹாராஜா யோசிக்க ஆரம்பித்தார் – என்ன செய்வது என்று. அவர் சபையில் அநேக வித்வான்களையும், பண்டிதர்களையும் வரவழைத்தார். அவர்களுக்கு முன்னால் இந்தப் பிரச்சனையை வைத்தார். எல்லோரும் அவரவர்களுடைய மதியை அனுசரித்து பதில் சொன்னார்கள்; ஆனால், ராஜாவுக்கு திருப்தி உண்டாகவில்லை.
    ஒரு நாளாயிற்று, இரண்டு நாளாயிற்று, மூன்று நாளாயிற்று, நாலாவது நாளுமாயிற்று!
    இப்படியே கொஞ்சம்-கொஞ்சமாக விக்கிரமாதித்தமஹாராஜாவுக்கு தூக்கம் வராமல் போய் விட்டது.
    ஒரு நாளுக்குப் பின்னால், இன்னொரு நாள் கழிந்து கொண்டிருந்தது.
    இன்று ஐந்தாவது, ஆறாவது நாளும் கழிந்து விட்டது.
    ஏழாவது நாள் அவர் சங்கல்பம் செய்து விட்டார் – இந்த கேள்விக்கு விடை எனக்கு கிடைக்கவில்லை என்றால், இன்று நான் சாப்பிடவே போவதில்லை. அவர் அன்ன-ஆகாரத்தை தியாகம் செய்து விட்டார்.
    பகவானுடைய பூஜையிலிருந்து எழுந்தவர், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டே, தன்னுடைய அரண்மனையின் உப்பரிகையில் ஏறி விட்டார். எப்படி அரண்மனையின் மேல்-மாடத்தை வந்தடைந்தாரோ, அவருடைய திருஷ்டி பட்டது ஒரு விசித்திரமான – ஒரு விசாலமான பறவையின் மேல்! ஒரு ராட்சஸ-கழுகு அங்கே உட்கார்ந்திருந்தது!
    4
    விக்கிரமாதித்தமஹாராஜா மெதுமாக நடந்து அந்த பட்சியை அணுகினார். அதை தன் கையால் மேலிருந்து கீழே வருடிக் கொடுத்தார். அப்படிச் செய்தும் அந்த பட்சி அங்கிருந்து பறந்தோடவில்லை. அதன் அங்கங்கள் முழுவதையும் பார்வையிட்ட மஹாராஜர் நினைத்தார், 'அட, இதனுடைய கால்களைப் பார் – எவ்வளவு வலுவாக இருக்கின்றன!'
    எப்படி மஹாராஜர் தன் இரண்டு கைகளாலும் அந்த பட்சியின் கால்களைப் பிடித்தாரோ, அப்படியே அந்த பட்சி சரேலென்று எழுந்து பறக்க ஆரம்பித்து விட்டது. அது அவ்வளவு வேகமாக எழுந்தது – மஹாராஜரின் கால்கள் அரண்மனையை விட்டு மேலே வந்து விட்டன!
    கீழே பார்த்த மஹாராஜர் நினைத்தார், 'நான் கையை விட்டு விட்டேன் என்றால், எக்குத்தப்பாய் கீழே விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து விடலாம்!' அவர் ரொம்ப பலமாக அந்த பட்சியின் கால்களை பிடித்துக் கொண்டார்.
    அந்த பட்சி பறந்து-பறந்து ஒரு ஜன-நடமாட்டமில்லாத ஒரு காட்டையடைந்து விட்டது. ஆனால், அந்த காட்டின் நடுவில் எதிரிகளின் சேனை நாலாப்பக்கமும் சூழ்ந்திருந்தது மஹாராஜரின் பார்வையில் பட்டது. அட கஷ்ட-காலமே, யார் இவருடைய ஜன்ம-வைரியோ – பரமசத்ருவோ, அவருடைய சேனைகள்! அந்த சேனைகளுக்கு நடுவே ஒரு மாளிகை அமைக்கப் பட்டிருந்தது.
    விக்கிரமாதித்தமஹாராஜர் விக்கித்துப் போய் விட்டார், 'அட என்னயிது! பகவான் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்! இந்த பட்சி என்னை எங்கே கொண்டு போகிறது! நானே வலிய வந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டு விட்டேனே! ஒருவேளை, இன்று என்னுடைய ஜீவனத்தின் கடைசி நாளோ – என்னவோ! என்னுடைய வீர-தீர-பிரதாபாத்தைப் பற்றி இந்த எதிரிகளுக்குத் தெரியும்! ஆனால், இன்று நான் நிராயுதபாணியாக – தனியாக வந்திருக்கிறேன்!'
    பறந்து கொண்டிருந்த அந்த பட்சி அந்த மாளிகையின் மேலேயே வந்து நின்று விட்டது.
    ரொம்ப நேரமாக இறுகப் பிடித்திருந்ததால், கைகள் சோர்வடைந்து விட்டிருந்தன. 'நான் கொஞ்ச நேரம் கைகளை தளர்த்திக் கொண்டு, திரும்பவும் பிடித்துக் கொள்கிறேன்! இந்த பட்சி என்னை எங்கே வேண்டுமானாலும் கொண்டு போகட்டும்! பகவான் என்ன நினைத்திருக்கிறாரோ, அது தானே நடக்கும்! பகவத் சங்கல்பம்!'
    எப்படி மஹாராஜர் கைகளை விட்டாரோ, அப்படியே அந்த பட்சி அங்கிருந்து பறந்தோடியே விட்டது.
    5
    இப்போது விக்கிரமாதித்தமஹாராஜர் ஸ்தம்பித்துப் போய் விட்டார்.
    ரொம்ப நேரம் வரைக்கும், அந்த மாளிகையின் உப்பரிகையிலேயே வளைய வந்து கொண்டிருந்தார்.
    அவர் நினைத்தார், 'இந்த பட்சி என்னை விட்டு-விட்டுப் போய் விட்டது. இப்போது என் கதி என்னாவது?' இப்படி நினைத்துக் கொண்டே, கொஞ்சம்-கொஞ்சமாக அடியெடுத்து வைத்து, மாளிகைக்குக் கீழே இறங்க ஆரம்பித்தார்.
    இறங்கும் போதே, அவருடைய பார்வையில் எதிரிலிருந்த ஒரு கூடம் தென்பட்டது.
    அந்த கூடத்தில் அவர் பிரவேசித்தார்.
    ஒரு 11-12 வயசான சின்ன பாலகன் ஓடி வந்தான். ஓடி வந்து, விக்கிரமாதித்தமஹாராஜரைத் தழுவிக் கொண்டு விட்டான். அவன் பிரியத்தோடு சொன்னான், 'வாருங்கள் ராஜா, உங்கள் வரவு நல்வரவாகுக!'
    விக்கிரமாதித்தமஹாராஜர் சொன்னார், 'குழந்தை, நீ யார்? இந்த மாளிகையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே? இவ்வளவு நிசப்தமாக இருக்கிறதே – இந்த மாளிகையில்? என்ன சமாசாரம்?'
    அந்த பாலகன் சொன்னான், 'நான் இன்ன-இன்ன தேசத்தின் ராஜாவுடைய புத்திரன்! எப்போது என்னுடைய ஜன்மமாயிற்றொ, அப்போது ஜோசியர்கள் என் ஜாதகத்தைப் பார்த்து விட்டு என் தந்தையிடம் சொன்னார்கள் – இந்த பாலகனுக்கு சரியாக 12 வயதாகும் போது, விக்கிரமாதித்தராஜாவின் கைகளால் இவனுடைய மரணம் நேர்ந்து விடும்!'
    இதைக் கேட்டு, விக்கிரமாதித்தமஹாராஜர் துணுக்குற்றார்! சரீரம் வியர்வையில் தெப்பலாக நனைந்து விட்டது! 'இந்த ஜோசியர்களும் எப்படி பொய் சொல்கிறார்கள் – யார் கண்டது! இவர்கள் என்ன ஜாதகத்தைக் கணிக்கிறார்கள்! ஒரு பாவமுமறியாத இந்த பாலகன் எனக்கு அப்படி என்ன தீம்பு செய்து விட்டான் என்று என் கைகளால் இவனுடைய மரணம் ஏற்படப் போகிறது?'
    ஆனால், அவர் மனதில் யோசித்தார், 'எப்படியெல்லாம் இந்த பாலகன் சொல்கிறானோ, அப்படியே எனக்கும் ஒத்துக் கொள்ள வேண்டி இருக்கும்!'
    ஏன்?
    'இந்த மாளிகையின் நாலுத்திசையையும் சுற்றி வளைத்து சேனைகள் நின்றிருக்கின்றன! என்னுடைய பரம-சத்ருவின் சேனைகள்!
    இந்த பாலகன் சொல்கிறான் – என்னை விக்கிரமாதித்தராஜாவிடமிருந்து பாதுகாக்க வேண்டி என் தந்தை யாருமில்லாத காட்டில் இந்த மாளிகையை நிர்மாணித்திருக்கிறார்! என்னுடைய பாதுகாவலுக்காகவே ஆயிரக்கணக்கான சேனைகள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்! எங்கே – ஏதாவது ஒரு வழியில் – விக்கிரமாதித்தமஹாராஜர் வந்துவிடக் கூடாதே என்று!'
    ஏன்?
    'இன்று தான் என் தந்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள்! நாளை என் தந்தை பாண்டு-வாத்தியத்தோடு என்னை அரண்மனைக்குக் கொண்டு போவார்! இன்று ஒரு நாள் கழிந்து விட்டால் போதும்!'
    6
    பாலகன் சொன்னான், 'சரி மஹாராஜா, எல்லாம் இருக்கட்டும்; நீங்கள் வாருங்கள்! இப்போது தான் எனக்கு போஜனம் கொடுக்கும் சேவகர் போஜனத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். நீங்கள் என்னோடு வந்து போஜனத்தை கிரகித்துக் கொள்ளுங்கள்.'
    விக்கிரமாதித்தமஹாராஜர் சொன்னார், 'இல்லை குழந்தாய், இந்த போஜனத்தை நீ சாப்பிடு.'
    பாலகன் சொன்னான், 'இல்லை ராஜா, நீங்கள் சாப்பிட்டேயாக வேண்டும்!'
    விக்கிரமாதித்தமஹாராஜர் நினைத்தார், 'நான் சாப்பிட மறுத்தேன் என்றால், ஒருவேளை உரக்கக் கூவி எங்கே சத்ரு சேனைகள் வந்து என்னைப் பார்த்து விட்டால் என்னாவது! வாயை மூடிக் கொண்டு இவன் சொல்வதைக் கேட்பதே நமக்கு க்ஷேமம்!'
    இரண்டுபேரும் உட்கார்ந்து போஜனத்தைக் கிரகித்தார்கள்.
    பழங்களைச் சாப்பிடும் தருணம் வந்த போது, அந்த பாலகன் எழுந்தான்; அலமாரியைத் திறந்து, இரண்டு குறுவாள்களைக் கொண்டு வந்தான்!
    ஒரு கத்தியை தன்னிடம் வைத்துக் கொண்டு, மற்றொன்றை விக்கிரமாதித்தமஹாராஜரிடம் கொடுத்தான்!
    அவன் சொன்னான், 'நீங்களும் க்ஷத்திரியர்! நானும் க்ஷத்திரியன்! க்ஷத்திரியர்களின் கைகளில் மேஜை-கரண்டிகள் சோபிப்பதில்லை! நம் போன்றவர்களின் வேலையே வாளையும், கத்தியையும் செலுத்துவது தான்! மஹாராஜா, நாம் இதை வைத்து ஒருவருக்கொருவர் பழத்தை ஊட்டி விடுவோம்!'
    விக்கிரமாதித்தமஹாராஜர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், 'குழந்தை, பகவான் நமக்கு கைகளைக் கொடுத்திருக்கிறார்! நாம் இந்தக் கைகளால் பழம் சாப்பிட வேண்டும்! இல்லையென்றால், மேஜை-கரண்டி இருக்கிறது! முள்கரண்டி இருக்கிறது!'
    ஆனால், அந்த பாலகன் மசியவில்லை. சின்னப்பிள்ளை- பிடிவாதம்! குழந்தை பிடிவாதம் பிடித்தான் என்றால் என்னாகும்! விக்கிரமாதித்தராஜாவுக்கு அவன் சொல்வதைக் கேட்டேயாக வேண்டி இருந்தது!
    7
    இப்போது, அப்படியே இந்த கத்திமுனையால் பழத்தை எடுத்து, ஒருவருக்கொருவர் ஊட்டி விட ஆரம்பித்தார்கள். இரண்டு-மூன்று தடவை அந்த பாலகன் ஊட்டி விட்டான்; இரண்டு-மூன்று தடவை விக்கிரமாதித்தராஜா ஊட்டி விட்டார்.
    இந்த தடவை, விக்கிரமாதித்தராஜா ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் – அந்த பாலகனுக்கு பலமாக அப்படி ஒரு தும்மல் வந்தது – பழமோ வெளியே விழுந்து விட்டது – விக்கிரமாதித்தமஹாராஜரின் கத்தி அவனுடைய கழுத்தில் பட்டு விட்டது! அவனுடைய பிராண-பட்சி பறந்தோடி விட்டது!
    விக்கிரமாதித்தமஹாராஜரின் கண்கள் கண்ணீரில் நனைந்து விட்டன.
    அவர் நினைத்தார், 'ஹே கடவுளே! ஹே பகவானே! ஹே பரமாத்மா! இதே கேள்விக்காகத் தான் நான் பரிதவித்துக் கொண்டிருந்தேன்!'
    ஒருவருடைய கர்மாவை அனுசரித்து, ஆண்டவன் ஒரு தடவை பாக்கியத்தில் எழுதி விட்டார் என்றால் அது அழிவதில்லை!
    இன்று விக்கிரமாதித்தமஹாராஜர் சொன்னார், 'எனக்கு இந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது!'
    இப்போது விக்கிரமாதித்தமஹாராஜர் அப்படியே மாளிகையின் மேல்தளத்திற்குப் போனார். பட்சி கிடைத்தது. பட்சியின் காலைப் பிடித்து, அரண்மனைக்கு வந்து விட்டார்.
    மறுநாள், அந்த இரண்டு வழக்காளிகள் வந்தார்கள்.
    விக்கிரமாதித்தமஹாராஜர் அவர்களுக்கு பதில் சொல்லி விட்டார். 'பாருங்கள், பகவானிடம் அவ்வளவு நேரமிருப்பதில்லை – தினமும் எழுதி-எழுதி, அழித்துக் கொண்டிருப்பதற்கு!'
    ஏன்?
    'அவர் கோடிக்கணக்கான ஜீவன்களை உண்டாக்கி இருக்கிறார்! எல்லோரையும் சுதந்திரமாக விட்டு விட்டார்!
    कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
    கர்மா என்கிற கத்தியை ஒவ்வொருவருடைய கைகளிலும் கொடுத்து விட்டார் ஈஸ்வரன்! பரமாத்மா சொல்கிறார் – பார், எனக்கு உன்னோடு எந்த கொடுக்கல்-வாங்கலுமில்லை! நான் உன்னை மனிதனாக்கினேன்; ரொம்ப அழகான புத்தியைக் கொடுத்தேன்; ஞானத்தைக் கொடுத்தேன்; இப்போது, கர்மாவைச் செய்ய வேண்டியது உன்னுடைய வேலை! யார் எந்த கர்மாவைச் செய்கிறாரோ, அந்த கர்மாவைப் பொறுத்தே மேற்கொண்டு அவருடைய ஜீவனத்தின் காரியங்களாகின்றன!'
Working...
X