Announcement

Collapse
No announcement yet.

3 gates

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3 gates

    Courtesy: Smt.soundradevi


    மூன்று வாசல்கள்
    நரகத்துக்கு / எம பட்டணத்துக்கு மூன்று வாசல்கள் உண்டு.
    அவை -
    காமம் க்ரோதம் லோபம்
    இராவணனுக்கு சீதை மேல் காமம்
    ஹிரன்யகசிபு வுக்கு நாராயணன் மேல் கோபம்
    துரியோதணனுக்கு பூமி மேல் லோபம்...
    அதாவது ஆசை - கோபம் - பேராசை.
    இதுதான் எமலோகத்துக்கு 3 வாசல்கள்.
    சரி... இதெல்லாம் த்வாபரயுகத்துல துரியோதணனுடன் முடிந்துவிடுமே. இனிமே ராவணன் ஹிரண்யன் துரியோதனன் எல்லாம் கலியுகத்துல இல்லியே....
    கீதையில் க்ருஷ்ணன் சொல்லும் நரகவாசல் 3...தூக்கம் - சோம்பல் - கவனமின்மை. - நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீராற் காமக் கலன் என்று திருவள்ளுவர் சொல்வதும் கீதை.... இது மானுடர்களுக்கு.
    ஆனால்
    ஸ்ரீ ஹரி பகவத் ப்ரேமத்தை முன்னிட்டு தவறே செய்தாலும் / அதர்ம வழி நடந்தாலும் ஆட்கொள்கிறான்.
    தசரதன் / பீஷ்மர் ஆகிய இருவரும் தர்மத்தை கடைசிவரை அனுஷ்டித்தார்கள் ஆனால் பக்கத்திலேயே இருந்த பரமாத்மாவை மறந்துவிட்டனர் - முடிவில் சொர்க்கமே வாய்த்தது - வைகுண்ட ப்ராப்தி இல்லை.
    திருவனந்தபுரத்தில் அடியார் ஒருவரிடம் இந்த காம க்ரோத லோபம் ஒருங்கே இருந்தது - ஸ்ரீ ஹரி அவருக்கு உடனே முக்தி கொடுத்து அவரை தங்க ஆபரணமாக்கி காதில் குண்டலமாக - இடுப்பில் ஒட்டியாணமாக - காலில் பாதரக்ஷையாக சூடிக் கொண்டான் கண்ணன்...
    இது என்ன புதுக் கதை? காம க்ரோத லோபம் நரகவாசல் என்று சொல்லிவிட்டு இப்போ நேர்மாறாக!
    ஆம்...
    அடியார் முதல் வாசல் வழியா திருமுக தரிசனம் கண்டபோது அவருக்கு ஹரியின் மீது கோபிகையை போல காமம் / ஆசை உண்டானது.
    இரண்டாவது வாசல் வழியாக நாபிக் கமல ப்ரம்மாவைப் பார்த்து - இவருக்கு கிடைச்சது எனக்கு கிடைக்கலையே என ப்ரம்மா மீது கோபம் வந்தது - நன்னா சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்காரே, ஸ்வாமிக்கு பெருமாளுக்கு வயிறு வலிக்காதோ என்று - அமுது படைக்கும் போது நாபிகமல ப்ரம்மா முகத்தில் துணியை போட்டு அடியார் மறைத்து விடுவார்... நைவேத்யம் பண்ணலை என்றால் பிரம்மா இளைத்துப் போய்விடுவார். பெருமாளுக்கு வயிற்று பாரம் குறையும் என.
    கடைசி வாசல் வழியா பெருமாளின் பாதம் கண்ட உடனே அடியாருக்கு திருவடிமேல் பேராசை - லோபம் ஏற்பட்டு அதை விடவே மாட்டேன் என கெட்டியா பிடித்துக்கொண்டு விடவே இல்லை!
    உடனே கண்ணன் அந்த அடியாருக்கு வைகுண்ட பதம் தந்து ஸ்வர்ண ரூபமாக்கி குழையாய் - கச்சையாய் - காலணி யாக ஆக்கிக் கொண்டார்.
Working...
X