PDA

View Full Version : *®¤*¯€*®ª*®¾*®µ*®³*®¿ *®®*®°*¯*®¨*¯*®¤*¯ *®š*¯**®¯*¯*®¯*¯*®®*¯ *®®*¯*®±*¯ˆTamil Rasikan
09-10-2011, 10:00 PM
மேற்பார்வையாளர் ஐயா அவர்களே,
நானும் பார்கிறேன் ரொம்ப காலமாக,
தாங்கள் ஒருவர்தான் நிறைய விஷயங்களை தந்துகொண்டிருக்கிறீர்கள்!
நாமும் ஏதாவது எழுதவேண்டும் என்று முயன்று முயன்று பார்த்து இதோ இதை கொடுக்கலாம் என்று பார்த்தால்
அதிலும் தாங்கள் முந்திவிட்டீர்களே!


தீபாவளி மருந்து செய்யும் முறை
தமிழ் ரசிகன்

தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள்.
பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும்.
இங்கே தீபாவளி மருந்து செய்வதற்கான குறிப்பு இதோ.


தேவையானவை:

இஞ்சி - 50 கிராம் - (பொடிப்பொடியாக நறுக்கியது)
ஜீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு - 11/2 (ஒன்றரை) தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 4
வெல்லம் - 200 கிராம்
நெய் - 50 கிராம்

செய்முறை:

இஞ்சி, மிளகு, தனியா, ஜீரகம் இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். விழுது கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் வெல்லத்தைப் பொடியாக்கி சேர்த்து அடுப்பில் மெலிதாக எரியவிட்டு, கட்டியாகாமல் கிளறவும். இஞ்சி விழுது முழுவதும் வெந்து சிரப் அளவு பக்குவம் வந்தவுடன், அடுப்பைத் தொடர்ந்து மெலிதாக எரியவிட்டு நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.

இந்தக்கலவை கருப்பு நிறத்துடன் கெட்டியாக ஆனவுடன் ஏலக்காய்ப் பொடியைத்தூவி மீதமிருக்கும் நெய்யையும் விட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது தீபாவளி மருந்து தயார். தேக்கரண்டியால் எடுக்குமளவிற்குப் பக்குவமாக இருக்கும்.

bmbcAdmin
09-10-2011, 10:10 PM
நன்றி தமிழ் ரசிகன் அவர்களே.
தாங்களாவது என்னுடைய சிரமங்களைப் புரிந்துகொண்டுள்ளீர்களே.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பார்வையிடுகிறார்கள்.
ஒரு சிலர் மட்டுமே பயனாளராக உள் நுழைகிறார்கள், அதிலும் ஒரு சிலரே
பதில்கள் பதிவு செய்கிறார்கள்.
நிச்சயம் கூடிய விரைவில் அனைவரும் பதிவுகளைச் செய்வார்கள் என நம்புகிறேன்.
மிக்கநன்றி.
மிக தக்க சமறத்தில், மிக அருமையான தகவலைத் தந்துள்ளீர்கள்.
தங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வையுங்கள்.
என்னால் முடிந்த தீபாவளி பரிசு ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.