Announcement

Collapse
No announcement yet.

Aadhaaram & aadeyam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Aadhaaram & aadeyam

    Aadhaaram & aadeyam


    அரசனும் தளபதியும் மந்திரியும் பெரிய வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரு படகில் ஏறிச் சென்றனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதைக் கண்டு மந்திரி பயந்து நடுங்கினான்.


    அரசனும் தளபதியும் தைரியம் கூறினர். மந்திரி பயம் நீங்காமல் படபடப்போடு என்னென்னவோ சொன்னான். அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்களையும் பயம் தொற்றிக் கொண்டது.


    இனியும் மந்திரி படகில் இருந்தால் சூழ்நிலைக் கெடுத்து விடுவான் என்று எண்ணிய தளபதி, அவனை வெள்ளத்தில் தள்ளிவிட்டார்.


    தண்ணீரில் தத்தளித்த அவன், உடனே படகில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்று கத்த ஆரம்பித்தான்.


    படகில் இருந்தவரைக்கும் அதன் பாதுகாப்பை உணராத அவன், படகிலிருந்து ஆற்றில் தூக்கி எறியப்பட்டதும் படகின் அருமையை உணர்ந்து கொண்டான். ஆதாரத்தின் மதிப்பினை உண்மையிலேயே அறிந்து கொண்டான்.


    கடவுளே ஆதாரம், அடிப்படை பக்க பலம். உலகம் "ஆதேயம்'. அதாவது துணையாகப் பயன்படுவது. நம் மீது சுமத்தப்பட்டது.
Working...
X