Announcement

Collapse
No announcement yet.

On Getting up

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • On Getting up

    On Getting up


    நித்ய கர்மானுஷ்டானம் - பூமி வந்தனம்


    படுக்கையிலிருந்து எழுந்து பூமி மேல் காலை வைப்பதற்கு முன் பூமாதாவிற்கு வந்தனம் செய்ய வேண்டும். பூமாதாவின் மேல் பாதங்கள் படாமல் இருக்க முடியாது. ஆதலால், பூமாதாவின் மேல் பாதங்கள் படாமல் இருக்க முடியாது என்பதற்காக மன்னிப்பு கோரி இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். "ஸமுத்ரவஸனே தேவி பர்வத ஸ்தனமண்டலே | விஷ்ணுபத்நீ நமஸ்துப்யம் பாதஸ்பர்ஸனம் க்ஷமஸ்வ மே|| சமுத்திரம் போல் வஸ்திரத்தை தரித்து, மலை போன்று ஸ்தன்யத்துடன் (மார்பகம்)ஸோபிக்கும் ஸ்ரீ விஷ்ணு பகவானின் தர்மபத்னியான ஓ ப்ருத்வீ தேவி| உன்னுடைய தயையினால் என் பாத ஸ்பர்ஸத்தை மன்னிப்பாயாக தாயே| என்று பூமாதாவிடம் மன்னிப்பு கோரும் வகையில் இந்த ஸ்லோகத்தை சொல்லி முதலில் வலது காலை பூமியில் ஊன்றி எழுந்திருக்கவும்.


    நித்ய கர்மா (மங்கள திரவியங்களின் தரிசனம்) "ரோசனம் சந்தனம் ஹேமம் ம்ருதங்கம் தர்சனம் மணிம் |
    குருமக்னிம் ரவிம் பஸ்யேன்னமஸ்யேத் ப்ராதரேவ ஹி||" கோரோஜனம், சந்தனம், ஸ்வர்ணம், சங்கு, மிருதங்கம், கண்ணாடி, முத்து போன்ற மங்களபிரதமமான வஸ்துக்களை தரிசனம் செய்யவும். பிறகு குருவிற்கு, அக்னிக்கு, சூரியநாராயணனுக்கு நமஸ்கரிக்கவும்
Working...
X