PDA

View Full Version : ஸ்ரார்த்த திதி தீர்மாணிப்பது எப்படி?



Krish8350
26-10-2016, 10:17 AM
நமஸ்காரம்:

எனது நெருங்கிய உறவினர் தை அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதியில் (16-02-2016) காலமாணார். நவமி திதி வரும்போது மாசி பிறந்துவிட்டது. வருஷாப்திகம் அல்லது ஸ்ரார்த்தம் முதலியவை தை அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதி என்று கணக்கில் கொள்வதா? அல்லது மாசி மாதம் அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதி என்று கணக்கில் கொள்வதா? தை அமாவசைக்கு பிறகு வரும் நவமி திதி என்று கணக்கில் கொண்டால் வருஷாப்திகம் தைமாதமே வந்து விடுகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் நான் தெலுகு சம்பரதாயத்தை கடைபிடிக்கும் தெலுகு ஐயர். கர்த்தாவே தமிழ் ஐயர் வசிப்பதோ இந்தியாவிற்கு வெளியில். வருஷாப்திகத்திற்கு வேண்டி சென்னை வருகிறார். உதவிக்கு நான்.

இப்படிக்கு
கிருஷ்ணமூர்த்தி

bmbcAdmin
26-10-2016, 11:21 AM
ஸ்ரீ:
ஒருவர் மரணிக்கும் நேரம் அந்த ஊரில் அந்த நேரம் எந்த மாதம் பிறந்துவிட்டதோ அந்த மாதத்தைதான் கணக்கில் கொள்ளவேண்டும்.
ச்ராத்த திதி ஒரு முறை தீர்மானம் ஆகிவிட்டால், எந்த ஊரில் ச்ராத்தம் செய்கிறோமோ, அந்த ஊரில் அந்த குறிப்பிட்ட ச்ராத்த திதி என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதோ அன்றைய தினம் வருஷ ஆப்திகம் அல்லது பிரதி ஆப்திகத்தை பண்ணவேண்டியதுதான்.

Dr.NVS
(Posted using mobile app)

Krish8350
26-10-2016, 05:40 PM
ந்மஸ்காரம்

தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி

இப்படிக்கு
கிருஷ்ணமூர்த்தி