Announcement

Collapse
No announcement yet.

spirituality & Onion

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • spirituality & Onion

    வெங்காயமும் ஆன்மீகமும்


    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை
    எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்! (வீடு, வாகனம்..இன்னும்பிற) இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல் கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.


    வெங்காயம்


    வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.


    வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.


    பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.


    ஆன்மீகத்திற்க்கும் வெங்காயத்திற்க்கும் உள்ள ஒற்றுமைகள்


    ஆன்மீகத்தில் திளைப்பவர்கள் ஆன்மீகத்தில் கரை கண்டதில்லை. கடவுளை காண வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்கிறவர்கள் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பதே உண்மை.


    வெங்காயத்தின் உள்ளே என்ன இருக்கிறது என ஆய்வு செய்பவர்களும் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஏனென்றால் உரிக்க உரிக்க தோல்தானே!


    ஜோதிடத்தில் ஆன்மீகத்திற்க்கும் வெங்காயத்திற்கும் ஸர்ப கிரகங்களே காரகமாம்.


    ஆன்மீகத்திற்கு காரக கிரகமாக கேதுவை கூறலாம். (சிலர் குருதான் என்பர்) கேது ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க செய்பவர். எனவே அவரை ஞான காரகன் என்று அழைக்கிறோம்.


    ஆன்மீகந்தை அளவாக உபயோகிக்கும்போது நன்மை அளிக்கிறது. குருவோடு சேர்ந்த கேது அதிகப்படியான ஆன்மீக நாட்டத்தையளித்து இல்லற வாழ்விற்க்கு தடையாகிறது.


    வெங்காயம் மற்றும் பூண்டின் காரகன் ராகுவாகும். (சிலர் செவ்வாய் என்றும் கூறுவதுண்டு). வெங்காயம் ஆன்மீகத்தை தடை செய்து லௌகீக வாழ்விற்க்கு வழிவகுக்கிறது. ராகுவும் சிற்றின்ப நாட்டத்தை அளித்து போக வாழ்விற்க்கு வழிவகுப்பதால் போக காரகன் என்கிறோம்.


    வெங்காயத்தை அளவாக பயன்படுத்தும்போது மருத்துவபொருளாகிறது. அதிகமாக வெங்காயம் பூண்டு மசாலாவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது சுக்கிரனுடன் சேர்ந்த ராகு அதிக காம மற்றும் போக வாழ்கைக்கு வழிவகுக்கிறது. ஏன் எனில் மசாலாவின் காரகன் சுக்கிரன் ஆகும்.


    ஆன்மீகநாட்டம் கொண்டவர் வெங்காயம் சாப்பிடமாட்டார்கள்.வெங்காயம் சாப்பிடுபவர்கள் ஆன்மீகத்திற்க்குள் செல்வதில்லை. இரண்டிற்க்கும் ஸர்ப கிரகங்கள்தான் காரக கிரகமென்றாலும் ஜாதக கட்டத்தில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிர்தான். அதுபோலத்தான் வெங்காயமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று நேரெதிர்தான். இரண்டையும் தவிர்கக முடியாது. அதே நேரம் இடம் பொருள் ஏவலறித்து இரண்டையும் உபயோகிப்பது சிறப்பாகும்
Working...
X