Announcement

Collapse
No announcement yet.

சங்கநாதம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சங்கநாதம்!

    மகாவிஷ்ணு என்றாலே சங்கு, சக்கரம்தான் நம் ஞாபகத்துக்கு வரும். மகாபாரதத்தில் கிருஷ்ணனும், பஞ்ச பாண்டவர்களும் தங்களுடைய சங்கை முழங்கி சங்கநாதம் செய்தார்கள். ஒவ்வொருவருடைய சங்கிற்கும் தனிப்பெயர் உண்டு.


    ஸ்ரீகிருஷ்ணன் -- பாஞ்சஜன்யம்.
    யுதிஷ்டிரன் ( தர்மர் ) -- அனந்தவிஜயம்.
    பீமன் -- பௌண்ற்றம்.
    அர்ஜுனன் -- தேவநந்தம்.
    நகுலன் -- சுகோஷம்.
    சகாதேவன் -- மணிபுஷ்பகம்.
    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முதன்முதலில் பீஷ்மர்தான் சங்கை ஊதினார். பிறகுதான் மற்றவர்கள் கோஷித்தனர். ஆக, கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர்.


    குத்துவிளக்கு!


    குத்துவிளக்கின் ஐந்து முகங்கள், 1. அன்பு, 2. மன உறுதி, 3. நிதானம், 4. சமயோசிதபுத்தி, 5. சகிப்புத்தன்மை ஆகிய ஐந்து குணங்களை பிரதிபலிக்கின்றது. அதனால்தான் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் குத்துவிளக்கு ஏற்றுகிறாள் மணமகள்.
    -- குமுதம் பக்தி ஸ்பெஷல். நவம்பர் 16-30, 2013.
Working...
X