Announcement

Collapse
No announcement yet.

கனிமங்கள் -- 4.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கனிமங்கள் -- 4.

    கனிமங்கள் -- 4.
    வேகமாய் சாகிறது பூமி
    "15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேகரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போர்வெல் போடவேண்டும் என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்த்ச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்துவதாகச் சொல்கின்றன. உண்மையில் சுத்திகரிக்கப்பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.
    நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் மேற்கண்ட அளவை விட மூன்று மடங்கு கூடுதலாக ரசாயன கனிமங்கள் இருக்கின்றன. இதனால் சுவாச நோய், ரத்த சோகை, பற்களில் கறை எலும்பு நோய்கள், சிறுநீரகக் கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது !" என்கிறார் பேராசிரியர் சரவண பாபு.
    -- ஆனந்த விகடன். 13-2-2013.
Working...
X