Announcement

Collapse
No announcement yet.

கார் தயாரிப்பில் 'கூகுள்'

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கார் தயாரிப்பில் 'கூகுள்'

    டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார் தயாரிக்கும் பணியை, 'கூகுள்' இணைய தள நிறுவனம் துவக்கியுள்ளது. மற்ற கார்களைப் போன்று காட்சியளித்தாலும், ஸ்டீயரிங் இல்லாமல், தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.


    ஸ்டீயரிங் மற்றும் ஆக்சிலேட்டர்கள் இல்லாததால், டிரைவர் தேவையில்லை. அதற்கு பதிலாக, ஆன் - ஆப் பட்டன்கள் இருக்கும். ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்தக் காரில், நாம் செல்ல வேண்டிய இலக்கை பதிவு செய்துவிட்டால், கூகுள் வரைபட உதவியுடன், தானியங்கி முறையில் செல்லும்.
    கார் செல்லும் சாலை வரைபடத்தில், நெடுஞ்சாலைகளிலுள்ள சிக்னல்கள் மற்றும் முன்னால் செல்லும் வாகங்களுக்கு இடையிலான தூரம் ஆகியவை தெரியும்.


    மின்சாரத்தில் இயங்கும் இந்த காரில் இரண்டு இருக்கைகளுடன், பொருட்களை வைப்பதற்குத் தேவையான இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. துவக்கத்தில், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் கேமரா, லேசர் மற்றும் ரேடார் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
    -- தினமலர் சென்னை ஞாயிறு 1-6-2014.
    Posted by க. சந்தானம்
Working...
X