Announcement

Collapse
No announcement yet.

பூச்சிகொல்லிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பூச்சிகொல்லிகள்

    பூச்சிகொல்லிகள்


    மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிகொல்லிகளூம் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிகொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிகொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிகொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிகொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது.
    -- ஆர்.குமரேசன். ( விகடன் பார்வை ).
    -- ஆனந்த விகடன். 12-11-2014.
    Posted by க. சந்தானம்
Working...
X