Announcement

Collapse
No announcement yet.

வஸந்த நவரத்ரி.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வஸந்த நவரத்ரி.

    28-03-2017 முதல் 4-04-2017 முடிய. ராஜ ராஜேஸ்வரி யாக அம்பாளை வழிபடலாம். ஸெளந்தர்ய லஹரி. அபிராமி அந்தாதி; மூக பஞ்சசதி; கட்கமாலா; தேவி பாகவதம் படிக்கலாம்.சுமங்களிகளுக்கு சாப்பாடு, 9 கஜம் புடவை; ரவிக்கை; கண்ணாடி வளையல்; சீப்பு; கண்ணாடி; மஞ்சள்; குங்குமம்; சந்தனம்; கண்மை; மருதானி பவுடர்; புஷ்பம்; தக்ஷிணை கொடுத்து பூஜித்து வழிபடலாம்;

    ஸ்ரீ ராமர்--ஜனனோத்ஸவம்; கர்போத்சவம் என 28-03-2017 முதல் 13-04-2017 வரை கொண்டாடலாம்; ராமாயணம்; சுந்த்ர காண்டம் பாராயணம்;செய்யலாம்; ராமர் பட்டாபிஷேகம் சிறிய படம் வாங்கி கோயிலுக்கு வருபவர்கள் எல்லோருக்கும் கொடுக்க சொல்லலாம் கோயில் அர்ச்சகர்/பட்டர் மூலமாக; கை விசிறி; குடை; பாத ரக்ஷை பானகம்; நீர் மோர்; தானமாக கொடுக்க்லாம்;

    ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என க்ருஷ்ணர் கூறியிருக்கிறார்; சித்திரை வைகாசியில் வெய்யல் அதிகம். தண்ணிர் பந்தல் அமைக்க வசதி இல்லாதவர்கள் ஒரு ப்லாஸ்டிக் குடம் தண்ணீர் தானமாக ஏழைகளுக்கு கொடுக்கலாம். . மொட்டை மாடியில் ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் பறவைகளுக்கு தாஹ சாந்திக்கு உதவும். இதுவும் புண்ணியமே;

    01-04-2017 அன்று சைத்ர சுக்ல பஞ்சமி. இன்று உச்சைஸ்வரஸ் என்னும் பறக்கும் தேவ குதிரை பாற்கடலை கடையும்போது வெளியான நாள்; குதிரை பூஜை செய்யலாம்; குதிரைக்கு கொள்ளு வாங்கி கொடுக்கலாம். லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்தோதிரங்கள் அர்ச்சனை; பூஜை செய்யலாம்;

    பாற் கடலில் மஹா லக்ஷ்மி தோன்றிய நாளும் இன்றே; ஸ்ரீ பஞ்சமி; லக்ஷமி பஞ்சமி என சொல்வார்கள்; மஹா விஷ்னுவிற்கும் லக்ஷ்மிக்கும் பூஜை வாஸனை யுள்ள மலர்களால் அர்ச்சனை 16 உபசார பூஜை செய்யலாம்; லக்ஷ்மி ஸ்தோத்ரங்கள் சொல்லலாமே. ஸ்ம்ருதி கெளஸ்துபம் -92 இது பற்றி கூறுகிறது;

    04-04- 2017 அசோகாஷ்டமி; இன்று மருதானி மரக்கண்று வாங்கி நடலாம்; மருதாணி மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். லிங்க பு ராணம் இன்று 7 மருதாணி இலைகள் சாப்பிட வேண்டும் என்கிறது; த்வாம் அசோக நரா அபீஷ்ட மதுமாஸ சமுத்பவ பிபாமி சோக ஸந்தப்தோ மாம சோகம் ஸதா குரு; என்று சொல்லி சாப்பிடவும்; மருதாணி மரத்திற்கும் அசோக மரம் எனப்பெயருண்டு; ஸம்ஸ்க்ருதத்தில்; ராவணனால் சிறையில் துன்பபட்ட நாட்களில் இந்த மருதாணி மரமே

    சீதைக்கு ஆறுதல் கூறி வந்தது தனது கிளைகளின் அசைவால்; சீதை இந்த மரத்திற்கு கொடுத்த வரம்; உன்னை பூஜிப்பவர்க்கு; தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு உன் இலைகளை சாப்பிடுபவர்களுக்கு. கையில் பூசி கொள்பவர்ககு துன்பம் வராது என்று. கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது.

    சைத்ர மாத சுக்ல பக்ஷ அஷ்டமி அன்று தான் அம்பாள் பவானி என்ற திரு நாமத்துடன் அவதரித்தாள்; ஸம்ஸார வனத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதால் பவானி என அழைக்க படுகிறாள்; பவானி ஸ்தோத்ரம்; அஷ்டோத்ரம் 16 உபசார பூஜைகள் செய்யலாம்;
Working...
X