Announcement

Collapse
No announcement yet.

CONTD__kasi-gaya yathra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • CONTD__kasi-gaya yathra

    Kasigaya yathrai


    போதுமானதர்பை அங்கு கிடைக்காது.ஆதலால் 10கட்டு தர்பைஎடுத்துச்செல்லவும்.புரச இலை-10எடுத்து கொள்ளவும்.காசிகயா விற்கு செல்லும் போது.
    தோலினால்ஆன பொருட்கள் வேண்டாம்,ரப்பர் அல்லதுப்லாஸ்டிக் பெல்ட் இடுப்புக்குதேவை.. ரப்பர் அல்லதுபி.வி.சிமிதியடி வாங்கி காலில்போட்டுகொண்டு நடந்து பழகிகொள்ளுங்கள் .விலைஅதிகமில்லாமல் வாங்கிபோட்டுக்கொள்ளவேண்டும்.


    ரயிலில்திருட ர் அதிகம் இருக்கும்.ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும்.வியாபாரிகள்மட்டமான பொருட்களை உங்கள்தலையில் கட்ட முயற்சிப்பார்கள்..எச்சரிக்கை தேவை.
    ரயிலிலும்,போய் தங்கும்இடங்களிலும் கொசுவத்தி ;கொசுவிரட்டி,ரூம் ப்ரஷ்னர்ஸ்ப்ரேஸ்.தேவை படும்.எடுத்து வரவும்.


    உங்கள்செல்போனில் உங்கள் லேன்ட்லைன் டெலெபோன் வரும் படிசெய்து கொள்ளவும்(கால் டைவர்சன்)..செல் போன் சார்ஜர்எடுத்து வரவும்.
    உங்கள்வீட்டிற்கு செக்யூரிட்டிஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.


    சென்னைபக்கத்திலிருந்து ரயிலில்வருவோர் ராமேசுவரத்திற்குகாலை 4மணி சுமாருக்குவந்தடையும் ரயிலில் ரிசர்வ்செய்து கொண்டு வந்தால் உங்களைவாத்யார் ரயில் நிலையத்திலிருந்துஅவர் வீட்டிற்கு அழைத்துவருவார்.


    ,தில ஹோமம் செய்யவேண்டியவர்கள் அன்று காலையில்ஆரம்பித்து தில ஹோமம் முடிந்தபிறகு ஜீப்பில் தனுஷ்கோடிசென்று திரும்ப வரலாம்.
    .

    மற்றவர்கள்அன்று ஜீப்பில் தனுஷ்கோடிசென்று சங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டு வேணி மாதவர் பூஜைசெய்துவிட்டு மணல் எடுத்துகொண்டுவாத்யார் வீட்டுக்கு வந்துதீர்த்த சிராத்தம் செய்யலாம்.
    மாலைராமநாத ஸ்வாமி கோவிலுக்குசெல்லலாம்.


    திலஹோமம் செய்தவர்கள் மறுநாள்தீர்த்த சிராத்தம் செய்துவிடலாம்.


    மறுநாள் அக்னி தீர்த்தத்திலும்கோவிலுக்குள் இருக்கும் 22நாழி கிணறு களிலும்காலையில் குளித்துவிட்டு மாலையில் பக்கத்திலுள்ள சீதாதீர்த்தம்;ராமர் தீர்த்தம்,லக்ஷமண தீர்த்தம்;கந்த மாதன பர்வதம்கோதண்ட


    ராமர்கோவில்;நம்பு நாயகிஅம்மன் கோயில்;உஜ்ஜயினிமாகாளியம்மன் கோவில்;பாம்பன் ரயில்பாலம்,பாம்பன் சாலைபாலம் பார்க்கலாம்.


    தீர்த்தசிராத்தம் ஒரு முறை செய்துவிட்டு பிறகு ஒரு வருடத்திற்குள்மறுபடியும் எத்தனை முறைராமேஸ்வரம் வந்தாலும் மறுபடியும்தீர்த்த சிராத்தம் செய்யவேண்டாம்..ஒரு வருடத்திற்குமேல் வந்தால் மறுபடியும்தீர்த்த சிராத்தம் செய்யஅநுமதி உண்டு.
    .

    சமுத்ரஸ்நானம் கோவில் கிணறுகளில்குளிப்பது ஒவ்வொரு முறை வரும்போதும் செய்யலாம்.
    ராமேஸ்வரம்ராமநாத சுவாமி கோவில் காலைஐந்து மணி முதல் ஒரு மணிவரையிலும் மாலை மூன்று மணிமுதல் இரவு ஒன்பது மணி வரையிலும்திறந்திருக்கும்.


    ராமேசுவரம்வந்து அடைந்தவுடன் பித்ருகள்ஆவலாக உணவுக்கு காத்திருப்பார்கள்.ஆதலால் முதல்நாள் தீர்த்த சிராத்தம் செய்துவிட்டு மறு நாள் தில ஹோமம்செய்யலாம்..தில ஹோமமும்பித்ருக்களூக்கு தான்செய்கிறோம்.


    ராமேஸ்வரம்ராமநாத ஸ்வாமி கோவிலில்தினந்தோறும் காலை ஐந்துமணிக்கு ஸ்படிக லிங்கத்திற்குஅபிஷேகம் செய்கிறார்கள்.காலை 4மணிக்கு எழுந்துகுளித்துவிட்டு கோவிலுக்குசென்று ஸ்படிக லிங்க அபிஷேகம்பார்க்கலாம்.


    மடிசார்புடவையுடனும் பஞ்ச கச்சவேஷ்டியுடன் தான் எல்லாம்செய்ய வேண்டும்..வீட்டில்குளித்துவிட்டு ஸங்கல்பஸ்நானம் செய்யுமிடம் சென்றுஸங்கல்பம் செய்து கொண்டுஸ்நானம் செய்ய வேண்டும்.


    எந்ததீர்த்த கரையிலும் சுமங்கலிகளுக்குரவிக்கை துண்டு வெற்றிலைபாக்கு பழம்,புஷ்பம்,தக்ஷிணை மஞ்சள்பொடி,குங்குமம்;சீப்பு,கண்ணாடி,கண்மைமருதாணி பவுடர்.கண்ணாடி வளயல்கொடுக்க


    வேண்டும். ஆதலால் தனுஷ்கோடியிலும்,ராமேஸ்வரத்திலும்சுமங்கலிகளுக்கு கொடுக்கஇவைகளை வாங்கி எடுத்துசெல்லவும்.
    ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்தில்உள்ள 22நாழி கிணறுபெயர்கள்,


    அக்னிதீர்த்தம் என்பது சமுத்ரம்-காஞ்சிசங்கர மடம் பக்கத்தில் உள்ளதுஇங்கு குளிக்கு முன்னர்தலைக்கு ஒரு வாழப்ழம் கடலில்போட்டு விட்டு ஸ்நானம்செய்துவிட்டு வேறு காய்ந்தவஸ்த்ரம் மாற்றிக்கொண்டு


    கோவிலுக்குள்கிணறுகளில் குளிக்க க்யூவரிசையில் நின்று உள்ளே செல்லவேண்டியிருக்கிறது..
    கோவிலுக்குள்-மஹா லக்ஷமிதீர்த்தம் இதில் குளிப்பதால்இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்


    சாவித்ரீதீர்த்தம் இதில் குளிப்பதால்சாப நிவர்த்தி
    காயத்ரீதீர்த்தம்-:பிறர் நம்மீதுசெய்திருக்கும் தீமைகள்போகும்.தீயசக்திகள் விலகும்.


    ஸரஸ்வதிதீர்த்தம்:-தோல்வியாதி நீங்கும்.கல்வியில் நல்லதேர்ச்சி;பேச்சு நன்றாக வரும்.
    சக்ரதீர்த்தம்-நோய் விலகும்;நோய் வராமல்தடுக்கும்.


    ஸேதுமாதவ தீர்த்தம்:-பெருமாள்;லக்ஷிமிகடாக்ஷம் உண்டாகும்.
    நளதீர்த்தம்:-நவகிரஹதோஷம் போகும்,


    நீலதீர்த்தம்;-ஸகலயாகங்கள் செய்த புண்ணியம்கிடைக்கும்;ராமருக்கு பாலம்அமைக்க உதவியாக இருந்தவர்.
    கவயதீர்த்தம்:-வேண்டிய வரம்அருளும்.


    கவாக்ஷதீர்த்தம்:-
    கந்தமாதன தீர்த்தம்:-
    ப்ருஹ்மஹத்திசாப விமோசன தீர்த்தம்;


    சூர்யதீர்த்தம்;-பிரகாசமான அறிவு கிடைக்கும்.காமன்சென்ஸ் அதிகமாகும்.
    சந்திரதீர்த்தம்:-மன நோய்கள்நீங்கும்.


    சாத்யம்ருததீர்த்தம்>-
    சிவதீர்த்தம்:-கால் நடைகளுக்குசெய்த ஹிம்சை;உயிர்வதை செய்தபாவம் போகும்.
    சர்வதீர்த்தம்


    சங்குதீர்த்தம்;உயிர்கொலை செய்த பாவம் போகும்-.எறும்பு;கொசு.
    கயாதீர்த்தம் கயா சிராத்தம்செய்த பலன் கிடைக்கும்;


    கங்காதீர்த்தம்
    யமுனாதீர்த்தம்
    கோடிதீர்த்தம்:-ஜாதகத்தில்உள்ள தோஷங்கள் நீங்கும்.


    ராமநாத ஸ்வாமி ஸன்னதிக்கு பின்புறம் இரண்டாவது மூன்றாவதுப்ரகாரங்களுக்கு இடையே ஸேதுமாதவர் சந்நதி உள்ளது.
Working...
X