PDA

View Full Version : CONTD__kasi-gaya yathrakgopalan37
07-04-2017, 07:53 PM
வெள்ளைசலவை கல்லால் ஆனவர் ஆதலால்ஸ்வேத மாதவர் என்று அழைக்கபடுகிறார்.


.தனுஷ்கோடியில்சங்கல்பம் செய்து கொண்டுமுப்பதாறு முறை ஸ்நானம் செய்யவேண்டும்.கணவனும் மனைவியும்கைகளை கோர்த்து கொண்டு ஒருதடவைக்கு ஆறு ஸ்நானம் வீதம்6தடவை செய்யவேண்டும்.


அல்லதுமுதலில் பிந்து மாதவரை பூஜித்துவிட்டு கடலுக்கு சென்றுதம்பதிகள் கைகளை கோர்த்துகொண்டு 12முறை ஸ்நானம்செய்துவிட்டு கரைக்கு வந்துஸேது மாதவரை பூஜித்து திரும்பகடலுக்கு போய் 12முறை ஸ்நானம்


செய்துவிட்டு கரைக்கு வந்து வேணிமாதவரை பூஜித்து விட்டுதிரும்ப கடலுக்கு சென்று 12முறை ஸ்நானம்செய்து விட்டு கரைக்கு வந்துவேணி மாதவர் மணலை பித்தளைசம்படத்தில் எடுத்து கொண்டு


ஸேதுமாதவரை துணி பையில் எடுத்துக்கொண்டுவந்து ஸேது மாதவர் உள்ள இடத்தில்மணலை போட்டு விடலாம்..அல்லது
காலுக்குஅடியில் உள்ள மணல் இரு கைகளிலும்எடுத்து வந்து கரையில் இந்தமணலை மூன்றாக பிரித்து 1ஸேது மாதவர்.2, பிந்து மாதவர்-3.வேணி மாதவர் என பூஜிக்க வேண்டும்.பிறகு பிந்துமாதவரை


கடலில்அங்கேயே கரைத்து விடலாம்.வேணி மாதவரை ஒருபித்தளை (ஈயம்பூசாதது)அல்லது செம்பு(தாமிரம் )டப்பாவில் எடுத்துவைத்து கொண்டு அதை வீட்டிற்குகொண்டு வந்து வீட்டில் அலஹாபாத்செல்லும்


வரைபூஜிக்க வேண்டும்..ப்லாஸ்டிக்டப்பா விலோ துணி பையிலோ ;எவர் சில்வர்டப்பாவிலோ இந்த மணலை எடுத்துகொண்டு வர வேண்டாம்.
ப்ரயாகையில்இந்த மணலை பூஜித்து கங்கையில்கரைக்க வேண்டும்


ஸேதுமாதவர் ஆக பூஜித்த மணலை மேலேசொன்ன ஸேது மாதவர் ஸந்நிதிக்குசென்று பூஜித்து அங்கேயேமணலை விட்டு விட வேண்டும்.
ப்ரயாகையில்இந்த டப்பா அங்கு பூஜை செய்யும்பண்டா எடுத்து கொள்கிறார்.


ராமேஸ்வரம்சென்று வர ரயில் டிக்கட்ரிசர்வ் செய்து விட்டு கிளம்பும்முன் குலதெய்வத்திற்கும்அபிஷேகம் வஸ்த்ரம்,அர்ச்சனை செய்துஅனுமதி பெற்று க்கொண்டு யாத்ராதானம் மந்திரங்கள் சொல்லியாத்ரா தானம்


செய்துவிட்டு சாஷ்டாங்க நமஸ்காரம்செய்து விட்டு செக் லிஸ்ட்டில்
உள்ளபடி விட்டு போகாமல் தினசரிசாப்பிட வேண்டிய மருந்துகள் பேனா ,பேப்பர்.ஒன்பதுஐந்து வேஷ்டிகள்,9 முழ புடவைகள்;உள்ளாடைகள்துடைத்துகொள்ள துண்டுகள் ஈர உடைகள் வைக்க பெரிய ப்லாஸ்டிக்


கவர்கள்;தங்கி இருக்கும்வீட்டில் உலர்த்த கயிறுக்லிப்;டூத் பேஸ்ட்;டூத் ப்ரஷ்.துவைக்கும்சோப்பு,உடலுக்கு தேய்த்துகுளிக்க சோப்பு;தலைக்கு தடவிகொள்ள தேங்காய் எண்ணய்;வீபூதி சந்தனம்.குங்குமம் மஞ்சள்


பொடி;முக கண்ணாடி;;;கத்தி;கத்திரிக்கோல்;;செல்லும்காலத்திற்கு தகுந்த மற்றஉடைகள்;; பேண்ட்;சட்டை;இரவு ஆடை;ப்ரயான ஆடை;பழைய
துணிகள்;; காற்று தலகானி;போர்வை ;டால்கம் பவுடர்;;உட்கார்ந்துகொள்ள இரு ப்லாஸ்டிக் பைகள்.இன்னும் பிற.


ரயிலில்செல்லும்போது ரயிலில் கொடுக்கும்ஆகாரம் வயிற்றுக்குஒத்து கொள்ளாமல் பேதி ஆகலாம்.வற்று வலி தலைவலி சளி;இருமல் போன்றவைகள்வரலாம்.ஆதலால் இதற்குறியமருந்துகளும் எடுத்துகொள்ளவும்...முன் எச்சரிக்கையாக.


ப்ரயாணத்தின்போது செல்லும் வழியில் உங்கள்உறவினர்கள்;நண்பர்கள்இருந்தால் ஆகாரத்திற்காகஅவர்களிடம் முன் கூட்டியே தெரிவித்து உதவிகள் பெறலாம்.


ப்ரயாணத்தின்போது உங்கள் வீட்டு ஆகாரமேகையில் எடுத்து செல்வதுநல்லது.அதற்கு தேவையானஅட்டை ப்லேட்டுகள்;அட்டை கப்புகள்;தண்ணீர் பாட்டில்கள்;வாங்கி எடுத்துசெல்லலாம்.


காசியிலிருந்துதிரும்ப வரும்போது தேவையான ஆகாரங்கள் தயார் செய்துஉங்களிடம் க்ஷேத்திரத்திலுள்ளவாத்யார் கொடுத்து அனுப்புகிறார்..
ரயிலில்வேறு ஒன்றும் வாங்கி சாப்பிடவேண்டாம்.காபி மாத்திரம்வாங்கி சாப்பிடுங்கள்..


பித்ருதர்பணம் செய்ய வேண்டிய உற்றார்உறவினர் பெயர்;
கோத்திரம்,உறவு முறை எழுதியபெயரையும் சங்கல்பத்தின்போது சொல்ல வேண்டிய கோத்திரம்,, நக்ஷத்திரம்,ராசிசர்மா,பெயர் உறவு முறைஎழுதிய பேப்பரையும்,எடுத்து செல்லவேண்டும்.


கோத்திரம்
கர்த்தாவின்நக்ஷத்திரம்.ராசி சர்மா,கர்த்தா எனவும்.நக்ஷத்திரம்ராசி;பெயர்


கர்தாவின்மனைவி என்றும்.பின் நக்ஷத்திரம்ராசி.சர்மா மகன்.பிறகு உறவு என்றஇடங்களில் மருமகள்,; பேரன்;பேத்தி எனவும்.பின்னர்
கர்த்தாவின்மாப்பிளையின் கோத்திரம்.எழுதி நக்ஷத்திரம்ராசிபெயர்எழுதி உறவு என்னும் இடத்தில்மாப்பிள்ளை மகள்,தெளஹித்ரன்.தெளஹித்ரி எனவும்முன்பே எழுதி கொண்டு போய்ராமேஸ்வரம்,ப்ரயாகை,காசி;,கயா


க்ஷேத்திரங்களில்வாத்யாரிடம் கொடுத்து விட்டால் அதை பார்த்து அவர் சங்கல்பம்செய்யவும் அந்தந்த நக்ஷத்ரங்களுக்குஹோமம் செய்யவும் மிகவும்செளகரியமாக இருக்கும்.


பிண்டங்கள்வைத்து மந்திரம் சொல்லும்போது இறந்தவர்களின் கோத்திரம்பெயர் உறவு முறை ஒன்று க்கூடவிட்டு போகாமல் இருப்பதற்காகஇப்போதே வீட்டில் யோஜித்துதயார் செய்து கொண்டு க்ஷேத்திரங்களில் வாத்யாரிடம்கொடுக்க வேண்டும்.
தரிசிக்கவேண்டிய ராமநாத புரத்தைசுற்றியுள்ள சில தலங்கள்..


தற்காலத்தில் ஆவுடையார் கோயில்என அழைக்க படுகிறது.திருபுன வாயில்.இது அறந்தாங்கியிலிருந்து14கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது.
திருபெருந்துறைஎன்பதும் இது தான்.சுந்தரர்-மாணிக்க வசகர்பாடல் பெற்ற தலம்.மிக பெறிய நந்திமிகப்பெறிய ஆவுடையார் இந்ததலத்தில் பிரசித்தம்.


14லிங்கங்கள்ப்ரதிஷ்டையில் உள்ளது.ராமநாத புரம்வடக்கு எல்லயில் தொண்டி என்றஊர்.. இதற்கு வடக்கேஉள்ளது தீர்தாண்ட தனமும்திருபுன வாயிலும்.
திருபுனவாயிலி லிருந்து தென் கிழக்கே5கிலோ மீட்டர் தூரத்தில் தீர்தாண்டம். என்ற ஊர்.இங்கு சிவன் ராமரின் தாஹத்தை தீர்த்தார்.தீர்தாண்ட தனம்என்பது மருவி தீர்தான்டம்ஆயிற்று..


உப்பூர்:-தேவி பட்டிணத்திற்குவடக்கே உள்ள தலம்.. ராமநாதபுரம்தொண்டிகடர்கறை சாலையில் தேவிபட்டிணத்திற்கு வடக்கே உள்ளது.ஸ்ரீ ராமர்ஆவுடையார் கோயில் எனப்படும்திருபுன வாயில் சிவனிடம்அருளாசி


பெற்று இலங்கயை நோக்கி வந்த போதுஇந்த உப்பூர் பிள்ளயாரைவழிபட்டு பிறகு தேவிபட்டினம்எனும் நவ பாஷானம் வந்து இங்குநவகிரஹங்கள் ஒன்பதும் ப்ரதிஷ்டைசெய்து பூஜித்துவிட்டுதிருபுல்லாணி சென்றார்.


தேவிபட்டிணத்தில் ஒரு பிள்ளயார்கோயிலும்,அம்பாள் கோயிலும்ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது,காலையில்நவகிரஹங்களுக்கு அர்ச்சனைசெய்யலாம்.எல்லா நவகிரஹஅர்சனை முடிந்த பிறகு ஒருதேங்காய்


உடைத்துநைவேத்யம் .இங்கும்ஸ்நானம் செய்யலாம்.படிகட்டு வசதிகள்உள்ளன.நவகிரஹங்களைவலம் வருவதற்கு செளகரியமாகப்ளாட்பாரம் உள்ளது.
இதுஉப்பூருக்கு தெற்கே 15கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது;ராமநாதபுரத்திலிருந்துவடக்கே 15கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது.
தர்பசயனம்=திருபுல்லாணி


ராமநாதபுரத்திற்கு தெற்கே கீழக்கரைசெல்லும் சாலையில் 10கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது.திருபுல்லாணிஎன்னும் தர்ப சயனம்.
இங்குஸ்ரீ ராமர் சமுத்ர ராஜனைகுறித்து தர்பாஸனத்தில்தவமிருந்தார்..மூலவர் ஆதிஜகன்நாத பெருமாள்.. இந்த கோவிலின்எதிரே உள்ள சக்கிர தீர்த்தகுளத்தில் நீராடினால் தீராநோய்கள் தீரும்..கோவில் மரம் அரசமரம்.


இந்தஅரச மரம் வித்தியாசமாக உள்ளது.மரத்தடியில்நாகப்ரதிஷ்டை உள்ளது.நாகத்தின் மேல்நடனமாடும் சந்தான கோபாலக்ருஷ்ணன்;பட்டா கத்தியுடன்படுத்து இருக்கும் தர்பாசயனராமர்.உள்ளது.
ஆதிஸேதுக்கரை:-


திருபுல்லாணியிலிருந்துதென் கிழக்கே 4கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது.. இங்கிருந்துதான்ஹனுமார் இலங்கைக்கு செல்லஆயத்தமானார்.பெரிய ஹனுமார்கோயில் இங்கு கடலை நோக்கிஉள்ளது.
.
இங்குதான் அக்னி அஸ்த்ரம் ப்ரயோகித்துகடலை வற்ற தயாரானார் ஸ்ரீராமர்.இங்கிருந்துதான் இலங்கைக்கு பாலம்அமைத்ததாக இங்குள்ளவர்கூறுகின்றனர்..தனுஷ்கோடியிலிருந்துஅல்ல என்றும் கூறுவர்.


அருகிலுள்ளசேஷகிரி ராயர் சத்திரத்தில் உள்ள ஒரு புனித கிணற்றில்நீராடி ஆதி ஸேது கரையில்ஸங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டுதிருபுல்லாணி சென்று ஒருவருக்கு அன்னதானம் செய்வதுகயையில் ஒரு


லக்ஷம்பேருக்கோ;காசியில் இரண்டுலக்ஷம் பேருக்கோ .ப்ரயாகையில்ஏழு லக்ஷம் பேருக்கோ அன்னதானம்செய்ததிற்கு சமமாகும் என்றுஸ்ரீ ராமர் சீதையினிடம்சொன்னதாக சொல்லபடுகிறது.


உத்தரகோசமங்கை:-உத்தரம் என்றால்உபதேசம்;கோசம் என்றால்ரகசியம் நங்கை=உமாதேவி.பார்வதிக்கு பரமசிவன் வேத ஆகம ரகசியங்களைஉபதேசித்த இடம்.


ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே 15கிலோமீட்டர்தொலைவில் உள்ள சிவத்தலம்.. . திருபுல்லாணியிலிருந்தும்10கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது.
சாபத்தால்மீனவ பெண்ணாக இருந்த உமாதேவியை மீண்டும் மணந்து ஞானஉபதேசம் செய்த தலம்.இந்த ஆலயத்தில்மிக உயரமான மரகத நடராஜ மூர்த்திஉள்ளார்.


இங்குஒரு ஸ்படிக லிங்கத்திற்கும்மரகத லிங்கத்திற்கும் தினம்அன்னாபிஷேகம் நடக்கிறது..