Announcement

Collapse
No announcement yet.

CONTD__kasi-gaya yathra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • CONTD__kasi-gaya yathra

    தென்கோடியில் உள்ள உயர்ந்தக்ஷேத்ரம்;தீர்த்தம்;ராவணனை ஜயித்தபின் தனுஸ் நுனியால் ஸேதுவைஉடைத்தார்.தனுஷ் கோடிஎனப்பெயர்.


    இதுரத்நாகரம் மஹோததி என்ற இருகடல் சேருமிடம்..இங்கு 36ஸ்நானம் செய்துமணல் எடுத்து கொண்டு ப்ரயாகையில்போட்டுவிட்டு அங்கிருந்துகங்கா ஜலம் எடுத்து வந்துராமேஸ்வரத்திலுள்ள ராமநாதருக்குஅபிஷேகம் செய்ய வேண்டும்.
    ராமநாதபுரத்திலிருந்து11கிலோமீட்டரில்உள்ளது.தேவி பட்டிணம்.நவபாஷாணம் என்றும் அழைக்கபடுகிறது.இங்கு ராயர்சத்திரம் உள்ளது.இங்கு முதலில்சக்ர

    தீர்த்தம் என்னும் புண்யதீர்த்தத்தில் சங்கல்பம்ஸ்நானம் செய்து அருகிலுள்ளஸமுத்திரத்திலும் ஸ்நானம்செய்ய வேண்டும்
    .
    ஸமுத்திரத்தில்ஸ்நானம் செய்யும் போது 7சிறிய கற்கள்அல்லது ஒன்று அல்லது மணலையாவதுஎடுத்து “பிப்பலாத ஸமுத்பன்னேக்ருத்யே லோக பயங்கரி ஸைகதம்தே ப்ரதாஸ்யாமி ஆஹரார்த்தம்ப்ரகல்பிதம்””


    என்றமந்திரத்தை கூறி ஜலத்தில்போட வேண்டும்..சக்கிரத்திற்குகாலவ முநிவரால் ஏற்பட்ட சாபம்நீங்கிய இடம் இது.ராமேஸ்வரத்தில்உள்ள லக்ஷமண தீர்த்தத்தில்வபனம் செய்துகொள்ள வேண்டுமாதலால்இங்கு வபனம் தேவையில்லை.
    தீர்த்தசிராத்தத்தை இங்கு ஹிரண்யரூபமாக செய்யலாம்.


    அடுத்ததுராமேஸ்வரம் லக்ஷ்மண தீர்த்தத்தில்வபனம் செய்துகொண்டு ஸ்நானம்செய்து அருகிலுள்ள ஸ்ரீ ராமர்ஆலயத்தை தரிசனம் செய்து விட்டுதிரும்ப வேண்டும்.
    சுக்ரீவதீர்த்தம்;ஜாம்பவதீ தீர்த்தம்அங்கத தீர்த்தம் இவைகளில்ஸ்நானம் செய்து 5கிலோமீட்டருக்குள்உள்ள கந்த மாதன பர்வதத்தில்உள்ள ஸ்ரீ ராமர் பாதத்தைதரிசனம் செய்ய வேண்டும்.


    கந்தமாதன பார்வதத்தை ப்ரதக்ஷிணம்வரும் போது தர்ம தீர்த்தம்முதல் பற்பல தீர்த்தங்கள்இருந்தன இப்போது இருக்கிறதாஎன்று விஜாரிக்க வேண்டும்.
    ஸ்ரீராமநாத ஸ்வாமி கோவிலுக்குபக்கத்தில் அக்னி தீர்த்தத்தில்(ஸமுத்ரம்) ஸ்நானம் செய்துவிட்டு ஒரு ஹிரண்ய சிராத்தம்செய்ய வேண்டும்.
    அந்தகாலத்தில் மொத்தம் 64புண்ய தீர்த்தங்கள்இருந்தன..


    ராமஸேதுவை தரிசித்த மாத்திரத்தில்ப்ருஹ்ம ஹத்தி பாபம் அகலும்என சாஸ்திரம் கூறுகிறது.
    ஸமஸ்தபாபங்களும் அகன்றால் தான்நாம் பரமனின் திருவடியை அடையமுடியும்.


    ஸேதுமாதவர் வேணி மாதவர் பிந்துமாதவர் என்ற பெயர்களுடன் மஹாவிஷ்ணு ராமேஸ்வரத்திலும்,அலஹாபாத்திலும்காசியிலும் அமர்ந்திருக்
    கிறார்
    மாதவன்என்றால் லக்ஷ்மீபதி என்றுபொருள்.விஷ்ணுவிற்குமூலஸ்தானம் கடல்.. இந்த மூலஸ்தானத்திலிருந்துபல இடங்களில் மூர்த்தியுடன்எழுந்து


    அருளிஇருக்கிறார்.இதிலொன்று அலஹாபாத்பக்கத்தில் உள்ள ப்ரயாகை .
    மூலஸ்தானத்திலிருந்து தன்னைஎடுத்து வந்து வேணி மாதவராககருதி பூஜை:செய்து திரிவேணியில்போடட்டும் .திரிவேணிபூஜை செய்வோர் ஸேது மணலாகவந்த வேணி மாதவருக்கும் பூஜைசெய்ததாகும்.


    காசிக்குசிவ ராஜதானி என்ற பெயர் உண்டுசிவன் கங்கையை தன் தலையில்எப்போதும் வைத்துள்ளார்.. காசி லிங்கமேராமேஸ்வரத்தில் உள்ளது.. ப்ரயாகையில்தான் தனி சுத்த கங்கை.இங்குருந்துதான் சுத்த கங்கை எடுத்து வரவேன்டும்.


    காசியில்கங்கயுடன் வாரணா;அஸி;யமுனா முதலியபலரும் சேர்ந்து விட்டனர்.
    ஸ்ருஷ்டியில்பரமனிடமிருந்து ஆகாசம்;ஆகாசத்தினிடமிருந்துவாயு;வாயுவிலிருந்துஅக்னி;அக்னியிலிருந்துஜலம்,ஜலத்திலிருந்துபூமி என்ற முறையில் உலகம்உண்டாயிற்று.மண்ணால் ஆகியஉன் உடலை காசியில்


    விடு.ஈசனிடம்சேர்ந்து மறுபிறவி இல்லாமல்இருப்பாய்,என்று காண்பிக்கிறது


    இல்லறபற்று இருந்தால் அங்கிருந்துஸ்ருஷ்டி க்ரமத்தை அநுசரித்துகங்கையை எடுத்து வந்துராமநாதனுக்கு அபிஷேகம் செய்.; நல்ல ஜன்மம்
    எடுப்பாய்என்பதே இதன் ரஹஸ்ய தத்வம்;ஹரியும் ஹரனும்ஒன்றே என்பதையும் கற்பிக்கின்றது...
Working...
X