Announcement

Collapse
No announcement yet.

மனித மூளை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனித மூளை!

    மனித மூளை!
    உலகிலேயே, ஏன் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களிலேயே மனித மூளைதான் மிகவும் புத்திக்கூர்மை கொண்டது. மனிதர்களின் வாழ்க்கையில் 2 வயதில்தான் மூளை செல்கள் அதிகபட்சமாக இருக்கின்றன. அதேநேரம், மனித மூளை முதிர்ச்சி அடைய 20 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
    கருவறையில் வளரும் குழந்தையின் மூளையில் ஒவ்வொரு விநாடியும் 8,000 புதிய மூளைச் செல்கள் வளர்கின்றன. பிறந்த சில மணி நேரத்திலேயே தாயின் முகத்தைக் கண்டுணர்ந்துகொள்ளும் திறன், பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டு.
    நமது மூளை எல்லா நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. ஒரு மனித மூளைக்குள் ஒரு நாளில் சராசரியாக 70,000 எண்ணங்கள் ஓடுகின்றன. உண்மையில் தூங்கும்போதுதான் மூளை அதிகமாக வேலை செய்கிறதாம். கனவும் அதன் ஒரு பகுதிதான்.
    மனித மூளையில் 60 சதவீதம் கொழுப்பு இருக்கிறது என்றாலும், அது கடுமையாக வேலை செய்கிறது. மூளை 25 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் ஒரு பல்பையே எரிக்க முடியும்.
    மனித மூளை என்ற உறுப்புக்கு நேரடியாக வலியை அறியும் உணர்வு இல்லை. அதனால், ஒரு மனிதர் விழித்திருக்கும்போதே அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
    மூளையால் 50,000 மாறுபட்ட மணங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியும்.
    -- தொகுப்பு : ஆதி. ( நம்பமுடிகிறதா? ). மாயாபஜார்.
    -- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர் 3, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X