Announcement

Collapse
No announcement yet.

VENNAI KAAPPU AND SANTHANA KAAPPU

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VENNAI KAAPPU AND SANTHANA KAAPPU

    ஸ்வாமின்

    ஹனுமாருக்கு வெண்ணை காப்பு சாத்தபடுகிறதே ? இதற்கு புராணச்சான்று இருக்கிறதா?

    சில கோவில்களில் ஜ்வாலா நரசிம்ஹனுக்கு சந்தன காப்பு சாத்துகிறார்கள் இதன் தாத்பர்யம்
    என்ன என்று தாங்கள் தயவு செய்து விளக்கவும் .
    அடியேன் தாசன்
    ராமபத்ரன்

  • #2
    Re: VENNAI KAAPPU AND SANTHANA KAAPPU

    ஶ்ரீ:
    டியர் ஸ்வாமின்,
    என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், மதிப்பிற்கும் மிக்க நன்றி!
    11 வயது வரை அடியேனுடைய தந்தையுடன் கோயில்களில் பூஜைக்கு சென்று வந்துள்ளேன்.
    அந்த வருடத்தில் அடியேனுடைய தந்தையார் காலமானதால், குடும்பம் சிதைந்து போனது.
    கோயில்கள் மற்றும் அனைத்து ஆன்மீகத் தொடர்புகளும் விட்டுப்போனது.
    அதன்பின் 20 வருடங்களுக்குப் பின் மீண்டும், ஆன்மீகம், வைதீகம் பற்றித்
    தெரிந்துகொள்ளவேண்டும் என்ற சுய ஆர்வத்தினால், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி
    வைதீகத்தைக் கற்று வந்தேன், லௌகீகத்தைக் காட்டிலும், வைதீகத்தில், மதிப்பும்,
    அடியேனிடம் அதிக எதிர்பார்ப்பும் காணப்பட்டதால், லௌகீக வ்ருத்தியை விட்டுவிட்டு,
    வைதீகத்திற்கு வந்தேன்.
    அர்த்தம் தெரியாமல், மந்திரத்தை மட்டும் மனப்பாடம் செய்து, ப்ரயோகங்களைப் பண்ணிவைக்கும்,
    பெரும்பான்மை வைதீகர்களுடன் ஒத்துப்போக இயலாமையால், அர்த்தங்கைத் தெரிந்துகொள்ளவேண்டும்
    என்பதற்காக, மிகுந்த ப்ரயாசைப்பட்டேன்.
    அடியேன் படித்த, பல்கலைக் கழகப் பாடங்களில், ஆகமம் என்பது சிறிதளவு இருந்தது,
    ஆனால், இன்றைய கோயில் வழிபாடுகள், அவற்றின் பிண்ணணி, அவற்றுக்கான புராண சான்றுகள் பற்றி,
    அடியேன் இதுவரை ஆராய்ச்சி செய்ததில்லை.
    மேலும், வைதீகத்தில் உள்ள ஈடுபாடு அடியேனுக்கு ஆன்மீகத்தில் இல்லை என்பதே உண்மை.
    காரணம்: "ஆன்மீகம், பக்தி, கோயில், வழிபாடு இவற்றில் ஆர்வமும், அவைபற்றிய விஷயங்களையே
    எழுதவும், வெளியிடவும் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்" எனவே அடியேன் அந்த ஆயிரத்தில்
    ஒருவனாக இருக்க விரும்பவில்லை.
    எவராலும் எடுத்தாளப்படாத, உபயோகமான, உண்மையான பாபத்தைப் போக்கக்கூடிய
    அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்று எம்பெருமானால் கட்டளையிடப்பட்டுள்ள
    ஆஜ்ஞா கைங்கர்யங்களான - கர்மாக்களைப் பற்றி எழுதக்கூடிய ஒருவனே ஒருவனாக இருக்கவே
    விரும்புகிறேன்.

    ஆனால், அடிப்படையாக தெரிந்த விஷயங்கள் பற்றி பதில்கள் அளித்துக்கொண்டுள்ளேன்.

    எனவே - தாங்கள் கேட்டுள்ள விஷயம்பற்றி அடியேனுக்குத் தெரியவில்லை,
    மன்னிக்கவும்.
    தெரியாததைத் தெரியவில்லை என்று கூறுவதை நேர்மையாகவும் கண்ணியமாகவும் கருதுகிறேன்.
    மன்னிக்கவும்.
    மேலும் - புராணங்கள் வேதங்கள் போன்று ஒரு மனிதனால் படைக்கப்படாதது அல்ல - மனிதர்களால்
    படைக்கப்பட்டது.
    எனவே 18 புராணங்களும் ஒரே கருத்தைச் சொல்லாது,
    ஒரே ஆசிரியரே (ரிஷியே) ஒரு விஷயத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக
    எழுதியிருப்பார்கள்.
    மற்றும் - வழிபாடுகள் எல்லாக் கோயில்களிலும் ஒரே வழிமுறையையத்தான் பின்பற்றவேண்டும்
    என்பது இல்லை. ஏற்கத்தக்க ஒரு பொருளை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
    அது ரசனையைப் பொறுத்தது.
    தாஸன்
    என்.வி.எஸ்

    Comment


    • #3
      Re: VENNAI KAAPPU AND SANTHANA KAAPPU

      Click image for larger version

Name:	anchaneyar.jpg
Views:	1
Size:	126.9 KB
ID:	33925
      Dear Members,
      After lot of difficulties,
      I solved the problem of attaching images, and files,
      now you can use the image button to attach an image and the attachment button to attach any file.
      Best regards,
      nvs

      Comment


      • #4
        Re: VENNAI KAAPPU AND SANTHANA KAAPPU

        Click image for larger version

Name:	india-flag.jpg
Views:	1
Size:	10.5 KB
ID:	33926
        Animatted India Flag to use in your postings.
        This is a test to attach animations - gif

        Comment


        • #5
          Re: VENNAI KAAPPU AND SANTHANA KAAPPU

          Swamin
          I sincerely thank you for your candid and forthright response . I agree with you in totality that each individual
          or vedic scholar or even temple has their own practice of performing the rites. Each one's interpretation may
          differ and none would be able to confirm the origin of the practice being followed by them. An element of
          confusion therefore creeps into the whole question

          PC RAMABADRAN

          Comment

          Working...
          X