Announcement

Collapse
No announcement yet.

இந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இந்தியர்கள் இப்போது என்ன செய்யவேண்டும்?

    "நம் நாடு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, இந்தியர்களாகிய நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?"
    "இது நடந்தது தென் கொரியாவில். 1997-98 களில் உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம் தென் கொரிய அரசு ஊழியர்கள், சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்றினார்கள். தங்களுடைய சேமிப்பை, அரசுக்குக் கொடுத்து உதவினார்கள். இறக்குமதிப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தார்கள். 'இறக்குமதிப் பொருட்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை வரவில்லை' என அரசு அறிவித்தும்கூட அதைச் செய்தார்கள். அப்போது 'டைட்டானிக்' திரைப்படம் அங்கு திரையிடப்பட்டது. அது வெளிநாட்டுப் படம் என்பதால் அதைப் பார்க்க பணம் செலவழிக்க வேண்டாம் என்றும், அதனால் நமது பணம் வேறு நாட்டுக்கு உதவுகிறது என்றும் ஓர் இயக்கமாகவே செயல்பட்டார்கள். அரசுக்குத் தோள் கொடுத்து உதவுவதாக அவர்கள் கருதவில்லை. தங்களையே அரசாங்கமாகக் கருதி செயல்பட்டார்கள். தேசப்பற்றின் மூலம் நெருக்கடியை அவர்கள் எதிர்கொண்ட விதம் பிரமிக்கவைகிறது!"
    -- சிவ.ராஜ்குமார், சிதம்பரம். ( நானே கேள்வி... நானே பதில்...) பகுதியில்.
    -- ஆனந்த விகடன். 25-9-2013.
Working...
X