PDA

View Full Version : புளி பேஸ்ட்



krishnaamma
24-09-2012, 03:04 PM
நம் சமையலில் முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் ஆமாம். இன்றய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்.

இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )

krishnaamma
14-06-2013, 07:08 PM
யாராவது செய்து பார்த்தேளா?

bmbcAdmin
14-06-2013, 08:07 PM
ஶ்ரீ:
புளிப்பேஸ்ட்ட வச்சுண்டு என்ன பண்றதுன்னு தெரியாம
பண்ணிவச்சுண்டு என்ன பண்றதுன்னு இன்னும் பண்ணிப் பார்க்கலை.
அதை வச்சு பண்ணக்கூடிய ரெசிப்பீகளை போடுங்கள், பண்ணிப்பார்துடறேன் (ஒரு கை)!!

அப்படியே, இந்த புளிக்காச்சல் மாதிரியே வத்தக்குழம்பு பேஸ்ட் கூட இருக்காமே
அத எப்படி பண்றதுன்னு எழுதினேள்னா பண்ணி வச்சுக்கலாம்.
எத்தனை நாளைக்கு வச்சுக்கலாம்னு தெரிஞ்சா, திவ்யதேச யாத்தை பேற சமயத்துல
பண்ணி எடுத்துண்டு போலாம்.

நம்ப வெப்சைட் மெம்பர் எல்லாம் சேர்ந்து ஒரு திவ்யதேச யாத்ரை போனா எப்படி இருக்கும்?!
எல்லாரும் ஒத்து வருவாளா?!
சுமார் ஒரு 50 நூறு பேர் சேர்ந்தா போறும்.
என்.வி.எஸ்.

krishnaamma
14-06-2013, 08:23 PM
மாமா, எங்களுக்கு காசி கயா போகணும் மாமா :) விவரம் சொல்லமுடியுமா ?

புளி பேஸ்ட் வைத்துக்கொண்டு செய்யக் கூடியவைகளை இதோ போடுகிறேன்.

bmbcAdmin
14-06-2013, 09:00 PM
மாமா, எங்களுக்கு காசி கயா போகணும் மாமா :) விவரம் சொல்லமுடியுமா ?


ஶ்ரீ:
காசி, கயா போறது ரொம்பச் சுலபம்.
சென்னையிலிருந்து நேராகவே ட்ரெயின் இருக்கு.
காசியில் தம்பு மாமான்னு ஒருத்தர் ரொம்ப நல்ல மாமா இருக்கார்.
எல்லா ஒத்தாசையும் பண்ணுவார்.
நாங்க போனபோது, ஒரு பைசா அட்வான்ஸ் எதுவும் இல்லாம
காசியிலேருந்து - அயோத்திக்கு ஒரு வேனை அனுப்பி வச்சுட்டார்
எல்லாம் முடித்து திரும்பி வரும்போதுதான் பணம் கட்டினோம்.
8 பேர் போனோம், 11பேர் உட்கார்ற கார் அனுப்பினா,
சொன்னா நம்ப மாட்டேள் கி.மீட்டருக்கு 8 ரூபாதான் வாங்கினா (2 வருஷத்துக்கு முன்னாடி).
எப்ப போகணும்னு சொல்லுங்கோ, ஏற்பாடு பண்றேன்.
என்.வி.எஸ்

krishnaamma
14-06-2013, 09:08 PM
Thank you Mama, I sent a mail to you please see that mama :)