Announcement

Collapse
No announcement yet.

நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்

    நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்

    ஒரு முறை நாரதருக்கு ஒரு சந்தேஹம் எழுந்து ஶ்ரீமந் நாராயணனிடம் கேட்டாராம்:
    "ஸ்வாமி, நல்லோருடைய இணக்கம் அல்லது நெருக்கம் நன்மை பயக்கும் என்று சொல்கிறார்களே
    அது எந்த அளவுக்கு உண்மை"? என்று.
    நாராயணன் கூறினாராம்:
    "இந்தக் கேள்வியை எதிரில் தெரியும் காட்டில் மலத்தில் ஒரு புழு நெளிந்துகொண்டிருக்கிறது
    அதனிடம் கேளும்" என்றாராம்.
    நாரதர்:- "ஸ்வாமி கேள்விக்கான பதிலை நீங்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை
    என்னை அந்த மலத்தில் நெளியும் புழுவிடம் சென்று கேட்கும்படிச் சொல்கிறீர்களே நியாயமா"? என்றாராம்.
    "விஷயமாகத்தான் சொல்கிறேன் சென்று கேளும்" என்றாராம் நாராயணன்.
    நாராயணனின் சொல்லைத் தட்டமாட்டாமல் நாரதர் அந்தப் புழுவிடம் சென்று கேட்டார்
    "புழுவே நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும் என்று சொல்கிறார்களே ..." என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே
    அந்த புழு செத்துவிட்டது.
    நாரதர் நாராயணனிடம் வந்து நடந்ததைக் கூற, நாராயணன்
    "அந்த கிராமத்தில் உள்ள ஒரு அந்தணன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றுகொண்டிருக்கிறது
    அந்தக் கன்றிடம் சென்று கேளும்" என்றாராம்.
    நாரதர் அந்தக் கன்றிடம் சென்று அதையே கேட்க கன்றும் இறந்துவிட்டது.
    நாரதர் நாராயணனிடம் வந்து, "ஸ்வாமி இந்தக் கேள்வியின் கனத்தை அந்த புழு, கன்று இரண்டாலும்
    தாங்க முடியாமல் இறந்துவிட்டன, என்னை ஏன் இப்படிப்பட்ட பாவத்துக்கு ஆளாக்குகிறீர்"? என்றார்.
    நாராயணன் "இந்த ஊர் ராஜாவுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது அந்தக் குழந்தையிடம் சென்று கேளும் என்றாராம்"
    நாரதருக்கு வந்தது கோபம், "ஸ்வாமி இதுவரை நடந்ததாவது பாவத்து:டன் போகும்,
    ராஜாவின் குழந்தை இறந்துபோனால் என் கதி என்ன ஆகும்? என்னை ஏன் இப்படி இம்சிக்கிறீர்!
    எனக்கு அந்தக் கேள்விக்கு விடையே தெரியவேண்டாம் என்னை ஆளை விடும்" என்று ஓடப் பார்த்தார்.
    நாராயணர் அவரை விடவில்லை, அவசியம் சென்று கேட்கும்படி ஆணையிட்டுவிட்டார்.
    நாரதரும் சென்று யாருக்கும் தெரியாத ரூபத்தில் அந்தக் குழந்தையிடம் மெதுவாகக் கேட்டார்
    "சிசுவே, நல்லவர்களுடனான நட்பு ..... " குழந்தையின் நாடியைப் பிடித்துப் பார்த்தார் பின் தொடர்ந்தார்
    "நல்லவர்களுடனான நட்பு நன்மையைத் தரும் என்று சொல்கிறார்களே, செத்துக்கித்துப் போயிடாதே,
    கேள்விக்கு பதில் சொல்லாட்டாலும் பரவாயில்லை, தெரிஞ்சா பதில் சொல்லு" என்று உதறலுடன் கேட்டு முடித்தார்.


    அந்தக் குழந்தை பதில் சொன்னதா செத்துப்போனதா?
    பதில் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருக்கும்?
    செத்துப்போயிருந்தால் நாரதருக்கு என்ன ஆகியிருக்கும்?
    நாராயணர் நாரதருக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்?
    கொஞ்சம் யோசித்து பதிலை பதிவு செய்யுங்களேன்
    நான் நாளைக்கு என் பதிலை (அதாவது நாராயணர் சொன்ன பதிலை) எழுதுகிறேன்.

    குறிப்பு:- படிப்பவர்களிடமிருந்து சில வார்த்தைகளைப் பிடுங்க இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை,
    அப்படியும் சில "கல்லுளி மங்கர்கள்" என்ன சொன்னாலும் பதில் போடுவதில்லை.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்

    Lord Narayana replied Naaradha as follows:
    The very prpose of rebirth is to reach the Lotus Feet of Divya Thampathis at Sri Vaikuntam and perform Nithya Kainkaryam. As the worm and just born cow-calf hearing the friendly voice of the good soul (evidently), they left the Samsaara bhandham and left for
    Sri Vaikuntam to perform Nithya Kainkarya to the Lord.
    Dasan
    Srinivasaraghavan

    Comment


    • #3
      Re: நல்லவர்களின் நட்பு நன்மையைத் தரும்

      ஶ்ரீ:
      அந்த ராஜாவுக்குப் பிறந்த குழந்தை நாரதரைப் பார்த்துக் கேட்டது:
      "நாரதரே என்னைத் தெரியவில்லையா?
      முதலில் மலத்தில் இருந்த புழுவும் நான்தான்,
      ப்ராஹ்மணர் வீட்டில் பிறந்த பசுங் கன்றுக்குட்டியும் நான்தான்
      தற்போது ராஜாவுக்கு மகனாக பிறந்திருப்பதும்
      எப்போதும் ஹரி நாம சங்கீர்த்தனம் பண்ணுவதையே
      வ்ரதமாகக் கொண்ட உம் போன்ற நல்லோரின் தரிசனமே
      எனக்கு இப்படிப்பட்ட நன்மை கிட்ட காரணமானது,
      நல்லோரின் நட்பு நன்மையைத் தரும் என்பதற்கு
      இதைவிட சிறந்த சான்று தேவையில்லை அல்லவா" என்றது
      அந்தக் குழந்தை.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X