Announcement

Collapse
No announcement yet.

Marriage Lessons

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Marriage Lessons

    What a father & mother should advice before marriage?
    Marriage Lessons
    🔷திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :
    வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
    தானே அறிவுரை கூறுவார்கள், பின்
    ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
    என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா?
    செல்லமே!
    அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்
    ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
    1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடம் , என்
    அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்
    மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்
    எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை
    .உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா....
    உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
    2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
    கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என்
    வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.
    அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
    அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
    3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள்
    இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் ","
    எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம்
    போட்டு உட்கார வைக்கும்.
    சுருக்கமாக கூற வேண்டுமானால்....
    *அப்பா புராணம் பாடாதே.
    *அப்பாவோடு ஒப்பிடாதே .
    *'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .
    *அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
    22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
    நீடுடி வாழ வாழ்த்துகள்....!
    ----------------------------------------------அன்புடன் ;
    அப்பா
    🔶 5 Marriage Lessons that Mothers Should Give to their Sons.
    கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.
    காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!!
    1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே
    கூடாது....!!
    மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
    2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
    மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
    உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
    3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
    மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா...
    4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
    உதவி செய்யணும்.
    பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
    நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...
    5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
    காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
    ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
    உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....?
    அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
    உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்....!!!!
Working...
X