PDA

View Full Version : காஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்premkumar
17-12-2017, 08:32 PM
நான்கு யுகங்களாக, தமிழ்நாட்டில் விஷ்ணு பக்தி இருந்ததா? முதல் யுகமான சத்ய யுகத்தில் யார் பக்தி செய்தனர்?

அதிதி என்பவள் யார்?

பலி சக்கரவர்த்திக்கும் தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரத்துக்கும் தொடர்பு என்ன?

த்ரிவிக்ரம பெருமாள் மூன்று திவ்ய க்ஷேத்ரங்களில் இருக்கிறார்.
1. ஒரு திவ்ய க்ஷேத்திரம் திருக்கோவிலூரில் உள்ளது.
2. மற்றொரு திவ்ய க்ஷேத்திரம் சீர்காழியில் உள்ள "காழிச்சீராம விண்ணகரம்" என்ற ஊரில் உள்ளது.
3. மற்றொறு திவ்ய க்ஷேத்திரம் காஞ்சியில் உள்ள "திரு ஊரகம்" என்ற ஊரில் உள்ளது.

https://4.bp.blogspot.com/-t75OzQ6w21Q/WjXZSughSPI/AAAAAAAAG1I/AI8MaBthCmAtsR4CuJXQ0lPUY7u-mp7wACLcBGAs/s320/719px-Kazheesirama_Vinnagaram2.jpg

திருக்கோவிலூரில் கோவலன் என்ற த்ரிவிக்ரம நாராயணனும், பூங்கோவல் நாச்சியாரும் இருக்கின்றனர்.
அதன் வரலாறு என்ன?

சீர்காழியில் உள்ள "காழிச்சீராம விண்ணகரம்" என்ற ஊரில், தாடாளன் என்ற த்ரிவிக்ரம நாராயணனும், லோகநாயகி தாயாரும் இருக்கின்றனர். அதன் வரலாறு என்ன?

காஞ்புரத்தில் உள்ள திருஊரகம் என்ற ஊரில் பேரகத்தான் என்ற த்ரிவிக்ரம நாராயணனும், அமுதவல்லி தாயாரும் இருக்கின்றனர்.
அதன் வரலாறு என்ன?

திரு ஊரகத்துக்கு உலகளந்தபெருமாள் எப்படி இங்கு வந்தார்?

பலி சக்ரவர்த்தி 14 லோகங்களில் பாதாள லோகம் தவிர்த்து, பூலோகம் முதல் சத்ய லோகம் வரை, தன் தவ மற்றும் உடல் வலிமையால் அடிமைப்படுத்தி விட்டான்.

இதனால், தேவர்கள் கூட தேவலோகமான சொர்க்கத்தை விட்டு மறைந்து விட்டனர்.

தேவ மாதாவான 'அதிதி', பகவான் விஷ்ணுவை சரணம் அடைகிறாள்.
தேவர்களின் சொத்தான பதவியையும், சொர்க்கத்தையும் மீட்டு கொடுக்க, பகவானே, "வாமன அவதாரம்" எடுக்கிறார்.

பிரகலாதனின் வாரிசான இவர், அரக்கர் குலமானாலும், ஹிரண்யகசிபு, ராவணன் போன்ற தீயவன் அல்ல.

பலி சக்ரவர்த்தி, தன் தாத்தாவாகிய பிரகலாதனை போன்று, தர்மாத்மா, சத்யாசந்தன், பெரியோர்களிடம் வினயம் உடையவர்.

இதனால், பலி சக்ரவர்த்தியை வதம் செய்து தான் தேவர்களை காக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் இல்லாமல், வதம் செய்யவும் கூடாது.

தன்னுடைய புண்ணியங்களால் சகல உலகங்களையும் கையாற்றினாரே தவிர, கொடியவன் அல்ல.
பகவான் விஷ்ணுவுக்கோ, பலி சக்ரவர்த்தி கைப்பற்றிய பிறர் சொத்தை வாங்கி, உரியவர்களிடம் சேர்க்க வேண்டும்.
பலி சக்ரவர்த்தி தர்மாத்மாவாக இருப்பதால், அதர்மமாக சண்டை செய்தோ, வதம் செய்ய முடியாது.
பகவான் தர்மத்திற்கு தலைவன். அவரே அதர்மமாக செய்ய முடியுமா?

இதுவே நம் சனாதன தர்மம் காட்டும் அற்புதம்.
ஒரு மனிதன் தர்மத்தில் இருந்து நியாயமாக வாழ்க்கை நடத்தினால், தெய்வங்கள் கூட நம் உயர்வை தடுக்காது என்று புரிகிறது.

அதிதி மாதாவின் பிரார்த்தனைக்கு அணுகிரஹம் செய்ய நினைத்த பகவான், பிறர் சொத்தை அபகரித்து வைத்து இருக்கும் பலி சக்ரவர்த்தியிடம் சண்டை செய்யாமல், தானமாக வாங்கி விட சங்கல்பம் செய்தார்.

உலகங்களை படைத்து, தன்னால் படைக்கப்பட்ட ஜீவனாக இருந்தும், தர்மாத்மாவாக இருப்பதால், பிறரிடம் வாங்குவதற்காக நீளாத தன் கையை, பிறருக்கு கொடுக்க மட்டுமே நீளும் தன் கையை, தர்மாத்மாவான பலி சக்ரவர்த்திக்கு முன், ஒரு வாமனனாக, 7 வயது பூணல் அணிந்த பிராம்மண சிறுவனாக அவதாரம் செய்து,
"என் காலால் அளக்கும் அளவுக்கு மூன்று அடி மண் தானமாக "தேஹி"(கொடு)"
என்று கை நீட்டி தானம் கேட்டார்.

தர்மாத்மாவாக இருந்தும், பலி சக்ரவர்த்திக்கு கொஞ்சம் கர்வம் இருந்தது.

இந்த கர்வத்தால், பலி சக்ரவர்த்தி சிறுவனாக இருக்கும் வாமனரை பார்த்து,
"உம்முடைய உடல் அளவு தான் உமக்கு புத்தி உண்டு என்று நினைக்கிறேன்.
சகல உலகங்களையும் ஆளும் சக்கரவர்த்தியான என்னிடம் வந்தும், உலகமே தானமாக கேட்டாலும் கொடுக்கவல்ல என்னிடம், மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்கிறீரே"
என்று பரிஹாசமாக சொன்னார்.

பலி சக்ரவர்த்தியின் கர்வமான இந்த பேச்சை கேட்டும், பகவான்
"எனக்கு எந்த அளவு தேவையோ, அந்த அளவு மட்டும் தானே கேட்க முடியும்.
உனக்கு நான் கேட்பதை கொடுக்க முடிந்தால் கொடு"
என்று பதில் சொன்னார்.

https://2.bp.blogspot.com/-O3zDv41j2Lk/WjXa1oSwk9I/AAAAAAAAG1Y/N8wwsQbNppAWGWA7WDUVrHFyzlP0l7zrACLcBGAs/s280/Ulagalantha_Perumal6.JPG

"சரி" என்று பலி சக்ரவர்த்தி ஒத்துக்கொண்டு, அர்க்யம் விட்டு, தானம் கொடுக்க சம்மதிக்கிறேன் என்று சொன்ன மறு நொடி,
வாமன மூர்த்தியாக இருந்த பெருமாள், உலகளந்த பெருமாளாக கிடு கிடுவென வளர்ந்து, ஒரு திருவடியை பூ மண்டலம் முழுவதும் வைத்து, மற்றொரு திருவடியை பூ லோகத்துக்கு மேல் உள்ள புவர் லோகம், சொர்க்க லோகம், மகர் லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, சத்ய லோகமான ப்ரம்ம லோகத்தில் வைத்து விட்டு,
பலி சக்ரவர்த்தியை பார்த்து, உக்ர மூர்த்தியாக,
"மூன்று அடி நீ தானம் கொடுப்பேன் என்று சத்யம் செய்தாயே!
ஒரு அடி பூ லோகம் ஆரம்பித்து, இரண்டாம் அடி சத்ய லோகம் வரை உன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் தானமாக வாங்கி விட்டேன்.
நான் மூன்றாவது அடி எடுத்து வைக்க, மண் எங்கே?
என்று உக்கிரமான வானுயர்ந்த பெருமாளாக நின்று, கர்ஜித்தார்.

அனைத்தையும் இழந்த நிலையில், தர்மாத்மாவாக இருக்கும் பலி சக்ரவர்த்தி, தன் கர்வமே இந்த நிலைக்கு காரணம் என்று தெளிவு பெற,
சத்தியத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளதால், வந்திருப்பது விஷ்ணுவே என்று உணர்ந்து, அவர் சொத்தாக தன்னை ஏற்றுக்கொள்ளும் படி பிரார்த்தித்து, மூன்றாவது திருவடியை தன் தலை மேல் வைத்து கொண்டு ஏற்றுக்கொள்ளுமாறு பிரார்த்தித்தார்.

7 உலகங்களை இரண்டு அடியில் அளந்து, மூன்றாவது அடிக்கு அதற்கு சமமான இடம் கேட்டால், என் தலையில் வைத்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறாயே. இந்த உலகங்கள் எத்தனை பெரியது? இந்த உலகங்கள் அளவும், உன் தலையின் அளவுக்கும் எப்படி பொருந்தும்? என்று பரப்பளவை வைத்து ஒப்பீடு செய்யவில்லை பகவான்.

கர்வம் இல்லாதவனே பாகவதன். தர்மாத்மாவாக இருந்தாலும், கர்வம் உள்ளவன் தண்டிக்க படுவான். ஆனால், கர்வம் இல்லாமல் இருந்து, விஷ்ணு பக்தியும் செய்பவனாக இருந்தால், அவனே பாகவதன். பாகவதனுக்கு பகவான் அடிமை ஆகிறான். அவன் நலத்திற்கு பகவானே பாடுபடுவார்.

கர்வம் அகன்று, தன்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னதும், 7 லோகங்கள் சேர்த்து என்ன மதிப்பு உண்டோ, அதற்கு ஈடான மதிப்பு உடையவன் என் பக்தன் என்று உலகிற்கு காட்ட,
மூன்றாவது அடியாக, பலி சக்ரவர்த்தியின் தலை மேல், அவருக்கு ஒரு மணி மகுடம் போல, தன் திருவடியை வைத்து, பெருமாள் தன் சொத்தாக ஏற்றுக்கொண்டார்.

பூ லோகத்திற்கு கீழே இருக்கும் பாதாள லோகங்களை பலி சக்ரவர்த்தி கைப்பற்றவில்லை.
அதனால் அவர் திருவடி பாதாள லோகத்தில் பட அவசியப்படவில்லை.

பகவான், பலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்திற்கு சென்று இருக்குமாறு சொல்லி,
"அடுத்த இந்திர பட்டத்திற்கு

மேலும் படிக்க...

http://proudhindudharma.blogspot.in/2017/12/108_16.html?m=1

bmbcAdmin
25-12-2017, 10:55 AM
ஸ்ரீ:
நல்ல தகவல்கள் அளித்து வருகிறீர்
மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்
தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எதிர்வரும் புத்தாண்டு மிகுந்த சிற்பாக அமைந்திட
அருள்புரிய வேண்டுமாய் ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.

குறிப்பு- தங்கள் பதிவில் இரு படங்களைச் சேர்த்துள்ளேன்
தங்கள் பதிவை Edit செய்து பார்த்தால் கோட் எப்படிக்
கொடுத்துள்ளேன் என்பது தெரியும்
அந்த முறையில் படங்களையும் சேர்த்தால்
மேலும் சிற்பாக இருக்கும்.
நன்றி

premkumar
26-12-2017, 08:07 AM
உங்கள் பதிலுக்கு நன்றி.