Announcement

Collapse
No announcement yet.

BHAVAANI JAYANTHI.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BHAVAANI JAYANTHI.

    22-03-2018 முத்துஸ்வாமி தீக்ஷிதர். பிறந்த நாள்.ஸங்கீத மும்மூர்த்திகளில்ஒருவர்,பங்குனி மாதம் க்ருத்திகை நக்ஷத்திரம்.


    18-04-2018 சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷத்திரம்
    .ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.


    25-01-2019 தியாக ப்ருஹ்ம ம் பிறந்த நாள்- பெளஷ மாத க்ருஷ்ண பக்ஷ பஞ்சமி ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.


    22-03-2018-- ஹயக்ரீவ ஜயந்தி-பாற்கடலை கடைந்த போது உச்சைஸ்வரஸ் என்னும் தேவ சக்தி உடைய பறக்கும் குதிரை தோன்றிய நாள் சைத்ர சுக்ல பஞ்சமி.குதிரைக்கு கொள்ளு தான்யம் சாப்பிட கொடுக்கலாம்.லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்லோகங்கள் சொல்லலாம்.இதனால் சத்ரு நிவாரணம், கோர்ட் கேஸ் ஆதாயம் உண்டாகும்.




    22-03-2018---லக்ஷமி பஞ்சமி --- நாக பஞ்சமி.-ஸ்ரீ பஞ்சமி.
    பாற்கடலை கடைந்த போது சைத்ர சுக்ல பஞ்சமியில் லக்ஷ்மிதேவி பாற்கடலில்தோன்றினாள்
    ஆதலால் இன்று லக்ஷ்மி தேவியையும் மஹா விஷ்ணுவையும் மல்லிகை பூவால் அர்ச்சனை
    16 உபசார பூஜை செய்யலாம்.


    25-03-2018. அசோகாஷ்டமி.ஸீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நாளிது. மருதானி மரத்திற்கு அசோக மரம் என ஒரு பெயர் உண்டு. ராவணன் ஸீதா தேவியை இந்த மருதாணி மர காடுகளில் சிறை வைத்தான். தினமும் அழுது புலம்பி கொண்டே இருந்த ஸீதாதேவிக்கு தனது மர கிளைகலை ஆட்டி ஆறுதல் கூறி வந்தது.ராமர் பட்டாபிஷேகத்தின் போது இந்த அசோக மரங்களுக்கு வர ம் கொத்தார் ஸீதாதேவி பதியின் அனுமதியுடன்.


    மருதானி மரங்களுக்கு யார் தண்ணீர் ஊற்றுகிறார்களோ, யார் உனது இலைகளை கையில் பூசிக்கொள்கிறார்களோ, யார் சாப்பிடுகிறார்களோ, யார் பூஜிக்கிறார்களோ அவர்களூக்கு துன்பம் வராது.என்று.


    இந்த வரத்தை சீதா தேவி அருளிய நாளே அசோகாஷ்டமி என பெயர் பெற்றது. இன்று மருதானி மரக்கன்றுகள் நடலாம்.பெரிய மருதானி மரங்களுக்கு ஜலம் விடலாம். லிங்க புராணம் சொல்கிறது. ஏழு மருதானி இலைகளை மென்று சாப்பிடவும்.இந்த ஸ்லோகம் சொல்லிக்கொண்டே த்வாம் அசோக நரா அபீஷ்ட மது மாச ஸமுத்பவ பிபாமி சோக


    ஸந்தப்தோ மாம சோகம் ஸதா குரு. பற்பல நோய்கள் பாபங்கள்விலிகுவதாக புராணங்கள் கூறுகின்றன,





    பவானி ஜயந்தி:--25-03-2018.
    ஸம்ஸார வனத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக அம்பாள் சைத்ர சுக்ல அஷ்டமியான இன்று பவானி என்ற பெயருடன் தோன்றினாள். ப்ருஹ்ம வைவர்த்தம் கூறுகிறது பவானீம் யஸ்து பஶ்யேத சுக்லா அஷ்டம்யாம் மதெள நர: ந ஜாது சோகம் ,லபதே ஸதா ஆனந்த மயோ பவத்.


    25-03-2018 அன்று பவானி அம்மன், தரிசனம், அஷ்டோத்ர அர்ச்சனை, நமஸ்காரம் பூஜை செய்வதால் வாழ்க்கையில் கஷ்டம் வராது எங்கிறது காசி கண்டம்.


    இந்த ஸ்லோகத்தை 108 தடவை சொல்லி ப்ர்ரர்திக்கவும். ஶரண்யே வரேண்யே ஸுகாருண்ய மூர்த்தே--ஹிரண்யோத ராத்யை ரகண்யே ஸுபுண்யே --பவாரண்ய பீதேஸ்ச மாம் பாஹி பத்ரே - நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவானி.
Working...
X