PDA

View Full Version : Thevaram for getting childrensoundararajan50
20-05-2018, 08:12 AM
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
__________________________________
*தேவாரத்தை பிடி! கயிறை பதி!!* ___________________________________
தேவாரம் பாடல் நாட்டில் அமைந்துள்ளது பெண்ணாகடம் என்னும் ஒரு ஊர்.


இவ்வூரில் எழுநூறு ஆண்டுளுக்கும் முன்னால் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


இவர் சைவசமயத்தைத் தழுவி வந்தவர். ஈசனிடம் மிகவும் பக்தி பூண்டவர். இவருக்கு நெடுநாட்களாக மக்கட் பேறு இல்லாமலிருந்ததால், வருத்தமுற்று மிகவும் மனம் கணத்திருந்தார்.


யார் யாரோரெல்லாம் குழந்தை பேறு வாய்க்க பரிகாரங்களைக் கூறினர். சொன்னவர்களின் யோசனைகளின்படி அத்தனை வகையான பரிகாரங்களைச் செய்ய நினைத்தார்.


ஆனால், பரிகாரங்களை செய்வதற்கு முன் தனது குருவைச் சந்தித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர் ஆசியைப் பெற்று அதன்பிறகே பரிகாரங்களை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தார்.


அதன்படியே தம்முடைய குலகுருவாகிய சகலாகம பண்டிதரிடம் போய் தம் குறை நீங்க வழிகாட்டுமாறு கேட்டு நின்றார்.


குருவானர் அவர் உடனே தம்முடைய திருமுறைப் பாராயண கட்டுகளில் உள்ள தேவாரத்தை எடுத்து கயிறு சாத்திப் பார்த்தார்.


அந்தக் காலத்தில் நிலவி வந்த ஒரு ஜோதிட சாஸ்திர முறை இது. (கிளி ஜோசியம்போல) கயிறு சாத்திப் பார்த்தல் என்றும் இதைக் கூறுவர்.


அதாவது, தேவாரம் போன்ற நூலை எடுத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, ஒரு கயிறை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் கயிறை பதிக்க வேண்டும்.


கயிறு எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைப் பிரித்துப் படித்தால் இறைவன் அருளால், அந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பாட்டின் மூலம் தீர்வு காணப்பெறுவர்.


பொதுவாக இந்தவகை சாஸ்திரம் அனைவருக்குமே தெரியும் என்றாலும், இப்படி குரு ஸ்தானத்தில் உள்ளவர் மூலமாகத் தீர்வு காண்பது அப்போதைய வழக்கமாக இருந்து வந்தது.


அவ்வாறு கயிறு பதித்து பார்த்ததில், *'பேயடையா பிரிவெய்தும்'* என்ற தேவாரப் பதிக பார்வைக்கு கிடைத்தது.


அதில் *'பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர்'* என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார்.


அச்சுதக் களப்பாளருடைய குறையும் பிள்ளை இல்லை என்பதுதானே! அவர் குறைக்கு இறைவனே பரிகாரம் கொடுத்தது போல அந்தப் பாட்டு அமைந்திருந்தது.


அதைக் கண்ட பண்டிதரும் இறைவன் திருவருளை நினைத்து அதிசயித்து, மகிழ்ந்து சொல்லொணாத ஆனந்தம் அடைந்தார்.


பின், நீ திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி, இறைவனை வழிபட்டுக் கொண்டு அங்கு சிலகாலம் தங்கும்படி களப்பாளரைப் பணித்தார் சகலாகம பண்டிதகுரு.


தன் குருவின் கட்டளைபடி திருவெண்காடு சென்றார். யாவையும் செய்தார் களப்பாளர், தன் மனைவியுடன் ஊர் திரும்பினார்.


அந்நிகழ்ச்சிக்குப் பிறகு களப்பாளரின் மனைவி கருவுற்று, ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள்.


திருவெண்காட்டு மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்த குழந்தையாதலால் இதற்குச் *'சுவேதனப் பெருமாள்'* என்று நாமத்தைச் சூட்டி பெற்றோர்கள் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.


இந்தக் குழந்தையே பிற்காலத்தில் *சிவஞானபோதம்* என்னும் சைவ சாஸ்திர நூலை இயற்றியது.
சந்தானாசாரியர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார் இவர் ஆவார்.


சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றிற்கும் மூலம், சிவஞானபோதம். அது பிறக்கக் காரணமூர்த்தியாக இருந்தவர் மெய்கண்டார்.


அவர் திருஅவதாரம் செய்ய உறுதுணையாக இருந்தது, *'பேய் அடையா பிரிவு எய்தும்'* என்று தொடங்கும் ஒரு தேவாரப்பாடல் ஆகும்.


இந்த தேவாரப் பாடலை சம்பந்தர் பெருமான் பாட உருவாக்கமானது எப்படி? என்பதை வாசியுங்கள்.


திருவெண்காடு தலத்திற்குச் சென்றாலே, ஆன்மிகச் சூழலான இங்கு, தீய எண்ணங்களெல்லாம் நம்மைத் தீண்டாது ஒழிந்து, நாம் இறைவனைச் சார்ந்த எண்ணங்களிலேயே லயிப்பதை உணர முடியும்.


ஒவ்வொரு தலத்தின் பயன்கள் கருதியே நம் நாட்டில் *மூர்த்தி, தலம், தீர்த்தம்* என ஆன்மிக வழிகாட்டல்கள் யாவையும் அமைந்திருக்கின்றன.


*மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே* என்கிறார்.
-தாயுமானவர்.


சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து விளங்கும் திருவெண்காடு, பழமையான தலங்களில் ஒன்று.


இங்கே *சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம்* ஆகிய மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.


இந்த மூன்று தீர்த்தங்களே *முக்குளத் தீர்த்தம்* எனவாகும்.


புனிதமான இந்தத் தீர்த்தங்களில் மூழ்கி எழுவோர்க்கு, தாம் நினைத்த பல பயன்களைப் பெறுவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வருகிறது.


ஒரு சமயம், திருவெண்காட்டிற்கு ஒருமுறை திருஞான சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார்.


சம்பந்தரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் வந்தனர் பக்தர்கள். தங்கள் மனதிலுள்ள குறைகளை சம்பந்தரிடம் சொல்லி, தங்கள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தனர் ஒவ்வொருவரும்.


ஒரு பக்தர் சம்பந்தரிடம், என்னுடைய மனைவியை நெடுநாட்களாகப் பேய் பிடித்து அழைக்கலைத்தது.


இதைப் பார்த்த ஒரு பெரியவர் எங்களிடம், நீ வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடு. சுவேதாரண்யேஸ்வரரையும்பிரும்மவித்தியா நாயகியையும் வழிபடு சரியாகிவிடும் என்று சொன்னார்.


அவர் கூறியதை நம்பி நானும், இங்கே வந்து முக்குள நீரில் நீராடி இறைவனை வழிபட்டோம்.


பீடித்திருந்த பழைய தொல்லையிலிருந்து நீங்கி, இப்போது என் மனைவிக்கு யாதொரு குறையும் இன்றி, நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் இந்த ஈசன் செயல் என்றார்.


இதனால், நாற்பத்தெட்டு நாட்கள் எங்கள் சங்கல்பத்தை முடித்துக்கொள்ள எண்ணி இங்கு தங்கியிருக்கிறோம் என்றார்.


மற்றொருவரோ,...சம்பந்தரைப் பார்த்து, தங்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது, என்று கூறி அவரும் அவர் மனைவியும், சம்பந்தப் பெருமான் காலில் விழுந்து வணங்கினர்.


திருஞானசம்பந்தர் சுற்று முற்றும் பார்த்தார். அங்கு வேறு சில மகளிர்களும் பேயாடுவதைக் கண்டு மனம் போக கண்டார்.


மேலும் ஒருவரைப் பார்த்த சம்பந்தர்,..... உங்கள் குறை என்ன? அது நிறைவேறி விட்டதா? அல்லது நிறைவேற்ற வந்திருக்கிறீர்களா? என்று அன்புடன் கேட்டார் ஞானசம்பந்தர்.


அதற்கு அவர், நான் ஒரு பெரும் செல்வந்தன். எனக்கு பங்களா, நிலம் என ஏகப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறேன்.


ஆனால், இதனால் எனக்கு பயன் என்ன? எனக்குப் பின் இதை அனுபவிப்பதற்குத் எனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் எண்ணைத் தூங்கவிடாமல் செய்தது.


தானங்கள் பல செய்தேன். ஊர் ஊராகச் சென்று பல கோயில்களைத் தரிசித்துத் தவம் புரிந்தேன்.


கடைசியாக இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் இந்த திருவெண்காட்டுக்கு, என் மனைவியுடன் வந்து முக்குள நீரில் மூழ்கி சிலகாலம் இருந்து இறைவன் இறைவியைத் தரிசித்து ஊர் திரும்பினோம்.


நாங்கள் ஊர் திரும்பிய ஓராண்டிலேயே என் மனைவி கருவுற்று, எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.


அந்தப் பிள்ளைக்கு *'வெண்காடன்'* என்று பெயரிட்டோம். அந்தக் குழந்தைக்கு இப்போது ஓராண்டு நிரம்பிவிட்டது.


இதனால் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் இக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு இப்போது இங்கு ஈசனைத் தரிசிப்பதற்க்காக இங்கு வந்திருக்கிறோம்.


குழந்தை செய்த பாக்கியம், தங்களையும் இன்று வணங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று மகிழ்ந்து சொன்னார்.


இந்தச் செய்தியைக் கேட்டு தம்பதிகளையும், குழந்தையையும் வாழ்த்தி ஆசி கூறினார் திருஞான சம்பந்தர்.


அடுத்து நிற்பவரிடம் குறைகளைக் கேட்டார்.


எனக்கு வெகு நாட்களாக, தீராத நோய் ஒன்று ஆட்டி வைத்தது. நம்பிக்கையுடன் நாமும் முக்குளம் சென்று நீராடி, இறைவனைத் தொழலாமே என்று எண்ணினேன். இங்கு வந்து சிலகாலம் தங்கி நீராடினேன். என்ன ஆச்சரியம்! எனக்கு இருந்த நோய் முற்றிலும் மறைந்துவிட்டது, என்று வியப்பு மிக கூறினார்.


யாவற்றையும் கேட்டு அக மகிழ்ந்தார் சம்பந்தர்.


அன்பர்களைச் சந்தித்து இவ்வளவு நேரம் அவர்களுடைய ஆனந்தமான அனுபவங்களைக் கேட்ட திருஞானசம்பந்தர், அவர்கள் பாவம் போக்கி நினைத்தவற்றையெல்லாம் அருளும் முக்குளத்தையும், திருவெண்காட்டு அப்பனையும் கண்டு உருகி நின்றார்.


தாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும்மனதில் எழுப்பி ஈசனை அகத்தால் உணர்ந்து பாட முனைந்தார்.


அதனால் பிறந்தது ஒரு பதிகமே இது. இந்த பதிகமே அச்சுதகாப்பாளரின் குருவானவர், தேவார ஏட்டில் கயிறு பதித்து வழிகாட்டலை வாசித்துக் கூறினார்.


*பேயடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் தோயாவாம் அவர்தம்மைத் தீவினையே!* என்று.


மூங்கிலைப்போல வழுவழுப்பும், பசுமை நிறமும் கொண்ட தோள்களைப் பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாராது. அவர்களைப் பேய்கள் அண்டாது. முன்பே அடைந்திருந்தாலும், அவை பிரிந்து நீங்கி விடும். பிள்ளை வேண்டுமென்றால் அதனையும், அதனோடு மனத்தில் வேறு எவற்றை நினைத்தார்களோ அவற்றையும் பெறுவர். இவற்றை அடைவது பற்றி சிறிதும் ஐயுற வேண்டாம்.