PDA

View Full Version : Auvaiyar and kambbarsoundararajan50
01-06-2018, 07:25 AM
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
*கவி-க்கும், செருக்குண்டோ!*
ஒளவைபாட்டியார் சோழ நாட்டிற்கு பிரயாணம் செய்து வந்தார்கள்.
ஒரு நாள், ஒளவைபிராட்டியார், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சோர்வோடு நடந்து சென்று கொன்டிருந்தார்.


நீண்ட தூரம் நடந்த களைப்பில் அங்கிருந்த சிலம்பி என்பவளான ஒரு தாசியின் வீட்டுத் திண்னையில் அமர்ந்து இளைப்பாரிக் கொண்டிருந்தாள்.


ஒளவையைக் கண்ட தாசியும் அவரை மிகவும் அன்போடும் மரியாதையோடும் பேசிவிட்டு, அவர் உண்ண கூழைக் கரைத்துக் கொடுத்து உபசரித்தார்.


அக்காலத்தில் புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் சிறப்பான விசயம். அதிலும் புகழ் பெற்ற புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் கெளரவத்திற்குரிய பெரிய விசயம்.


சிலம்பிக்கும் தன்னைப்பற்றி புலவர்களால் புகழ்ந்து பாடுவதை கேட்க பேராவல் கொண்டிருந்த சமயத்தில்.....


சோழ நாட்டின் பெரும் புலவர் கம்பரிடத்தில் அவள் பாட்டுக்கேட்கச் சென்றார்.


கம்பரும் அதற்கு ஒரு வெண்பா பாடுவதாயிருந்தால் ஆயிரம் பொன் தர வேண்டும் என்று கூறினார்.


தன்னிடமிருந்தவற்றையெல்லாம் கூட்டியறிந்து பார்த்தாள் சிலம்பி. அதில் ஐநூறு பொன்னே தேர்ந்தது.


இதையெடுத்துப் போய் கம்பரைப் பாடக் கேட்டாள். ஐநூறு பொன்னே இருக்க, சிலம்பிக்கு அரை வெண்பா மட்டுமே பாடி முடித்தார்.


அதாவன......


*தண்ணீரும்காவிரியேத வேந்தன்சோழனே மண்ணாவதும்சோழமண்டலமே!* என்பதோடு பாடி நிறுத்திக் கொண்டார்.


தன் சொத்து முழுதும் இழந்த சிலம்பி அதன்பின் ஏழ்மையில் சிக்குண்டாள்.


இந்தச் சமயத்தில்தான் ஒளவையார் சிலம்பியைக் காண நேர்ந்தது.


கம்பர் பாடிய அரை வெண்பா சிலம்பி வீட்டுச் சுவரில் தீட்டியிருந்ததையும் ஒளவை படித்து பார்த்து....


ஒரு வெண்பாவின் முதல் எழு சீர்கள் மட்டுமே எழுதியிருக்கிறதே ஏன் பாடலை முழுமையாக்கவில்லை என்றாள்.


அதற்கு அத்தாசியான சிலம்பி, நடந்ததைக் ஒளவையிடம் கூறி அழதாள்.


இவள்பால் மனமிரங்கிய ஒளவையானவர், *பெண்ணாவாள் அம்பொற்சிலம்பி அரவிந்தத்தாளணியும் செம்பொற்சிலம்பேசிலம்பு* எனும் வரிகளைச் சேர்த்து வெண்பாவை பூர்த்தி செய்து பாடினாள்.


தண்ணீரும் காவேரியுமாய்
மண்ணாவதும்சோழமண்டலமே பெண்ணாவாள்
அம்பொற்சிலம்பிஅரவிந்தத்தாளணியும்
செம்பொற்சிலம்பேசிலம்பு!


அதாவது தண்ணீரில் சிறப்புக்குரியது காவிரிநீர். அரசர்களில் சிறந்தவன் சோழன். மண்ணிலே சிறந்ததுசோழமண்டலம். இவற்றைப்போலவே சிலம்பில் சிறந்தது சிலம்பி என்னும் இந்த நல்லாள் காலில் உள்ள சிலம்பு எனப்பொருள்பட பாடி முடித்தாள் ஒளவை..


ஒளவையின் திருவாக்கால் அதன்பின்னர் சிலம்பி ஏழ்மை நீங்கி மிகவும் வசதி படைத்த நிலையானாள்.


தனது கால்களின் சிலம்பை பொன்னால் அணியும் வண்ணம் அவள் நிலையும் உயர்ந்து வந்தது.


இதையெல்லாம் கேள்விப்பட்ட கம்பர், மிகவும் கோபமுற்று *"கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி"* என்று இகழ்ந்தார் கம்பர்.


கவிக்கும் ஒரு
செருக்குண்டே, அது இதுவோ?


ஒளவையார் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டவர்.


பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறில் தெரிந்தது.. இவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும், துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றார்.


அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டவர். அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, அதை உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்.


அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர். தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்தவர்.


பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார். மிக்க மன உரம் மிக்கவர். அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்.


எளிமையின் சின்னம் இவர். ஏழைகளுக்குத் தோழியாவும் ஆவார். பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.


(சிலம்பி கூழ் கொடுத்த சமயத்தில், சிலம்பிக்கு பாடியதால், கம்பர் ஒளவையாரை கூழுக்கு பாடினார் என்று இறுடி செய்தார்.)


காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் *தமிழறியும் பெருமாள்* என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தவர்.


கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டிருக்ககறார்.


சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவியவர்.


பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தவர்.


சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை, குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தவர்.


திருச்சிற்றம்பலம்.