PDA

View Full Version : Destiny - spiritual storysoundararajan50
23-06-2018, 07:13 AM
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
*. 🌙 *கொடிக் கவி!*🌙
உமாபதி சிவாச்சாரியார்.
உமாபதி சிவாச்சாரியர் என்பார் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர்.
நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார்.
பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர்.
இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு சைவ நூல்களைப் பயின்றவர்.
சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர்.
இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார்.
இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கினர்.
தில்லை கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர்
ஒருமுறை கோயில் கொடியேற்றத்தின்போது இவரின் முறையை வேறொரு அந்தணருக்கு வழங்கியிருந்தனர்.
ஆனால், அவர் கொடியேற்றும்போது கொடி ஏறவில்லை.
அச்சமயத்தில் ஈசனின் அருளால் உண்மையை உணர்ந்தவர்கள் உமாபதி சிவத்தை அழைத்தனர்.
தாங்களே வந்து கொடியேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
அப்போது உமாபதி சிவம் ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்ததோடு கொடியேறுவதற்காக நான்கு பாடல்களை கொடிக்கவி எனும் பெயரில் பாடினார்.
இந்த பாடல்கள் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
கீழேயுள்ள கொடிக்கவியை நெஞ்சில் பக்தியோடு பாடி தில்லைக் கூத்தனின் திருவடி படர்வோமாக!.
🔔ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள்ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் எபடிக் கொடி கட்டினனே.
🙏ஒளியும் இருளும் தமக்குள் வேறுபடுபவையாவன. ஆனால், திருவருளாகிய ஒளியும், ஆணவ மலமாகிய இருளும், ஆன்மாவாகிய ஒரே இடத்தில் இருக்கின்றன.
இவற்றுள் ஒன்று மேலோங்கும்போது, மற்றது அடங்கி நிற்கும்.
ஆனாலும், அவை ஆணவ மலம் திருவருள் அடங்கியிருக்கும் போது, அதைப் பற்றி கொள்ளாது.
திருவருள் எல்லா உயிர்களுக்கும் உயிராக இருக்கும்.
அறிவிருந்தாலும் கூட உயிர் முன் வினை காரணமாக மும்மலங்களில் மூழ்கும்.
திருவருள் ஆன்மாவில் வந்து சேரும்படி கொடியை நான் கட்டுகிறேன்.
🔔பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
🙏எல்லா பொருளிலும் நீங்காதிருக்கும் சில பொருள் ஏது?
சூரியனின் கிரணம் போன்று சிவனின் சத்தித் திருவருள் ஏது?
சூரியனால் காணப்பெறும் கண்போலத் திருவருளால் செயல்படும் ஆன்மா ஏது?
அஞ்ஞான இருள் ஏது?
முழு கருப்பு ஏது?
அருளாளனே! நீ காக்கும் உலகமெலாம் நீ சாட்சியாக உன் கோபுர வாசலில் கொடி கட்டினேன்.
🔔வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.
🙏வாக்கு மனங்களால் ஒரு காலத்திலும் தாக்காமல் அறிந்து உணர்வதற்கு அரிய தன்மையை உடையவன் ஈசன்.
ஈசனைப் பற்றி விசாரித்துப் பார்த்து, பகுத்து, ஆராய்ந்து அவன் அறிவுக்கறிவாய்ப் பொருந்திப் பிரியாமல் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.
இந்த உணர்வதற்கு அருள் நல்க வேண்டிக் கொடி கட்டினேன்.
🔔அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.
🙏அஞ்செழுத்து பஞ்சாட்சர முதலான மந்திர எழுத்துக்களை உச்சரிக்கும் முறையில் உச்சரித்து, அந்த மந்திரங்களின் அட்சர சொரூபங்களான சக்தியையும், சிவத்தையும், நெஞ்சில் நிறுத்தினால், சக்தியும் சிவமும் ஆன்மாவில் கூடும்.
இவ்வாறு கூட்டுவிக்க அருள வேண்டும் என கொடி கட்டினேன்.
🔔அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.
🙏அந்த ஆணவ மலத்தை அறுத்து, ஆன்மாவை எப்படி என்று காட்டி, அதற்குரிய அறிவை அறிவித்து, சகலநிலையில் உள்ள சிற்றறிவை மாறுபாடில்லாமல் மாற்றி, இதனால் தோன்றும் சிவமாகிய பேறு தானே கிடைப்பது கருதிக் கொடியைக் கட்டினேன்.