Announcement

Collapse
No announcement yet.

F w: Kasi Viswanathar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • F w: Kasi Viswanathar

    Sent from Yahoo Mail on Android
    Dear all
    A very high achievement of a Tamilnadu gentle man and his Mrs for the celebration of Kumbabishekam of Kasi visvanathar Tirukkoil in July 2018
    We should be proud of this great achievement
    This may please be considered for publication in satvishayam groups.com


    ----- Forwarded Message -----
    From: "Subramanian Krishnamurthy" <subhalaharee@hotmail.com>
    To: "Jagannathan Rangaswami" <rvaikjag@yahoo.co.uk>
    Sent: Tue, Jul 17, 2018 at 21:17
    Subject: Kasi Viswanathar
    I feel you can forward this to Satvishayam members *நகரத்தார் சமூகத்துக்கு நமஸ்காரம்*
    The article below is by Shri Gurumurthy in this week's Thuglak. Title above is by the originator of this forward.
    *சுப்புசுந்தரம் செட்டியார் தம்பதிகளின் பாக்கியம்*
    'உன் மனம் சுத்தமாக இருந்தால், இறையருள் உன்னைத் தேடி வரும்' என்று கூறினார் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர். அப்படிப்பட்ட இறையருள், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சுப்புசுந்தரம் செட்டியாரை நாடிவந்துதான், 238 ஆண்டுகள் கும்பாபிஷேகமே நடக்காத காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.


    நாட்டின் முக்கியமான க்ஷேத்திரமான காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் செய்யும் பொறுப்பையும், கௌரவத்தையும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் உத்தரப் பிரதேச அரசாங்கம் ஏன், அளித்தது என்று அறிந்து கொள்ள அவரை தொடர்பு கொண்டேன்.


    அவர் கூறிய விபரங்கள் ஆச்சரியமாக இருந்தன. அது மட்டுமல்லாமல், எப்படி அந்நியர்களின் படையெடுப்புகளால் சமயமும், கலாச்சாரமும், சம்பிரதாயமும் நலிந்த வட இந்தியக் கோவில்களை புதுப்பிக்க தமிழகத்தின் சமய, ஆன்மிக, ஆகம சாஸ்திரத்தின் உதவி அவசியம் என்பதும் அவர் கூறியதிலிருந்து தெரிந்தது.


    சென்ற வாரத்தின் துக்ளக் எச்சரிக்கைப் பகுதியில், வடக்கில் இருக்கும் காசிக்கும், தென்கோடியில் இருக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கும் 160 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சம்பந்தம் பற்றி கூறப்பட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.


    பொலிவு பெறும் காசி, ஆலயம்
    2014-லிருந்து வாராணசி, பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியானதால், கடந்த நான்கு ஆண்டுகளில் குப்பை கூளங்கள் பெருமளவில் அகற்றப்பட்டு, சாலை நெரிசல் குறைவாகி, பிரகாசமான மின்சார விளக்குகளுடன், புராதன காசி நகரம் இப்போது பொலிவுடன் திகழ்கிறது. நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் நாடும் காசி விஸ்வநாதர் கோவில், ஒற்றையடிப் பாதை போல நீளமாகப் போகும் குறுகலான வழியின் முடிவில், ஒரு இடுக்குக்குள் பதுங்கி இருக்கிறது.


    1699-ஆம் ஆண்டு, ரம்ஜான் மாதத்தில் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை பீரங்கியால் தாக்கி இடித்து, (இடிந்த கோயில் பாதி இன்றும் வெளியில் தெரியும்படி) அதன் மீதும், அதற்குப் பக்கத்திலும் ஞானவாபி மசூதியைக் கட்டினார். அதுதான் பிரம்மாண்டமாகத் தெரிகிறது.
    சமீப காலம் வரை பக்தர்கள் 'இந்த கோவிலுக்குள் வரவேண்டியிருக்கிறதே' என்று மனம் வெறுக்கும் நிலையில் இருந்தது விஸ்வநாதர் கோவில்.


    ஆனால், 2014-க்குப் பிறகு மத்திய - மாநில அரசுகள் கோவிலுக்கு அருகிலுள்ள சொத்துக்களை விலைக்கு வாங்கி, அத்துமீறல்களை அகற்றி, கோவிலை விரிவுபடுத்தி வருகின்றன. கோவிலை பழையபடி பிரம்மாண்டமான நிலைக்குக் கொண்டு வர நடக்கும் முயற்சிகள் வெற்றி பெற பல ஆண்டுகள் ஆகும். ஆனால், இப்போது இருக்கும் அந்தச் சிறிய கோவில் (போகும் பாதை கரடுமுரடாக இருந்தாலும்) உள்ளும், சுற்றுப்புறமும் சீர்படுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் திகழ்கிறது.


    அந்த நல்ல மாற்றத்துக்கு சுப்புசுந்தரம் செட்டியார் - அன்னபூரணி ஆச்சி தம்பதி செய்த முயற்சிகளும், அவர்கள் நடத்திய கும்பாபிஷேகமும்தான் காரணம்.


    இந்தத் தம்பதிக்கு எப்படி இந்த பாக்கியம் கிடைத்தது?


    சுப்புசுந்தரம் செட்டியார் 160 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரத்தின் நிர்வாக குழுவின் துணைச் செயலாளராக 2016-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகுதான் அவர் அடிக்கடி காசிக்குச் செல்ல ஆரம்பித்தார்.


    ஈசனை மனத்தால் வழிபட்டால் போதும் என்று நினைக்கும் சுப்புசுந்தரம், ஆழ்ந்த சிவபக்தையான அன்னபூரணி ஆச்சியின் உந்துதலால்தான் கோவில்களுக்குச் செல்வார். அதேபோல ஆச்சி கொடுத்த ஊக்கத்தில் அவர் விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்வதும் வழக்கமாகியது. அதனால் ஆலய நிர்வாகிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.


    காலப்போக்கில் ஆலயத்திலிருக்கும் குறைகளை கோவில் நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறி, தமிழகத்தில் நகரத்தார் நிர்வகிக்கும் பிள்ளையார்பட்டி கோவில், மற்ற ஆலயங்கள், எப்படி அழகாகவும், தூய்மையாகவும் நிர்வகிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் ஃபோட்டோ, வீடியோ மூலம் காட்டி அவர்களுக்கு விவரித்தார் செட்டியார்.


    அரசு நியமித்த அறங்காவலர்களின் மேற் பார்வையில் விஸ்வநாதர் ஆலயம் இருந்தாலும், அதன் நிர்வாகம் அரசு அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்களாகவும், நாணயமானவர்களாகவும் இருந்தாலும், கோவில் சடங்கு, சம்பிரதாய முறைகள் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை.


    நாடு முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் காண வரும் விஸ்வநாதர் ஆலயம், மிகவும் சிறியதாக இருப்பதால், தூய்மையாக வைத்துக் கொள்வது கடினமாக இருக்கிறது. ஆனாலும், அது குப்பையும் அழுக்குமாக இருக்கக் கூடாது. தூய்மையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துக் கூறி, அவர்களுடைய நன்மதிப்பையும் நட்பையும் பெற்றார் சுப்புசுந்தரம்.


    கோவிலை மேம்படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர், காலப்போக்கில் ஆலய நிர்வாக அதிகாரிகளின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.


    கடந்த பிப்ரவரி மாதம் விஸ்வநாதர் கோவில், அன்னபூரணி சன்னதிக்கு சுப்புசுந்தரம் தம்பதி வெள்ளிக் கதவு போட்டனர். அந்தத் தருணத்தில் தென்னிந்தியக் கோவில்களில் எப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கிறது என்று விளக்கி, சுப்புசுந்தரம் தமிழகக் கோவில்கள் கும்பாபிஷேக வீடியோக்களை காண்பித்த பிறகு தான், அங்கு உள்ள நிர்வாகிகளுக்கு கும்பாபிஷேகத்தின் மகத்துவம் புரிந்தது.


    ஔரங்கசீப் புராதன கோவிலை இடித்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தூர் மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர், தற்போது இருக்கும் (லஸ் பிள்ளையார் கோவில் போன்ற) சிறிய கோவிலைக் கட்டி, 1777-ஆம் ஆண்டு அதற்கு கும்பாபிஷேகம் செய்தார்.


    அதுதான் விஸ்வநாதருக்குக் கடைசியாக நடந்த கும்பாபிஷேகம்.


    எனவே, அதிகாரிகளிடம் சுப்புசுந்தரம் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்களுக்கு ஒரு மெயிலும் அனுப்பினார்.


    அதை அதிகாரிகள் ஏற்று, கடந்த 2018 பிப்ரவரி 22-ஆம் தேதியிட்ட கடிதத்தில், கும்பாபிஷேகம் செய்யும் பொறுப்பையும் அதிகாரத்தையும் சுப்புசுந்தரத்துக்கே தனிப்பட்ட முறையில் கொடுத்தனர்.


    *பிள்ளையார்பட்டி Vs காசி*


    தமிழக முறைப்படி, ஜூலை 5-ஆம் தேதி, கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.


    1935-ல் மஹாராஜா ரஞ்சித் சிங், விஸ்வநாதர் கோவிலுக்கு அமைத்துக் கொடுத்த ஒரு டன் எடையுள்ள தங்க கோபுரம் பாலிஷ் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, கலசங்கள் அமைக்கப்பட்டன.


    கும்பாபிஷேக செலவு முழுவதையும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே ஏற்றனர்.


    உ.பி. அரசுக்கோ, காசியில் வேறு யாருக்கோ எந்தவித செலவும் கிடையாது. பிரபல முருகப்பா தொழில் குழுமத்தைச் சேர்ந்த எம்.வி.சுப்பையா யாகசாலை பொறுப்பை ஏற்றார். சுப்புசுந்தரம் தம்பதியினர், கோயம்புத்தூரைச் சே்ர்ந்த கே.சி.பி. தொழில் குழுமத்தைச் சேர்ந்த இந்திரா தத், ஈரோடு சிவகுமார் தம்பதியினர், வாலாஜா முத்துககுமார் தம்பதியினர், மற்றும் சிலர் பெரிய அளவிலும், சிறிய அளவிலும் பொறுப்புகளை ஏற்க, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாகத் துவங்கின.


    புகழ் பெற்ற தென்னிந்திய கோவில்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கும்பாபிஷேக சடங்குகளில் தேர்ச்சி பெற்ற வேத பண்டிதர்கள், குருமார்கள் வந்து யாகசாலைப் பணிகளைச் செய்தனர்.


    சுப்புசுந்தரம் தம்பதியினர் ஜூலை 2-ஆம் தேதி பிள்ளையார் பூஜையுடன் சடங்குகள் துவங்க, ஜூலை 5 அன்று பிள்ளையார்பட்டி கோவில் குருக்கள் டாக்டர் பிச்சை கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்துக்குக் காசியில் மிகப் பெரிய வரவேற்பு நடந்தது.


    விஸ்வநாதர் கோவில் பூஜை செய்யும் 55 பண்டாக்கள் (பூஜாரிகள்) அனைவரும் முன்னின்று ஆதரவு தந்து, கும்பாபிஷேகம் செய்தவர்களை அரவணைத்து, ஆசீர்வதித்து, எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, கோபுரத்தின் மேலும் ஏறி, கலசங்களுக்கு அபிஷேகம் செய்தது எல்லோரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. காரணம், கோவில் பூஜை சடங்குகள் செய்யும் உரிமை தங்களுடையது மட்டுமே என்று நினைக்கும் பண்டாக்கள் கோவில், பூஜை சடங்குகளில் மற்றவர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்தும், குறிப்பாக தமிழகத்திலிருந்தும் வந்த குருக்களையும், பண்டிதர்களையும் வரவேற்று உபசரித்து, சடங்குகளைச் செய்ய அனுமதித்தது, காசி வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று.


    *தமிழகத்துக்குப் பெருமை*


    முதல் முறையாக கும்பாபிஷேகம் என்பதால், மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்கவில்லை. கங்கை நதி கரையிலிருந்து தீர்த்த கலசங்களை பண்டிதர்களும், குருமார்களும் தலையில் சுமந்து கொண்டு வந்த போது, வழிநெடுக மக்கள் மாடிகளிலிருந்து மலர் தூவி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அரசாங்க அதிகாரிகள், போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், அறிவுஜீவிகள் உள்பட வாராணசியின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் கும்பாபிஷேக விழாவில் பெருமளவில் பங்கு கொண்டனர். எனவே, எல்லா வகைகளிலும் கும்பாபிஷேகம் பெரும் வெற்றி என்று பெருமைப்படும் சுப்புசுந்தரம், தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நாம் உ.பி. அரசுக்கு நன்றி கூறவேண்டும் என்றார்.
    முடிவாக, வரலாற்று முக்கியம் வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை 238 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்கோடியிலிருந்து வந்து தமிழர்கள் நடத்தினார்கள் என்கிற பெருமையை நமக்கு அளித்த சுப்புசுந்தரம் செட்டியார் தம்பதிக்கும், அதற்குப் பல வகைகளிலும் உதவிய தமிழ் பெருமக்களுக்கும், நகரத்தார் சமுதாயத்துக்கும் தமிழகம் வாழ்த்து கூறவேண்டும். வருத்தத்துக்குரிய ஒரு ஆச்சரியம், தமிழகத்தைச் சே்ர்ந்து 60,000 ஜனத்தொகையே கொண்ட ஒரு சிறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இவ்வளவு பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் செய்திருக்கிறார்கள் என்பது பற்றி தமிழகப் பத்திரிகைகளோ, ஊடகங்களோ மூச்சுக் கூட விடவில்லை.


    ஏன் என்பதை விளக்கும் கடமை அவர்களுக்கு இருக்கிறது.


    பி.கு: சென்ற வாரம் எச்சரிக்கை பகுதியைப் படித்துவிட்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ஏ.ஆர். லஷ்மணன், நகரத்தார் செய்த காசி கும்பாபிஷேக பணியை ஆற்றிய சுப்பசுந்தரத்தையும், அதை வெளிக்கொண்டு வந்ததற்காக துக்ளக்கையும் வெகுவாகப் பாராட்டினார். இந்தப் பகுதியில் சுப்புசுந்தரத்தை பற்றி எழுதுவதற்கு அவரும் ஒரு காரணம்


    *நன்றி: துக்ளக்*

  • #2
    Re: F w: Kasi Viswanathar

    A blessed couple from Tamil Nadu of the illustrious Nagaraththaar community, well known for maintaining tempkes. May they live long and continue this divine activities. TamilNadu, nay,the Nation, bows down to them. Om Namachchivaaya!
    Last edited by R.Varadarajan; 17-08-18, 08:57.

    Comment

    Working...
    X