PDA

View Full Version : Chaandu urundai - murhukumara swamy-miracle -spiritual storysoundararajan50
13-09-2018, 07:24 AM
Chaandu urundai - murhukumara swamy-miracle -spiritual story
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
*திருச்சாந்து உருண்டை.*
டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில்......


அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு, வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை, கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர்.


அப்படி வரும்பொழுது, தமிழகத்திலும் புகுந்து, சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது.


அப்போது, படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.


பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை.


இந்நிலையில், வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள, செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை, 'முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே!, அருள் வடிவான உன் மகிமை அறியாமல், உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே!, என்று முறையிட்டு அழுதார்.


அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில், முருகப்பெருமான் எழுந்தருளி, சரவணா!, வருத்தங்கொள்ளாதே! அத்தளபதிக்கு, கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கியுள்ளது.


நாளை காலை, இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து, அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார்.


கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில், ஒரு பொட்டலம் இருந்தது.


விடிந்ததும், தளபதி இருந்த முகாமிற்கு சென்று, காவலர்களிடம், உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார்.


அவரை, அழைத்துச் சென்று, தளபதியிடம் விஷயத்தை கூறினர்.


ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால், உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி.


தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை.


அதில், வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான, திருச்சாந்து உருண்டை இருந்தது.


அதை தளபதியிடம் கொடுத்து, உண்ண சொன்னார்.


சாப்பிட்ட மறுநொடி, தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது.


இதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி, வேண்டியதைக் கேளுங்கள் என்றார்.


சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார்.


இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி.


தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன், ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார்.


இதை நினைவுறுத்தும் விதமாகத் தான் இன்றும், செல்வ முத்துக் குமார சுவாமிக்கு, தீபாராதனை நடைபெறும் காலங்களில், தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு, உபச்சாரம் நடைபெறுவதை காண்கிறோம்.


அருள் கிடைக்க வேண்டிய நேரத்தில், யார் மூலமாகவாவது, அல்லது ஏதோரு செயல் மூலமாவது தெய்வம், கண்டிப்பாக நமக்கு அருள் செய்து காப்பாற்றும்! இது சத்தியமான உண்மை.


இந்தத் தல தலவரலாறை ஏற்கனவே, 276 தேவாரம் பாடல் பெற்ற தல தரிசன வரிசையில் தந்திருந்தோம்.


மேலும், மறுபடியும் இப்போது இத்தகவலை தங்களுக்குத் தருவதற்கு மேலும் ஒரு அதிசயம் அடியேனுக்கு நடந்துள்ளது.


சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னால், கும்பகோண மார்க்கத்தில் தலயாத்திரை செய்தபோது, வைத்தீஸ்வரன் திருக்கோயில் சென்று தரிசனம் செய்திருந்தோம்.


தரிசனம் முடித்து புறப்படுகையில், ஆலயத்தின் பிரசாத மருந்தான சாந்து உருண்டை வாங்கி வந்தோம்.


வீட்டில் இருப்பவர்களுக்கோ, எனக்கோ, உடலில் எந்த உபாதையும் அன்று இருக்கப் பெறவில்லை.


இருப்பினும், வாங்கி வந்த ஈசனின் பிரசாதமான சாந்து உருண்டையை, வீட்டில் இருக்கும் விபூதி பொட்டியில் போட்டு வைத்து விட்டோம்.


மூன்று வருடங்களாகவே விபூதி பொட்டியிலிருந்து விபூதியை எடுத்து உபயோகித்து வந்துள்ளோம்.


அதனுள்ளேயே திருச்சாந்து உருண்டை மூழ்கிய வண்ணமே இருந்து வந்திருக்கிறது. இதை மறந்தும் போனோம்.


தற்சமயம் அடியேனுக்கு இரண்டு வாரமாய் இடுப்பு வலி வந்து பலமான அவஸ்தைக்குள்ளாகி இருந்தோம்.


மருத்துவமணை செல்லாது காலதாமதித்து வந்தோம்.


வலி அதிகமாகி விட்டது..


அனைவரும் கிட்னியில் கல் அடைப்பு, கிட்னி செயலிழக்கப் போகிறது என பயங்காட்டி விட்டனர்.


அதற்குத் தகுந்திற்போலதான் தேகத்தில் வலியும் இருந்து கொண்டு பிரானனை வாங்கியது.


ஏற்கனவே, ஒரு வருடத்திற்கு முன்பு எலக்ட்ரிக் ஷாக் விபத்து ஏற்பட்டு மீண்டு வந்தததே ஈசன் செயல்.


அப்போதும் டாக்டர் இதேதான் சொல்லி அனுப்பியிருந்தார்.


எலக்ட்ரிக் ஷாக்-லிருந்து தப்பி விட்டீர்கள்!,இதன் தாக்கம் பின்விளைவுகளாக வரும் என்றும் டாக்டரும் கூறியிருந்தார்.


இதை எண்ணி பயந்தே டாக்டரிம் செல்லாது இருந்தேன்.


போன வாரம் நடுஇரவில் வலி கூடுதலாகி மிக சிரத்தையாக இருந்தது. தூக்கம் ஒத்துழைக்கவில்லை.


நடுஇரவில் எழுந்து, அடியேன் வீட்டிலிருக்கும் நடராஜர் திருமேனி பெருமான் முன்பு வந்து வணங்கி நின்று, விபூதி பொட்டியிலிருந்து, வெள்ளிய விபூதியை அள்ளியெடுத்து தரித்துக் கொண்டோம்.


மீண்டும் கொஞ்சம் விபூதியை அள்ளி, வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளலாம் என, விபூதிப் பொட்டிக்குள் கையை நுழைத்தோம்.


கைவிரலுக்கு திருச்சாந்து உருண்டை சிக்கியது.


ஈசன் அருள முனைந்து விட்டான்போலும்......., நவாப்-ன் தளபதி விழுங்கி வைத்ததுபோல நாமும், விழுங்கலாம் என முடிவு செய்து.......


திருச்சாந்து உருண்டையிலிருந்து ஒன்றை எடுத்து விழுங்கி, நீரை அருந்தினேன்.


மறுநாள் வலி பாதி குறைந்திருந்தது.


தொடர்ச்சியாக நான்கும் நாள் சாப்பிட்டேன்.


வியாதியின் வலி முழுமையாகக் காணவில்லை.


இந்த திருச்சாந்து உருண்டை, பிணியைப் போக்கும் மருந்துருண்டை.


புள்ளிருக்குவேளூர் தலத்தில் இருக்கும் இறைவர் வைத்தியநாத ஈசுவரர் என அழைக்கப்படுகிறார்.


மருந்தாகிய தலம் என்பதற்கு ஆதாரமாக அப்பர் பதிகமே சான்று.


🔔பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந்-தந்திரமும்-மருந்து மாகித்
தீராநோய்-தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.


🙏🏻ஆயிரம் திருநாமங்களை முன்னின்று உச்சரித்துத் தேவர்கள் துதிக்கும் பெருமானாய்த் தன்னை விடுத்து நீங்காத அடியவர்களுக்கும் என்றும் பிறப்பெடுக்கவாராத வீடுபேற்றுச் செல்வத்தை வழங்குபவனாய்,


மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் முறைகளும் மருந்துமாகித்-தீராத- நோய்களைப்- போக்கியருள வல்லானாய், திரிபுரங்கள் தீப்பற்றிச் சாம்பலாகுமாறு திண்ணிய வில்லைக் கைக்கொண்டு போரிடுதலில் ஈடுபட்டவனான புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.


திருச்சிற்றம்பலம்.


அடியார்கள் கும்பகோணம் மார்க்கத் தலங்களுக்குச் செல்லும்போது, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து, திருச்சாந்து உருண்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.


இதுபோல நம் வாழ்விற்குத் தேவையான எண்ணற்ற செயல்களை ஈசன் மறைந்திருந்து அருளிக் கொண்டிருக்கிறான்.


சிலர் உணர்வர், பலர் உணரப்பெறாது இருப்பர்.


நாயன்மார்கள் காலத்தில் ஈசன், மறைந்திருந்து சோதனைகள் தந்து, இறுதியில் விடைமேல் காட்சியருளி தன்னகத்தே அனைத்துக் கொண்டான்.


இக்கலி வாழ்வில், நம்மை முழுவதுமாக, அவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். இன்றும் என்றும் மறைந்திருந்தே அருள்வான்.


விடைமேல் காட்சி கிடைக்கா?. புண்ணியமும், தொண்டும் செய்தொழுகினால், சேர்த்து வைத்த பாவவினைகள் வேனுமானால் அறுபடுவது உறுதி.


அவன் நோக்கத்தினை நாமதான் சரிய அறியப் பெறாது உழன்று வருகிறோம்.