Announcement

Collapse
No announcement yet.

Viruthi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Viruthi

    என் அண்ணன் பிள்ளய்க்கு குழந்தை perandadu , அதனால் 10 நாட்கள் விருத்தி , பூஜை, விளக்கு ஏறுதல் கூடாது என்று சாஸ்திரிகள் கூறினர் ,ஏன் ? விள்ளகம் தேவை .

  • #2
    Re: Viruthi

    ஶ்ரீ:
    பிறப்பின் (ஜனனத்தின்) போதும்,
    இறப்பின்(மரணத்தின்) போதும்,
    ஆன்மா இடம் மாறுகிறது. அதாவது ஒரு சரீரத்தை விட்டு வேறு சரீரத்திற்கு இடம் பெயர்கிறது.
    ஜனனத்தால் நம் வம்சம் வ்ருத்தியாகிறது அதாவது பெருகுகிறது.
    மரணத்தால் நம் வம்சம் க்ஷயமாகிறது அதாவது குறைகிறது.
    இரண்டு செயல்களிலும் ஏதாவது ஒரு சரீரம் மிகுந்த உபாதைக்கு ஆளாகிறது.
    இப்படிப்பட்ட செயல்களின்போது, நமக்கு விதிக்கப்பட்ட சாஸ்த்ரப்படியான ப்ராஹ்மண கர்மாக்களை
    நம்மால் அதாவது மிக நெருங்கிய உறவினர்களால் சரிவரச் செய்யமுடியாமல் போவதற்கு வாய்ப்பு
    நிறைய இருக்கிறது.
    ஆனால் சாஸ்த்ரப்படி ப்ராஹ்மண கர்மாக்களை செய்யாது விட்டால் பாபம் என்று உள்ளபடியால்,
    இதுபோன்ற நெருக்கடியான நேரங்களிலும் சாஸ்த்ரம் கண்டிப்புடன் இருந்தால்,
    "சாஸ்த்ரம் ஆயிரம் அம்மாக்களுக்குச் சமம்" என்ற அதன் பெருமைக்கு பங்கம் அல்லவா?
    அதனால், நெருக்கடிக் காலங்களில் சாஸ்த்ரம் அளிக்கும் கர்ம விடுமுறையே தீட்டு ஆகும்.
    இது சாஸ்த்ர ரீதியான விளக்கம், இதன் பின்னணியில் மருத்துவ விஜ்ஞான ரீதியான அவசியமும்
    இருக்கின்றது.
    ப்ரசவம் அல்லது மரணம் சம்பவிக்கும் இடங்களில் நித்திய ஒழுக்கத்தை (நடைமுறை சுகாதார பராமரிப்பை)
    சரிவரப் பேணமுடியாத காரணத்தால் நோய்த்தொற்று, சுகாதாரக்கேட்டுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கும்,
    அதன் பாதிப்பு அடுத்தவர்களை பாதிக்காமல் இருப்பதற்காக, பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தும்
    நோக்கத்தில்தான் தீட்டு என்று விதிக்கப்பட்டுள்ளது.

    உறவு உள்ள அளவுக்கு நெருக்கம் இல்லை அதனால் நான் தீட்டை பேணவேண்டியதில்லையே? என்று
    கேள்வி எழுமானால், நெருக்கம் உள்ளதோ, இல்லையோ, அந்த விதியைக் கடைப்பிடிப்பதிலிருந்து
    நெருக்கத்தை உத்தேசித்து விலக்கு அளித்தால் அந்த விதியே பின்னாளில் பயன்பாட்டில் இல்லாமல்
    போய்விடும், நெறிமுறை பாழாகிவிடும், எனவே நெருக்கம் உள்ளதோ இல்லையோ நெறிமுளைகள்
    கடைப்பிடிக்கப்பட்டு வந்தால்தான் காலத்திற்கும் அவற்றின் பயன்பாடு இருக்கும். இல்லாவிடில் மறைந்துபோகும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Viruthi

      Thank you for the explanation.
      Venkataraghavan Narayanan

      Comment

      Working...
      X