PDA

View Full Version : 12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.



soundararajan50
20-12-2018, 07:22 AM
12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி சிவம். பிறக்கும் நேரம் "ஷடசீதி" {ஷடாங்கன் சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன புண்ணியகாலம் சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண புண்ணியகாலம் சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.


#பெரியதேர்கள் உள்ள ஸ்தலங்கள்.


திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.


பன்னிரு #ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.


1, கேதாரம் இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் {ஆந்திரம்} ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் இராமேஸ்வரம் {தமிழ்நாடு}


#சப்தவிடங்கத் ஸ்தலங்கள்.


1, திருவாரூர் வீதிவிடங்கர் அஜபா நடனம்.
2, திருநள்ளாறு நகரவிடங்கர் உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் சுந்தரவிடங்கர் வீசி நடனம்.
4, திருக்காறாயில் ஆதிவிடங்கர் குக்குட நடனம்.
5, திருக்கோளிலி அவனிவிடங்கர் பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்.
7, திருமறைக்காடு புவனி விடங்கர் ஹம்ஸபாத நடனம்.


#பஞ்சசபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.


1, திருநெல்வேலி தாமிர சபை ந
2, திருக்குற்றாலம் சித்திர சபை ம
3, திருவாலங்காடு இரத்தின சபை சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} பொற்சபை வ
5, மதுரை வெள்ளி சபை ய


திருச்சிற்றம்பலம்.