PDA

View Full Version : ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்ĪPadmanabhan.J
29-10-2012, 03:02 PM
மகா பெரியவாள் பலகையில் சாய்ந்துகொண்டு, திருவடிகளை நீட்டி உட்கார்ந்து கொண்டிருப்பது எல்லோரும் காணக்கூடிய காட்சி. குறிப்பாக, மேனாவுக்குள் இருந்தபடி தரிசனம் கொடுக்கும்போது, பாதங்கள் நீண்ட நிலையிலேயே இருக்கும். "பெரியவா பாதங்களை வைத்துகொள்வதற்கு மெத்தென்று ஒரு விரிப்பு செய்துகொடுத்தால் என்ன?" ஸ்பான்ஞ் (காற்றறை நிறைந்த, இலேசான, மிருதுவான ரப்பராலான சொகுசு தயாரிப்பு) வாங்கி, அகலமான, வட்டமான வெட்டினேன்; மேலே, வெல்வெட் துணி வைத்து தைத்தேன்; நடுவில் வேறு ஒரு கலர் வெல்வெட்டில் , எட்டு இதழ் தாமரை; ஓரங்களில் லேஸ் வைத்து அழகுபடுத்தினேன்....
பெரியவாள் தரிசனத்துக்கு போன சமயத்தில், அவர்கள் மேனவில் உட்கார்ந்து இருந்தார்கள். நானும் என் அம்மாவும் ஸ்பான்ஞ்தயாரிப்பை பெரியவாளிடம் சமர்பித்தோம் (மேனாவை ஒட்டினாற்போல், தரையில் வைத்தோம்) . பெரியவாள், "அஷ்டதளமா?" என்று கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. "சரி, வெச்சிட்டு போ" என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே! இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்? பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தர். "உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா?" "ஒரு நிமிடம் யோசனைக்கு பின், "அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்..." என்று தொடங்கினார் அவர். "இன்னொன்று ..." "ஸிந்தூராருண விக்ரஹாம்... " "அதுதான்! அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா..." அவை போய் கேட்டுகொண்டு வந்தார். "அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து..." என்று அர்த்தம் சொன்னார். மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து பெரியவாள் சொன்னார்கள்; "சாஸ்திரிகளே! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்காணும், கொஞ்சம் நெருடலா இல்லை?" "ஆமாம்" என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். (நீ என்ன அர்த்தம் சொல்றே? - என்று பெரியவா கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என்று தவிப்பு!) "அது பொருத்தமாயில்லையோனோ?..." "ஆமாம்.." "இப்போ, இந்த பாதபீடத்தை பார்த்ததும் என் சந்தேகம் ஓடியே போயிடுத்து!" பெரியவா விளக்கினார்கள்: "அம்பாள் தன் செவன்ன பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறள். - என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, "கடஸ்த்த" வை எடுத்திட்டு, "படஸ்த்த" வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்ன துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே "படஸ்த்த" என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், "கடஸ்த்த" என்று வந்திருக்கலாமோன்ன& படறது. படஸ்த்த = துணியில் என்பதை "கம்பளியில்" (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே! ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.". நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை! "ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தன். இதை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு". இதை - இந்த வெல்வெட் பாதபீடத்தை! எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்பனத்தால் பெரியவாளின் சந்தேகம் தீர்ந்ததாம்!.

soundararajan50
31-10-2012, 10:50 AM
Wonderful Periyaval Periyavalthan

Padmanabhan.J
01-11-2012, 12:54 PM
Sir
When we read about Periya or even hear about His miracles, we feel, we are all blessed to live when he was moving on this earth.
Thank you Sir.