Announcement

Collapse
No announcement yet.

vaisuvadevam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • vaisuvadevam.

    வைஶ்வ தேவம் என்பது என்ன.
    நித்ய கர்மாவான வைஶ்வ தேவத்தில் எல்லா தேவர்களும் ஆராதிக்க படுகின்றனர். இதில் ஐந்து மஹா யக்ஞங்கள் அடங்கியவை.தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம்;மனுஷ்ய யக்ஞம், ப்ரம்ம யக்ஞம்.


    தேவ யக்ஞம்:- தேவதைகளை குறித்து ஹோமம் செய்வது.தினமும் காலயும் மாலையும் அக்னியில் ஹோமம் செய்வது.
    பித்ரு ய்க்ஞம்:- பிண்டத்தை பித்ருக்களை உத்தேசித்து ஸ்வதா நம; என்று சொல்லி கொடுப்பது.
    பூத யக்ஞம்:- வைஸ்வ தேவம் செய்த பிறகு காக்கைக்கு அளிக்க படும் அன்னம் பூத பலி.
    மனுஷ்ய யக்ஞம்:- வைஶ்வ தேவத்திற்கு பிறகு அதிதியாக வந்த பிராமணர்களுக்கு அன்னம் அளிப்பது.
    ப்ருஹ்மயக்ஞம்:- தினம் வேதத்தை அத்யயனம் செய்வது.


    சில க்ருஹ்ய ஸூத்ரங்களின் படி விவாஹமான 15 நாட்களுக்குள் வைஶ்வ தேவம் குரு முகமாக உபதேசம் பெற்றுக்கொண்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.இதற்கு முன் தினம் கூஷ்மாண்ட ஹோமம் செய்ய வேண்டும்.


    வைஶ்வ தேவ விதிகள் ஒவ்வொரு ஸூத்ரத்தை அனுஷ்டிப்பவருக்கு பேதங்கள் உள்ளதால் அவரவர் ஸூத்ரப்படி செய்ய வேண்டும்.


    பஞ்ச ஸூனா என்ற தோஷம்:- 1. கண்டினி. உரல், உலக்கை, கத்தி அறுவாமணை, இவைகளை உபயோக்கிக்கும் போது ஏற்படும் க்ருமி முதலான அழிவு.
    2. பேஷனி:- அம்மி, குழவி, மிக்சி அறைக்கும் போது ஏற்படும் ஜீவ ஹிம்சை.
    3. சுள்ளி:- சமையல் அடுப்பு மூட்டுவதால் ஏற்படுவது.
    4. உத கும்பம்:- ஜலம் வைக்கும் பாத்திரத்தால் ஏற்படும் க்ருமிகள் நாசம்.
    5. உபஸ்கரம்:- . விளக்குமாறு, துடைப்பம் போன்றவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் ஜீவ ஹிம்சை.


    தினந்தோறும் தவிற்க முடியாமல் க்ருமிகள், புழுக்கள், எறும்பு இவற்றின் வதத்தால் ஏற்படும் ஜீவ ஹிம்சை யான பாபங்கள் போக்கிகொள்வதற்கு தினமும் காலை, மாலை இரு வேளையும் வைசுவதேவம் செய்ய வேண்டும். வைசுவதேவத்தில் செய்யும் ஹோமங்கள் ஹுதம் எனப்படுகிறது.


    ஹுதம்:- ஸூத்ரங்களில் விதிக்க பட்ட தேவதைகளுக்கு பாகம் செய்த அக்னியில் சுத்தமாக தயாரிக்கபட்டதும் அன்று நாம் ஆகாரமாக எடுத்துக்கொள்ள இருப்பதுமான
    ப்ரஸாதத்திலிருந்து (அன்னம்) ஹோமம் செய்ய வேண்டும். நிவேதனம் செய்யு முன்பு வைஶ்வதேவத்திற்கான அன்னத்தை பிறித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த அன்னத்திலிருந்துதான் உத்தம ஸன்னியாசிகளுக்கு பிக்ஷை இட வேண்டும். இதற்கு அகாமஹத ஶ்ரொத்ரிய பாகம் என்று பெயர்.


    சமையல் செய்த அடுப்பு, இரும்பு அடுப்பு, பாத்திரம், பூமி இவைகளில் அக்னியை வைத்து வைஸ்வதேவம் செய்ய க்கூடாது. ஸ்தண்டிலம் என்னும் மேடையிலோ அல்லது குண்டத்திலோ செய்ய வேண்டும்.


    அன்னத்தினால் வைசுவதேவம் செய்ய முடியாத நிலையில் பழங்களோ அல்லது ஜலத்தால் தர்ப்பண ரூபமாக வைசுவதேவம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் வைசுவதேவ மந்திரங்களையாவது சொல்ல வேண்டும் என்று ஒரு ஸ்ம்ருதி கூறுகிறது.


    வைசுவதேவம் ஆன பிறகு வீட்டின் வாசலில் ஒரு பத்து நிமிடத்திற்கு குறையாமல் அதிதி யை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

    வைசுவதேவ பலி ஹரணத்தில் 36 பலிகள் வைக்க படுகின்றன. வைஹாயஸ பலி, ஶ்வான பலி என வும் பலிகள் உண்டு. க்ருஷ்ண யஜுர் வேதிகளின் பலியின் ஆகாரம் ( வடிவம்)
    வ்யஜனம் ( மூங்கில் விசிறி) போன்று இருக்கும். சில குறிப்பிட்ட பலன் களுக்காக செளனக மகரிஷி நான்கு விசேஷ ஆகாரங்களை விதித்துள்ளார்..


    இந்த பலிகளை கர்மா முடிந்த வுடன் மனைவியே கலைக்க வேண்டும். இயலாத பக்ஷத்தில் வேறு உறவு ஸ்த்ரீகள் கலைக்க லாம்.காலையில் காக்கைகளுக்கும் இரவில் நாய்களுக்கும் இந்த பலிகள் போட பட வேண்டும்.


    இதன் பிறகு பஞ்ச மஹா யக்ஞங்கள். வைசுவதேவம் முடிவில் ஸிம்ஹேமே மன்யு என்ற 72 மந்திரங்களை சொல்லி , நமது சரீரத்தில் உள்ள அவ குணங்களை அந்தந்த ஸ்வபாவங்களுடன் கூடிய ப்ராணி வர்க்கங்களுக்கு மனதால் ஆரோபணம் செய்கிறோம்.


    நாற்சந்தியில் ஒரு உத கும்பத்தில் ஜலம் நிரப்பி , அதில் தன் முகத்தை பார்த்துக்கொண்டு ஸிம்ஹேமஎ மன்யு என்ற 72 மந்திரங்களையும் சொல்லி , கிழக்கு பக்கம் பார்த்துகொண்டு தன் பின்பக்கமாக நிருதி திக்கில் வீசி எறிந்து விட்டு கால் அலம்பி, ஆசமனம் செய்து வந்த வழியே வீட்டுக்கு திரும்புவது சிலர் ஆசாரத்தில் உள்ளது.


    வியாஸர்:- எவர்கள் வைசுவதேவம் இல்லாமலும் , அதிதி பூஜை இல்லாமல் இருக்கிறா ர்களோ அவர்கள் வேத அத்யயனம் செய்திருந்தாலும் ப்ராஹ்மண்யத்தை அவர்கள் இழக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

  • #2
    Re: vaisuvadevam.

    Dear sir,
    I want to perform it. So please kindly provide me the mantras and procedures involved in it. I want the procedure and mantras according to apastamba sutra.

    Comment

    Working...
    X