Announcement

Collapse
No announcement yet.

TAMIL SONG FOR LIGHTING LAMP

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • TAMIL SONG FOR LIGHTING LAMP

    Tamil Song For Lighting Lamp?

    Use Kuthu Vilakku. Lit two faces at least facing east. Light the lamp both in the morning and evening in the pooja room.

    1) (i) பொய்கை ஆழ்வார்:

    'வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
    சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
    இடராழி நீங்குகவே என்று'

    The Earth is my lamp, the ocean is the oil, and the radian sun the flame, I offer this garland of songs at the feet of the radiant discus-bearing Lord, that we may cross the misery-ocean.

    (ii) பூதத்தாழ்வார்:

    'அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா நண்புருகி
    ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நாள்'

    Love is my lamp, eagerness is the oil, my heart is the wick. Melting myself, here I light a lamp and offer this Tamil garland of knowledge.

    2) (i) நான்காம் திருமுறை, 011 பொது, பாடல் எண் : 8:

    'இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே'

    வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.

    (ii) பத்தாம் திருமுறை, ஒன்பதாம் தந்திரம், 17. ஞானோதயம், பாடல் 3:

    'விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி
    விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
    விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
    விளக்குடை யான்கழல் மேவலு மாமே'.

    ஆணவ இருளால் அறிவை இழந்த நின்ற உயிருக்கு அந்த ஆணவ இருளைச் சிறிதே நீக்கும் விளக்குப் போல்வன மாயா காரியங்களாகிய தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகள். அறிவை விளக்கி நிற்கும் கருவிகளாகிய அவைகளையே `அறிவாகிய தான்` என உயிர் மயங்குகின்றது. அம்மயக்கம் நீங்கி, அவ்வுடம்புகளைத் தனக்கு வேறாக நீக்கி, அறிவு விளக்காம் தன்னைத் தான் உணர்ந்து, பின் தன் அறிவிற்குள்ளே அறிவாய் விளங்கும் திருவருளை விளங்கச் செய்து, பின் அந்தத் திருவருளாகிய விளக்கினுள் தானாகிய விளக்கினை, வெயிலின்முன் உள்ள பகல் விளக்குப்போல அடங்கி விளங்கச் செய்யவல்லவர்க்கு அந்தத் திருவருளாகிய ஒளியை உடையவனாகிய சிவனது இன்பக்கடலைப் பெறுதல் கூடும்.

    (iii) திருப்புகழ்:

    'மோகாந்தகாரம் தீர்த்து
    வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே!
    தீபமங்கள ஜோதி நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவகுஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்!'

    3) Recite Lamp Song in Tamil in the evening.

    Thiruvilakku Vazhipaadu song - vilakku paadal-thuthi.

    'விளக்கே திருவே வேதனுடைய நற்பிறப்பே
    ஜோதி விளக்கே! ஸ்ரீதேவி பெண்மணியே!

    அந்திவிளக்கே! அலங்காரப் பெண்மணியே!
    காந்தி விளக்கே! காமாட்சி தேவியரே!

    பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
    குளம்போல நெய்யைவிட்டுக் கோலமுடன் ஏற்றிவைத்தேன்
    பொட்டுமிட்டேன், குங்குமத்தால் பூமாலை சூட்டி விட்டேன்
    ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு மாளிகையுந் தான் விளங்க,
    மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு வந்தேன்.

    மாங்கல்யப்பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!
    சந்தானப் பிச்சையுடன் தனங்களையும் தாருமம்மா!
    பெட்டி நிறையப் பூஷணங்களையும் தாருமம்மா!
    கொட்டில் நிறைய கோ மாதா தாருமம்மா!
    புகழுடம்பைத் தந்து எந்தன் பக்கத்தே நில்லுமம்மா!
    அகத்தெளிவைத் தந்தெனது அகத்தினிலே வாழுமம்மா ||'

    Source: Yahoo answers
    Vidya C Rajagopalan

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X