PDA

View Full Version : சொக்கா என் கடன் உனக்கு பணி செய்து கிடப்பPadmanabhan.J
30-11-2012, 09:28 PM
சொக்கா என் கடன் உனக்கு பணி செய்து கிடப்பதேSource: Mahesh


http://mahaperiyavaa.files.wordpress.com/2012/11/tamil_news_large_592115.jpg?w=960 (http://mahaperiyavaa.files.wordpress.com/2012/11/tamil_news_large_592115.jpg)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த திங்கள் கிழமை கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் மூலவர் சுந்தரேசுவரருக்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழுதுபட்ட பழமையான சங்குகளில் புனித நீர் நிற்காமல் ஒழுகுகிறது, யாராவது 1008 சங்கு நன்கொடையாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன அடுத்த கணமே ,நான் தருகிறேன் என்று தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி ஒத்துக்கொண்டு கடந்த ஒராண்டாக, இதற்கான சங்குகளை பல லட்ச ரூபாய் செலவில் சேகரித்து நன்கொடையாக வழங்கினார்.
பளபளக்கும் புதிய சங்கில் நடக்கும் முதல் அபிஷேகம் என்பதால் அதனை தரிசிக்க திரண்டவர்களில் நானும் ஒருவன்.
மேள தாளங்கள் மங்கள ஒலி எழுப்ப, அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லியபடி ஒவ்வொரு சங்கிலும் இருந்த புனித நீரை சுந்தரேசுவரர் மீது அபிஷேகம் செய்ய பக்தர்கள் மனம் சிலிர்த்தபடி கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய பார்த்தபடி இருந்தனர்.
இந்த நேரத்தில் ஒன்றை கவனித்தேன்.
கருவறையில் ஒரே நேரத்தில் நூறு சங்குகளைக்கூட வைக்கமுடியாது, ஆனால் 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது எப்படி என்று பார்த்தபோது, அபிஷேகம் செய்வதற்கு ஏதுவாக சங்குகளை மரப்பலகையில் வைத்து அடுக்கி தருவதும், அபிஷேகம் செய்து முடித்த சங்குகளை அதே போல மரப்பலகையில் வைத்து எடுத்து வெளியே கொண்டுவருவதுமான பணியில் வெகு வேகமாக ஒருவர் ஈடுபட்டு இருந்தார். பச்சைகலரில் நாலு முழ வேட்டி, இடுப்பில் ஒரு துண்டு, ஒடிசலான தேகத்தில் ஊசலாடியபடி மெல்லிய ருத்ராட்ச மாலை, எங்கும் திருநீறு பூச்சு என்ற தோற்றத்துடன் ஓடி, ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது முகத்தில் இருந்த தேஜஸ் அவரிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று உள் மனது சொன்னது.
விசாரித்த போது அது உண்மை என்றானது
இன்றைக்கு 40 வயதாகும் நந்தகுமார் மதுரை பந்தடியைச் சேர்ந்தவர்.படிக்கும் காலத்தில் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படு கெட்டி. இதன் காரணமாக மதுரையின் முதன்மையான தியாகராஜா பொறியியில் கல்லூரியில் எவ்வித சிபாரிசும் இன்றி எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்ந்து என்ஜீனியரானார். கேம்பஸ் இண்டர்வியூவில் திருவனந்தபுரத்தில் உள்ள டெம் டெக்னோ பார்க் சாப்ட் வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்து சசாப்ட் வேர் என்ஜீனியரானார். அங்கே தனது திறமை காரணமாக திட்ட தலைவராகவும் ஆனார். திருமணம் குழந்தைகள் என்று ஹையாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.
இதுதான் வாழ்க்கை என்று நம்மைப் போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இதுவல்ல வாழ்க்கை என்று திடுமென நந்தகுமார் முடிவெடுத்தார்.
மதுரை திரும்பியவர் தனக்கு பிரியமாக மீனாட்சி கோயிலுனுள் நுழைந்து சுந்தரேசுவரரிடம் ஒரு தீர்வு தேடினார், அங்குள்ள லிங்கோத்பவரிடம், சித்தரிடமும், பஞ்சமுகலிங்கேஸ்வரர் முன்பாகவும் மணிக்கணக்கில் தியானம் செய்த பின், என் தேடலுக்கு முடிவல்ல, விடிவு கிடைத்தது என்கிறார் நந்தகுமார்.
இதுவரை படித்தது படிப்பல்ல இனிமேல் படிப்பதுதான் படிப்பு என்று திருவாசசகத்தையும், தேவராத்தையும், சொக்கநாதர் அந்ததாதியையும், திருமந்திரத்தையும், அபிராமி அந்தாதியையும் ஆழ்ந்து படித்தார். அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார், சொக்கநாதா என் கடன் உனக்கு பணி செய்து கிடப்பதே என்று புதிய மனிதனாக கோயிலுள் நுழைந்தார்.
அந்த நேரம் சுவாமி பூஜை சாமான்களை சுத்தம் செய்யும் பணிக்கு ஆள் இல்லாமல் இருந்தது, ஆகா இதுதானே அருமையான உழவாரப்பணி என்று கேட்டு வாங்கி அந்த காரியத்தை செய்தார். சில பூஜைப் பொருட்களை சுத்தம் செய்யும் போது காஸ்டிக் சோடா பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தும் போது அது கையின் மென்மையான பகுதியை அரித்துவிடும் ஆனால் இந்த மென்பொருள் பொறியாளர் அதுபற்றி கவலைப்படாமல் ஒரு தேர்ந்த உழவாரப்பணியாளர் போல காஸ்டிக் சோடா, சோப்பு தண்ணீர், ஷாம்பு, கருப்பு புளி போன்றவைகளைக் கொண்டு சுத்தம் செய்து தந்தபோது அர்ச்சகர்கள் சந்தோஷப்பட்டனர் அவர்களைவிட மூலவர் சுந்தரேசுவர் அதிகம் சந்தோஷப்பட்டார்.
அன்றாட பூஜைப்பொருட்கள் போக, சிறப்பு விழா நாட்களில், 1008 சங்காபிஷேகம் நடைபெறும் நாட்களிலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சுத்தம் செய்யும் பணிவரும். அதை இன்முகத்துடன் ஏற்று செய்கிறார்.
குடும்பத்தை நடத்த தந்தையாருடன் துணிமணி வியாபாரம் மற்றபடி பெரும்பாலான நேரம் இறைப்பணியெனும் இந்த உழவாரப்பணியே. இந்த பணியை புனிதமாக நினைக்கும் மனதுடையவர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார். இதற்காக நான் தலைவன் என்று அர்த்தம் இல்லை என்றைக்குமே சொக்கநாதரின் தொண்டன் நான் என்கிறார்.
இவரது பணிக்காக ஒரு பைசா கூட யாரிடமும் சம்பளமாகவோ, சம்பாவனையாகவோ, சன்மானமாகவோ வாங்குவது கிடையாது. வற்புறுத்தி தரும்போது அதை அப்படியே சுவாமிக்கு விளக்கு போட எண்ணெய், நெய் வாங்கக் கொடுத்துவிடுவார். இவரது இந்த குணத்தால் இவரை நம்பி பலரும் பல பொறுப்புகளை செய்து தருவார்கள் அதன்படி பள்ளியறை சிம்மாசனம், வெள்ளிப்பலகை, தீபாராதனை வெள்ளித்தட்டு, பைரவருக்கு வெள்ளி கவசம் போன்றவைகளை உபயதாரர் மூலமாக செய்து கொடுத்துள்ளார்.
இறைவனை அடையும் மார்கங்களில் உடம்பால் தொண்டு செய்யும் மார்கத்தை முடிந்த மட்டும் செய்கிறேன். என்னை இந்த தொண்டு செய்ய கடைசிவரை சுந்தரேசுவரர் அருளினால் அதுவே போதும்.