Announcement

Collapse
No announcement yet.

ஃபாஸ்ட் ஃபுட் கிட்னியை பாதிக்கும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஃபாஸ்ட் ஃபுட் கிட்னியை பாதிக்கும்

    கிட்னியை பாதிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு!


    ஒரு வீட்டின் டாய்லெட் ‘பளிச்’சென இருப்பதை வைத்தே அந்த வீட்டின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். அதே போல, நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்த்துவது, கிட்னி எனப்படும் சிறுநீரகம். ரத்தத்திலிருந்து யூரியா மற்றும் கழிவுப் பொருட்களைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் இந்த சிறுநீரகங்கள், வெறும் கழிவுநீக்க உறுப்பு மட்டுமல்ல! சிறுநீரகத்தின் அக்குப் புள்ளிகளைத் தூண்டினால், காதுவலி குணமாகும்; மூட்டுவலி சரியாகும். பற்கள் பலமாகும். இப்படிப் பல்வேறு நன்மைகள் போனஸாகக் கிடைக்கின்றன. அந்த அளவுக்கு மற்ற உடல் உறுப்புகளுடன் பின்னிப் பிணைந்த தொடர்புடன் இருக்கும் சிறுநீரகங்கள் சந்திக்கும் பிரச்னைகளும் அதற்கு அக்குபிரஷர் தரும் தீர்வும் இந்த வாரம்…

    உயிர்வாழ நீர் இன்றியமையாதது. அதற்காகக் குடிக்கிற தண்ணீரெல்லாம் அப்படியே உடலில் தங்கி விடுமா? உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து எடுத்துக்கொள்ளப்பட்டு, மீதி கழிவுநீர் வெளியேறியே ஆக வேண்டும். இதுவே நியதி. அப்படிக் கழிவுநீரை வெளியே அனுப்புகிற வேலையில் ஈடுபடும் உறுப்புகள் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
    சிறுநீரகங்கள் மட்டுமல்ல… உடலின் எந்தவொரு உறுப்புமே பிரச்னையைச் சந்திப்பது இரண்டே வழிகளில்தான்! ஒன்று, உடலிலிருந்து அவற்றுக்கு வரும் சத்து குறைந்தோ அல்லது கூடியோ போயிருக்கும்; அல்லது, அந்த உறுப்புகளின் இயக்கத்துக்கு உதவுகிற சிறுசிறு பயிற்சிகளைக்கூட (உடற்பயிற்சி) நாம் தராமல் இருந்திருப்போம். ரத்தத்தில் தேவையற்ற பொருட்கள் அதிகம் சேர்கிறபோதுதான், அவற்றைப் பிரிக்கத் திணறி செயலிழக்கத் தொடங்குகின்றன சிறுநீரகங்கள்.
    ரத்தத்திலிருந்து கழிவுகளை உறிஞ்சி எடுப்பதில் சிறுநீரகத்தின் ‘மெடுல்லா’ பகுதியே முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ‘மெடுல்லா’ பகுதியை திறன் இழக்கச் செய்து அழுக்குகளை ரத்தத்திலேயே தங்க வைப்பவை எவை தெரியுமா? வலி தெரியாமல் இருக்க தற்காலிகமாக எடுத்துக் கொள்கிறார்களே… அந்த வலி நிவாரண மருந்து மாத்திரைகள்தான். அவற்றின் வேதித்தன்மையால் ‘மெடுல்லா’ பகுதி முற்றிலுமாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு புள்ளிவிபரப்படி, பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 53 வகை வலி நிவாரணி மருந்துகள் தற்போது இந்தியாவில் சர்வசாதாரணமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு தன்னந்தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறது இந்தியர்களின் கிட்னி.

    அடுத்ததாக, இன்றைய சூழலில் ரத்தத்தில் அழுக்குகள் சேர முக்கியக் காரணமாவது, நாம் சாப்பிடும் சாப்பாடு. உப்பும் காரமும் தூக்கலாக இருக்கும் இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் கிட்னிக்கு முக்கிய எதிரி என்றால் எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறார்கள்? உப்பில்லாத பண்டம் குப்பையிலேதான்! ஆனால், அதிலும் அளவு வேண்டாமா? அதிகப்படியான உப்பும் காரமான மசாலாக்களும் நம் கிட்னியையே குப்பையில் போட்டுவிடக் கூடியவை. இவை தவிர, தொடர்ந்து இன்சுலின் ஊசி போடுதல், மது, போதைப் பழக்கம் போன்றவையும் ரத்தத்தை அடர்த்தியாக்கி அதன் மூலம் கிட்னியையும் காலி செய்கிறது.

    இப்படி நாம் கொடுக்கும் வன்கொடுமைகளை எல்லாம் தாங்காமல், ‘போங்கய்யா! என்னால முடியல’ என்று சிறுநீரகம் வேலைநிறுத்தம் செய்துவிட்டால், அதற்குத் தீர்வாக ஆங்கில மருத்துவம் கண்டுபிடித்த வழி டயாலிசிஸ். ஆனால் இது நிரந்தரத் தீர்வா? பணம் செலவாவதுடன் சிறுநீரகத்தின் சக்தியையும் குறைக்கிறது இந்த டயாலிசிஸ். இன்னொரு பக்கம் இதனால் உடல் பலவீனமாகிறது. ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’தான் டயாலிசிஸின் கடைசித் தீர்வாக இருக்கிறது.
    சரி, நமது சிகிச்சைக்கு வருவோம். அக்கு மருத்துவப்படி, உள்ளங்கையின் மையப்பகுதியில் உள்ளது சிறுநீரகத்தின் சக்தி கேந்திரம். அந்த சக்தி முடிவடைவதோ காதில். இந்த உள்ளங்கைப் புள்ளிகள் மீது நாம் எப்போதும் கண் வைத்திருந்தாலே போதும். சிறுவயதில் ‘பருப்பு கடைந்து’ விளையாடியிருக்கிறீர்களா? அந்த விளையாட்டு சிறுநீரகப் புள்ளிகளைத் தூண்டுவதற்குத்தான்.

    அக்கு மருத்துவத்தில் கிட்னியைக் காக்கும் சிகிச்சையை குழந்தை கருவில் இருக்கும்போதே ஆரம்பித்து விடலாம். அதாவது குழந்தையின் கிட்னி பாதுகாக்கப்பட, அம்மா சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தின் 6, 8வது மாதத்தில் தாயின் கணுக்காலில் அழுத்தம் தந்தால், பிறக்கும் குழந்தையின் கிட்னி ஆரோக்கியமானதாக இருக்கும்.

    உள்ளங்கையின் மையத்தில் உள்ள சிறுநீரக சக்திப் புள்ளிகளைத் தூண்டுவதற்கென்றே சில உருளைகள் உள்ளன. மரத்தாலோ, காந்தத்தாலோ செய்யப்படும் இந்த உருளைகளை சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்கள் காலை, மாலை நேரங்களில் மிதமான அழுத்தத்தில் உருட்டி வர, நல்ல பலன் கிடைக்கும்.
    Source; vayal
Working...
X