Announcement

Collapse
No announcement yet.

நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்

    நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..


    குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோரின் பெரிய பொறுப்பு. உணவு, உடை, கல்வி இவற்றுக்கான ஏற்பாடுகளை செய்வதோடு மட்டும் பெற்றோரின் பொறுப்பு முடிந்துவிடாது. குழந்தைகளின் மனோபாவத்தை புரிந்துகொண்டு வழிநடத்துவதே அவர்களை முழுமனிதனாக, புதிய மனிதனாக வளரச் செய்யும்.

    விவரிக்க முடியாத குரூர மனிதனாக ஒருவன் மாறுவதற்கு குழந்தை முதலே அவன் எதிர்கொண்ட வீட்டு சூழ்நிலையே காரணம் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். குழந்தைகளின் மனம் மிகவும் மென்மையானது. நம்முடைய முரட்டுத்தனத்தால் அவர்களின் மனதை காயப்படுத்தக் கூடாது. நாம் சாதாரணமாக நினைக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடும்.

    ஆபீசில் இருந்து திரும்பிய அப்பாவிடம் ஆசையாக விளையாடப் போனான் ரமேஷ். ஆபீஸ் டென்ஷனில் இருந்து விடுபடாத அப்பா, அவனை முரட்டுத்தனமாக தள்ளிவிட்டார். அவன் பேசாமல் மூலையில் சென்று அமர்ந்து கொண்டான். அதன் பிறகு அவன் சரியாக சாப்பிடுவதும் இல்லை. பாடத்தில் கவனம் செலுத்தவும் இல்லை.

    நம்முடைய பிரச்சினைகளை, சூழ்நிலைகளை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அறியாமை. நம்முடைய இந்த அறியாமை அவர்களை இருளில் தள்ளிவிடும். குழந்தைகளை கண்டிக்க வேண்டியது அவசியம்தான். அந்த கண்டிப்பு மிகவும் மென்மையாக, அவர்கள் மனதில் பதியும்படியாக இருக்க வேண்டும்.

    இதற்கெல்லாம் பொறுமையும், போதுமான அவகாசமும் வேண்டும். குழந்தைகள் முன் நடக்கும் குடும்ப சண்டைகள் அவர்கள் மனதில் பெரிய காயத்தை உண்டாக்கிவிடும். தேவையற்றபயம், பாதுகாப்பின்மையை அவர்கள் உணருவார்கள். இது அவர்களுக்கு கவனக்குறைவையும், கல்வியில் ஆர்வக் குறைவையும் ஏற்படுத்திவிடும். மனதில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு உடலில் பாதிப்பு ஏற்படும். அதீத பயத்தின் காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுவலி ஏற்படலாம்.
    பாதுகாப்பின்மையை உணருவதால்தான் சில குழந்தைகள் படுக்கையை ஈரமாக்கிவிடுகிறார்கள். தங்களுடைய குழந்தைகள் அதிபுத்தி சாலிகளாக இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். குழந்தைகளை இயல்பாக சிந்திக்கவிட்டால்தான் அது நிகழும். அறிவை நாம் திணிக்கக்கூடாது. குழந்தைகளின் அறிவைத் தூண்டும் விதத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டும். அது அவர்களை சிந்திக்க வைக்கும், கேள்வி கேட்க வைக்கும்.

    வெற்றி, தோல்வி இரண்டிற்கும் அவர்களை தயார்படுத்த வேண்டும். அது தான் குழந்தைகளை பலசாலிகளாக்கும். வெற்றி பெறும்போது பாராட்டும் பெற்றோர், தோல்வியடையும்போதும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாறாக புண்படுத்தினால் அவர்கள் தன்னம்பிக்கையை இழந்து தனிமனிதனாக ஒதுங்கி விடுவார்கள். தோல்வியை எதிர்கொள்ள நாம் கற்றுக்கொடுக்கும்போது தான் அவர்களின் அடுத்த வெற்றிக்கான முயற்சி தொடங்கும்.

    தன் வயதை ஒத்த குழந்தைகளோடு பழகுவது, விளையாடுவது கூட அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும். அவர்கள் சுயமாக இயங்குவது, தன்வயது குழந்தைகளுடன் விளையாடும்போதுதான். எனவே விளையாடுவதை தடுப்பது அவர்களுடைய மனம், உடல் இரண்டையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    மறந்தும் கூட அவர்களை நண்பர்கள் முன் அவமானப்படுத்த வேண்டாம். நம்முடைய கண்டிப்பான வார்த்தைகள் எப்போதும் அவர்களை திருத்துவதில்லை. மாறாக சுதந்திரமாக இயங்கவிடும்போதுதான் அவர்களுடைய திறமைகள் வெளிப்படுகிறது. தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள். எப்போதும் கோபம், கடுமையான வார்த்தைகள், கண்டிப்பு இவைகள் எதுவும் குழந்தைகளிடம் பிரயோஜனப் படாது. அவர்களை நாம் மதிக்கும் விதத்தில்தான் அவர்களுடைய மனமும், அறிவும் மலர்ச்சி பெறுகிறது.

    எப்போதும் அடித்து கொண்டிருக்கும் குழந்தைகள், யாருடைய முகத்தையும் நேருக்கு நேர் பார்த்து பேசாத குழந்தைகள், எப்போதும் நகத்தை கடித்து கொண்டிருக்கும் குழந்தைகள், இயல்பாக மற்ற குழந்தைகளுடன் பழகாத குழந்தைகள், சாதாரண கேள்விக்கு கூட பதிலளிக்க தெரியாத குழந்தைகள், தனிமையில் இருக்க விரும்பும் குழந்தைகள்… இப்படி அவர்களுடைய வித்தியாசமான நடவடிக்கைகள் அவர்களின் புண்பட்ட மனதை காட்டிக்கொடுக்கும். இதற்கான காரணங்களை மனோதத்துவ நிபுணர்கள் உதவியுடன் மாற்ற வேண்டும்.

    குழந்தைகள் ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல. நாட்டின் எதிர்கால செல்வங்கள். அவர்களின் உடலும், மனமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அந்த பாதுகாப்பு அவர்களது குடும்பத்தில் இருந்துதான் வழங்கப்பட வேண்டும். ஆம்… நல்ல குழந்தைகளை வளர்க்க நாமும் நல்ல பெற்றோராக மாற வேண்டும்!

    source: vayal
Working...
X