Announcement

Collapse
No announcement yet.

“மாதம் மும்மாரி பெய்கிறதா மந்திரி?’

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • “மாதம் மும்மாரி பெய்கிறதா மந்திரி?’

    மன்ன*ராட்சி காலத்தில், மன்ன*ர் மந்திரியைப் பார்த்து, “மாதம் மும்மாரி பெய்கிறதா மந்திரி?’ என்று கேட்பாராம். “ஆம் மகாராஜா!’ என்று பதில் சொல்வாராம் மந்திரி. “ராஜா என் றால் அரண்மனையை விட்டு வெளியே போவதே இல்லையா? மழை பெய்வது ம், வெயில் காய்வதும் கூட தெரியாமல் ஒரு ராஜாவா?’ என்று கேட்காதீர்கள்; அது அந்தக் காலம்.

    மாதம் ¬மும்மாரி என்பது என்ன கணக்கு என்றால், வேதம் ஓதும் வேதியற்கொரு மழை, நீதி வழுவா செங்கோலுக்கொரு மழை, பத்தினிப் பெண்களுக்கொரு மழை என்றனர். வேதாத்யானம் ஒழுங் காக செய்து வருவதால், சந்தோஷப்பட்டு ஒரு மழை பெய்யச் செய்வார் வருண பகவான்.

    நீதி தவறாமல் அரசன் ஆட்சி செய்தால் சந்தோஷப்பட்டு, ஒரு மழை பெய்யச் செய்வர் தேவதைக ள். தன் கடமைகளை ஒழுங் காகச் செய்து, கணவனை பேணி பாதுகாத்து, குடும்பத் தையும், சிறப்பான ¬முறையி ல் நடத்தி வரும் பத்தினிப் பெண்களுக்காக ஒரு மழை பெய்யுமாம்.

    அதனால்தான், வேதம் ஓதுபவ ர்களுக்கு தனிப் பெருமை. வே தம் ஓதுபவர்களுக்காகவே, அரசாங்கம் சில சவுகரியங்களைச் செய்து கொடுத்தது. அரசனும் நீதி வழுவாமல் ராஜ்யபாரம் செய்து, யாருக்கும் எந்தத் துன்பமும் வராமல் பாதுகாத்து, ஆராய்ச்சி மணி கட்டி, குடி மக்களின் குறைகளை அறிந்து, அதைப் போக்கி, நாடு நலமாக இருக்க ஏற்பாடு செய்து கொ டுத்தான்; அதற்காக ஒரு மழை.


    நாட்டில் மரியாதைக்குரியவர்கள் பத்தினிப் பெண்கள். குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வர். “பத்தி னிப் பெண்கள் பெய்யன பெய்யும் மழை…’ என்றுள்ளது.


    இம்மூன்று காரணங்களாலும் மாதம் ¬மும்மாரி பெய்ததாகச் சொ ல்வர்.


    வைரம் ராஜகோபால், தினமலர்
Working...
X