PDA

View Full Version : தீட்டு என்றால் என்ன? - What is Theetu or Taint - Human PolutionbmbcAdmin
25-10-2011, 03:50 AM
இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப் படுகிறது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும்
விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.

எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள்
நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.

உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி,
கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர்
இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். காரில் செல்பவன் தனக்குள்ள பாதையை விடுத்து
மற்ற பாதையில் சென்று கொண்டு நான் நடந்து செல்லவில்லையாதலால் எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி
அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.
அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி.
அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது.

மேலும் ஒன்று இங்கு கவனிக்கத் தக்கது:
உயிருடன் உள்ள ஒரு மனிதன் வேண்டுமானால் நெருக்கம் இல்லாத பந்துக்களிடத்தில் அண்டாமல் விலகி இருக்கலாம்,
உடலைப் பிரிந்த ப்ரேத ரூபியாக உள்ள ஆத்மா எங்கும் வியாபிக்கும் தன்மை உள்ளது.
அந்த ஆத்மாவிடம் பகைமை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பிட்ட நாள் தீட்டு அநுட்டித்தால்தான் மேற்கொண்டு தாங்கள் செய்யக்கூடிய பூஜை, புநஸ்காரங்கள், புண்ணிய காரியங்களுக்கு
பலன் உண்டாகும். இந்த மாதிரி விஷயங்களில் அலட்சியம் செய்துவிட்டு, ஹோம் செய்தேன், பூஜை செய்தேன், அர்சனை செய்தேன்
பலன் வரவில்லை என்று புலம்புவதில் பொருள் இல்லை. இம்மாதிரியான காரியங்களில் தவறவிட்ட கடமைகளால் ஏற்படும்
தோஷங்கள் பெருமளவு புண்ணிய பலன்களை அடையவொட்டாமல் செய்துவிடும்.

எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி
விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும்.

sa_narayanan
30-09-2012, 11:26 AM
என் கூடப் பிறந்த சகோதரி (பெரிய அக்கா) நேற்று 29-09-2012 சென்னையில் காலமானர். 9 பேர் கொண்ட எங்கள் வீட்டில் அவள் தான் மூத்தவள். எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு? வீட்டிற்கு மூத்தவள் என்பதனால ஒரு வருஷம் பண்டிகை பண்ணக் கூடாதா? கோயிலுக்கு போகக் கூடாதா?

SA narayanana

bmbcAdmin
30-09-2012, 03:56 PM
என் கூடப் பிறந்த சகோதரி (பெரிய அக்கா) நேற்று 29-09-2012 சென்னையில் காலமானர். 9 பேர் கொண்ட எங்கள் வீட்டில் அவள் தான் மூத்தவள். எங்களுக்கு எத்தனை நாள் தீட்டு? வீட்டிற்கு மூத்தவள் என்பதனால ஒரு வருஷம் பண்டிகை பண்ணக் கூடாதா? கோயிலுக்கு போகக் கூடாதா?
SA narayanana

ஶ்ரீ:
தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளையும்,
தாரைவார்த்துக்கொடுக்கப்பட்ட பெண்ணும் ஸமம்
மேற்படி இருவகையினர் மரணத்திலும் தீட்டு 3 நாள் மட்டுமே.
அதுபோல் மேற்படியினரின் மரணத்திற்காக எந்த பண்டிகையையும் நிறுத்தக்கூடாது.
அவர்களின் மரணித்த 4ம் நாளில் வந்தால்கூட கொண்டாடவேண்டும்.
அதுபோல் சொந்தத் தகப்பனார் மரணமடைந்திருந்தாலும் திருமணமான பெண்கள்
அவர்கள் இல்லத்தில் எந்தப் பண்டிகையையும் நிறுத்தாமல் கொண்டாடவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், ஐயங்கார்கள் 13ம்நாள் சுபஸ்வீகாரம் என்று கொண்டாடுவது
13 நாளைக்குப் பிறகு அனைத்து சுபங்களையும் விடாமல் அநுஷ்டிக்வேண்டும் என்பதற்காகத்தான்.
மாஸ்யாதிகள் பண்ணிக்கொண்டிருக்கும் கர்த்தாக்கள் மட்டில் ஒருவருடம் மாஸ்யத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து மற்றவற்றை இரண்டாம் பக்ஷமாகககொண்டாடலாம்.

Padmanabhan.J
19-10-2012, 11:39 AM
Sir,
I have a doubt about distant cousins dying in a foreign country whom we never met, only heard about them through elders.
Are we to follow one year " Thukkam" and refrain from doing all Pandigaigal .
Kindly let me know what our Scriptures say about this?
Thanks in Advance
Padmanabhan.J