Announcement

Collapse
No announcement yet.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் - 263 - பெரியா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் - 263 - பெரியா

    விண் எல்லாம் கேட்க எழுதிட்டாய் உன் வாயில்
    விரும்பி அதனை நான் நோக்கி
    மண் எல்லாம் கண்டு என் மனத்துஉள்ளே அஞ்சி
    மது சூதனனே என்று இருந்தேன்
    புண் ஏதும் இல்லை உன் காதும் அறியும்
    பொறுத்து இறைப் போது இரு நம்பீ!
    கண்ணா என் கார்முகிலே கடல் வண்ணா
    காவலனே முலை உணாயே.
    பொருள்: ""கண்ணா! மண்ணை ஏன் தின்றாய்?,'' என்று உன்னை அடித்தபோது, விண்ணுலகமே கேட்கும்படி அழுதாய். அப்போது உன் வாயில் எல்லா உலகங்களையும் காட்டியதும், அடித்து விட்டோமே என்று அச்சம் மனதில் எழுந்தது. பரம்பொருளான மதுசூதனன் இவன் என்பதை உணர்ந்தேன். உன் அழகிய காதில் புண் ஏதும் இல்லை. எனவே, அதில் காதணி அணிவிக்கும் வரை பொறுமையோடு இரு. மேகம் போல கருமைநிறத்தவனே! கடல் வண்ணனே! எங்களின் காவலனே! பால் குடிக்க வா.
Working...
X