Announcement

Collapse
No announcement yet.

காஞ்சிப்பெரியவர் ஆராதித்த கனகதுர்கா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காஞ்சிப்பெரியவர் ஆராதித்த கனகதுர்கா

    காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் குறுக்கு வட்டச்சாலையில் 4கி.மீ., தூரத்திலுள்ள ஏனாத்தூரில் கனகதுர்கா கோயில் உள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் பூமியைத் தோண்டும்போது, ஒரு அம்மன் சிலையைக் கண்டெடுத்தார். அதை அங்கிருந்த வன்னிமரத்தின் அடியில் வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காஞ்சிப்பெரியவரின் ஆலோசனைப்படி அந்த அம்பாளுக்கு "கனகதுர்கா' என்னும் திருநாமம் சூடப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது.
    இந்த அம்பிகை தனது கைகளில் அம்பு, ஈட்டி, வாள், கதாயுதம், சூலம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி, சத்ரு சம்ஹார கோலத்தில், உலகைக் காப்பவளாக எழுந்தருளி இருக்கிறாள். அவளது 12 கைகளில் இருகைகள் மட்டும் பின்புறம் இருப்பது மாறுபட்ட அமைப்பு. வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் வன்னிமரத்தடியில் பொங்கலிடுவர். கை,கால்வலி, வாதநோய் உள்ளவர்கள், பாதயாத்திரை வருவதாக நேர்ந்து கொண்டால் சுகமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாட்டுப்பொங்கல் அன்று காஞ்சிப்பெரியவர் இங்கு வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். ஞாயிறு ராகுகாலம், பவுர்ணமி, ஆடி,தைவெள்ளி, தைப்பூசம் நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். பெரியவர் பெயரில் அமைந்த சந்திரசேகரேந்திரா பல்கலைக்கழகம் கோயில் அருகில் உள்ளது.
Working...
X