Announcement

Collapse
No announcement yet.

ரிஷிகள் மந்திரங்களைக் கண்டார்கள் என்றா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரிஷிகள் மந்திரங்களைக் கண்டார்கள் என்றா&#


    ரிஷிகள் மந்திரங்களைக் கண்டார்கள் என்றால், அதற்கு முந்தி அவை எங்கே இருந்தன?



    ரிஷிகள் மந்திரங்களைக் கண்டார்கள் என்றால், அதற்கு முந்தி அவை எங்கே இருந்தன? அநாதி என்றால் சிருஷ்டியின் போதே அவையும் தோன்றினவா? மநுஷ்யர்கள் தோன்று முன்பே தோன்றி விட்டனவா? எப்படித் தோன்றின? இவர்கள் கண்டுபிடிக்கிற வரையில் எங்கே இருந்தன?

    வேத மந்திரங்கள் சிருஷ்டியின் ஆரம்பத்தில் தோன்றின என்றால், பரமாத்மா லோகத்தில் சிருஷ்டி பண்ணுகிறபோதே இதையும் தாமே பண்ணிவிட்டார் என்று அர்த்தம் ஆகும். பரமாத்மாவே வேதங்களை எழுதி எங்கேயாவது போட்டுவிட்டாரா? அப்புறம் ஒவ்வொரு ரிஷிகள் அதில் ஒவ்வொரு பாகத்தைக் கண்டெடுத்தார்களா? ஆனால் இப்படி சிருஷ்டி ஆரம்பத்திலேயே வேதம் இருந்ததாகச் சொன்னால்கூட அது அநாதியாகிவிட்டது. ஏனென்றால் இப்போதிருக்கிற பிரம்ம சிருஷ்டி எப்போது உண்டாயிற்று என்பதற்கே கணக்கு இருக்கிறது. க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்று ஒவ்வொன்றுக்கும் இத்தனை வருஷங்கள் என்று சொல்லியிருக்கிறது. இம்மாதிரி ஆயிரம் சதுர்யுகம் கொண்டது பிரம்மாவுக்கு ஒரு பகல்; ஆயிரம் சதுர்யுகம் ஒரு இரவு. இந்தக் கணக்குப்படி அவருக்கு இப்போது ஐம்பது வயசுக்கு மேல் ஆகிவிட்டது என்று திருத்தமாக இன்றைய வயசை சொல்லியிருக்கிறது. எந்தக் கர்மாவுக்கும் சங்கல்பம் செய்து கொள்ளும்போது, ஒரு பத்திரம் எழுதினால் அதில் தேதி போடுகிற மாதிரி, அன்றைய தினத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இப்படிச் சொல்லும்போது பிரம்மாவின் இத்தனாவது வயசில், இத்தனாம் மாசத்தில், இன்ன பக்ஷத்தில், இன்ன நாளில், இன்ன யாமத்தில் என்று சொல்கிறோம். இதிலிருந்து என்ன ஏற்படுகிறதென்றால் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா எப்போது உண்டானார் என்பதற்கே கால வரையறை இருக்கிறது. இத்தனை கோடி கோடி வருஷங்களுக்கு முந்தி பிரம்மா உண்டானார் என்றால் அவரே அநாதியில்லை. அதனால் அவரால் உண்டான லோக சிருஷ்டியும் அநாதியில்லை. சிருஷ்டியே அநாதியில்லை என்று சொல்லிவிட்டு வேதம் அநாதி என்றால் என்ன அர்த்தம்?

    சிருஷ்டி தோன்றுவதற்கு முன்பும் பரமாத்மா இருந்தார். பிரம்மா இல்லை. ஆனால் பிரம்மம் என்று சொல்லப்படுகிற பரம்பொருள் அல்லது பரமாத்மா எப்பொதுமே இருந்திருக்கிறது. அதுதான் அநாதி. பிரபஞ்சம், ஜீவ ஜந்துக்கள் எல்லாம் அதிலிருந்துதான் உண்டாயின. பரமாத்மா தாமே நேரே இவற்றைப் பண்ணாமல் பிரம்மா மூலமாகப் பண்ணினார். விஷ்ணு மூலமாக பரிபாலித்தார். ருத்ரன் மூலம் ஸம்ஹாரம் பண்ணினார். அப்புறம் அந்த பிரம்ம, விஷ்ணு, ருத்ரர் எல்லாரையுங்கூட ஸம்ஹாரம் பண்ணிவிடுகிறார். இதனால் தான் பிரம்மாவுக்கும் ஆயுஸ் சொல்லியிருக்கிறது. இப்போதிருக்கிற பிரம்மாவுக்கு நூறு வயஸானபின் அவர் பரமாத்மாவோடு சேர்ந்துவிடுவார். அவர் ஆயுஸ் முடிந்துவிடும். மறுபடி இன்னொரு பிரம்மா வருவார். அவர் மறுபடியும் சிருஷ்டியை ஆரம்பிக்க வேண்டும். இம்மாதிரி இன்னொரு பிரம்மாவை உண்டு பண்ணுவதற்கு முந்தியே பரமாத்மா வேதங்களை உண்டு பண்ணி விடுவாரா? சிருஷ்டிக்கு முந்தியே வேதம் இருந்தது என்று சாஸ்திரங்களிலிருநது தெரிகிறது. ஏனென்றால், பிரம்மாவே வேத மந்திரங்களைக் கொண்டுதான் சிருஷ்டியே செய்தார் என்று சொல்லியிருக்கிறது. வெறும் சப்தங்களேயான மந்திரத்தைக் கொண்டு சிருஷ்டி பண்ணினார் என்றால் என்ன என்று பிறகு சொல்கிறேன். இங்கே சொல்ல வந்தது, ரிஷிகளுக்கு முந்தி, லோகமே ஏற்படுவதற்கு முந்தி, வேதங்கள் இருந்தன என்பதுதான். பிரம்மாவே வேதங்களின் உதவி கொண்டுதான் சிருஷ்டி பண்ண முடிந்தது என்ரு பாகவதாதி புராணங்களில் ஸர்க (சிருஷ்டி) வர்ணனை பண்ணும் இடங்களில் சொல்லியிருக்கிறது.

    இதனால்தான் வேதத்தை அநாதி என்கிறார்களா? வேதம், ஈச்வரன் என்று இரண்டுமே அநாதி என்றால் இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாமா? யோசித்துப் பார்த்தால் இதுவும் தப்புதான்! சிருஷ்டி தோன்றாவிட்டாலும், ஈச்வரன் வேதத்தை உண்டு பண்ணினார் என்று சொல்லி விட்டாலே அது உண்டாகாத ஒரு காலமும் உண்டு என்று அர்த்தமாகும். லோகமும் ஜீவஜந்துக்களும் சிருஷ்டியாகாவிட்டலும், பரமாத்மாவிடம் காலம் என்ற தத்துவம் உண்டான பிற்பாடுதான் வேதம் உண்டாயிற்று என்று அர்த்தமாகிவிடும். அதாவது அது அநாதி என்பது பொய்யாகிவிடும்.

    வேதமும் அநாதி, ஈச்வரனும் அநாதி என்றால் இதை அவரும் பண்ணயிருக்கக் கூடாது. ஈச்வரன் வேதத்தை உண்டு பண்ணினார் என்றால் அது ஆதியுடையதாகிவிடும ஈச்வரனிலிருந்து தோன்றியதுதான் ஸகலமும். அவருக்குப் புறம்பாக எதுவுமே கிடையாது. ஆகையால் வேதம், ஈச்வரன் என்று இரண்டு அநாதிகள் இருந்தன என்றாலும் தப்பு. இப்படி ஒரே குழப்பமாயிருக்கிற

    ஈச்வரனாலும் பண்ணப்படாமல், ஈச்வரனுக்கு தனியாகவும் இல்லாமல், வேதம் அநாதியாக இருக்க வேண்டும் என்றால் அது எப்படி?

    இந்தப் பெரிய ஸந்தேஹத்துக்கு வேதமே பதில் சொல்லியிருக்கிறது. வேதத்தில் ஒரு பகுதியான ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (II.4.10) "ரிக் -யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்கள் ஈச்வரனின் சுவாஸமாகும்" என்று சொல்லியிருக்கிறது. "நிச்வஸிதம்"- மூச்சுக்காற்று -என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது.
    நமக்கு ச்வாஸமில்லாவிடில் நாம் உயிரோடு இருக்க முடியுமா?முடியாதல் லவா?அப்படித்தான் பரமாத்மாவுக்கு உயிராக இருக்கிற ச்வாஸமே வேதம். அநாதியான அவர் என்றென்றும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பதால், வேதமே அவருடனேயே, அவரது ச்வாஸமாக, அநாதியா இருந்திருக்கிறது என்று ஆகிவிடுகிறது.

    Contd……….Part 3……….


Working...
X