PDA

View Full Version : பிராமின் டுடே 26-09-2012P.S.NARASIMHAN
08-04-2013, 04:54 PM
கடந்த 26-09-2012 அன்று பிராமின் டுடே இதழின் சார்பில் நடந்த கலப்பு திருமணம் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் நானும் கலந்துக் கொண்டேன். கலப்பு திருமணத்திற்கு எதிராக பலர் பேசியிருந்தாலும் கலப்பு திருமணத்தை ஆதரித்து பேசிய சிலரின் கருத்துக்களும் சிந்தனையை தூண்டுவதாக அமைந்ததை மறுப்பதற்கில்லை. சந்தியாவந்தனம் செய்ய சொல்லி தமது பிள்ளை குழந்தைகளை வற்புறுத்தும் நம் குல பெற்றோர்கள் பெண் களை மட்டும் சுலோகங்களை சொல்ல சொல்லியோ பூஜை புனஸ்காரங்களை செய்ய சொல்லியோ வற்புறுத்துவது கிடையாது. இது மட்டுமின்றி பெண்ணோ, பிள்ளையோ அவர்களது இளவயது ஆசா பாசங்களை உணராது அவர்கள் மூலம் வரும் வருமானத்திலேயே குறியாய் இருப்பது சிலரது வழக்கமாய் இருப்பதும் வாடிக்கையும் ஆகிவிடுகிறது. நமது ஜாதி பெண்கள் குறிப்பாக I.T Company- களில் வேலை பார்க்கும் பெண்கள் எவ்வித முன் யோசனை யும் இன்றி பிற ஜாதி பையன்களிடம் ஈர்க்கப்பட்டு பெற்றோர்களின் விருப்புக்கு மாறாக தம் வாழ்க்கையை அமைத்து கொண்டுவிடுகின்றனர். இதை தடுக்க எவராலும் முடிவதில்லை. இதனால் நம் சமூக பையன்கள் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தும் நல்ல வேலையில் இருந்தும் திருமண வாழ்க்கை அமையாமல் வாடுகின்றனர். இந்த சூழலில் 30 அல்லது 35 வயதை தாண்டிய நம் பையன்களுக்கு எந்த காலத்தில் திருமணம் நடப்பது? அதிலும் மிக குறைந்த வருவாய் பெறும் வயது முதிர்ந்த பிராமண பையன்களுக்கு கல்யாணம் என்பதே கனவாகிவிடும் காலம் உருவாகி வருவதை மறுக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில் வயது முதிர்ந்த நமது பையன்கள் நமக்கு ஒத்துவரக்கூடிய பிற இன பெண்களை மணம் முடித்து அந்த பெண்களையும் பிராமணர் களாக்கி விடுதல் ஏற்புடையதாகும் என கருதுகிறேன். இதனை நம் சமூக பெரிய வர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.பூவணூர்.சுந்தர.ஜானகிராமன்
கொளத்தூர், சென்னை.99

bmbcAdmin
08-04-2013, 10:57 PM
ஶ்ரீ:

"பிற இன பெண்களை மணம் முடித்து அந்த பெண்களையும் பிராமணர் களாக்கி விடுதல் "

.... தங்கள் ஆதங்கம் புரிகிறது.
பிற இனப் பெண்களை மணம் புரிந்து கொள்வதால் - வயது முதிர்ந்த பிள்ளைகளுக்கு இல்லற
சுகத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்,
இதன் மூலம் எந்தப் பெண்ணையும் பிராமண வகுப்பிற்கு மாற்ற முடியாது (அப்படி முடியுமென்றால்
இதுபோலவே செய்து எல்லோரையும் பிராமணர் ஆக்கிவிடலாம், அடியேனுக்குக் கூட அது மகிழ்ச்சியே).

சாஸ்த்திரத்தில் திருத்தம் கொண்டுவரக்கூடிய அதிகாரம் படைத்த மஹான் எவரும் இந்தப் பூவுலகில் இல்லை என்பது வருந்தத்தக்கது என்றாலும் மறுக்கமுடியாதது.

ஏன் கொஞ்சம் மாற்றி யோசிக்கக் கூடாது,
பெண்கள் யாரும் தங்கள் காதலர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்
என்று தெரிந்துகொண்டு காதலிப்பதில்லை, மேலும் அவர்கள் கல்வி, அந்தஸ்து போன்றவற்றில்கூட
அதிகம் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
இந்த பிராமண ஆண் பிள்ளைகள் (பிராமண) பெண்கள் விரும்பும்படியாக தங்களைத் தயார் செய்துகொண்டு, தன்னை விரும்பும் ஒரு (பிராமணப்) பெண்ணை மணந்துகொள்ள அனுமதித்தால் என்ன?!
இந்த ஏற்பாட்டை எந்த சாஸ்த்ரமும் தடுக்காது.
என்.வி.எஸ்

P.S.NARASIMHAN
09-04-2013, 11:13 AM
ஶ்ரீ:

"பிற இன பெண்களை மணம் முடித்து அந்த பெண்களையும் பிராமணர் களாக்கி விடுதல் "

.... தங்கள் ஆதங்கம் புரிகிறது.
பிற இனப் பெண்களை மணம் புரிந்து கொள்வதால் - வயது முதிர்ந்த பிள்ளைகளுக்கு இல்லற
சுகத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்,
இதன் மூலம் எந்தப் பெண்ணையும் பிராமண வகுப்பிற்கு மாற்ற முடியாது (அப்படி முடியுமென்றால்
இதுபோலவே செய்து எல்லோரையும் பிராமணர் ஆக்கிவிடலாம், அடியேனுக்குக் கூட அது மகிழ்ச்சியே).
ஏண்டு
சாஸ்த்திரத்தில் திருத்தம் கொண்டுவரக்கூடிய அதிகாரம் படைத்த மஹான் எவரும் இந்தப் பூவுலகில் இல்லை என்பது வருந்தத்தக்கது என்றாலும் மறுக்கமுடியாதது.

ஏன் கொஞ்சம் மாற்றி யோசிக்கக் கூடாது,
பெண்கள் யாரும் தங்கள் காதலர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்
என்று தெரிந்துகொண்டு காதலிப்பதில்லை, மேலும் அவர்கள் கல்வி, அந்தஸ்து போன்றவற்றில்கூட
அதிகம் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
இந்த பிராமண ஆண் பிள்ளைகள் (பிராமண) பெண்கள் விரும்பும்படியாக தங்களைத் தயார் செய்துகொண்டு, தன்னை விரும்பும் ஒரு (பிராமணப்) பெண்ணை மணந்துகொள்ள அனுமதித்தால் என்ன?!
இந்த ஏற்பாட்டை எந்த சாஸ்த்ரமும் தடுக்காது.
என்.வி.எஸ்

ஸ்ரீ என்.வி.எஸ். ஸ்வாமின் ,

தங்கள் விள்க்கம் கண்டு மகிழ்ச்சி.நமது சமூகப்பெண்கள் காதலிப்பவர் எந்த இனம்,கல்வி,அந்தஸ்து போன்றவைகளிள் அக்கறை செலுத்துவதில்லை என்று கூறி இருக்கிறீற்கள்.சரி ஆனால் எதை க்கண்டு
அவர்கள் காதல்வயப்படுகிரார்க்ள்.

இந்த பிராமண ஆண் பிள்ளைகள் பிராமண பெண்கள் விரும்பம்படி தங்களை தயார் செய்துகொள்ளவேண்டும் என்றும் தங்கள் கருத்தை தெரிவித்துஇருக்கிறீர்கள். எந்த மாதிரி அவர்கள் தங்களை தயார் செய்துகொள்ளவேண்டும்? தங்கள் கூற்றுபடி கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். அப்புறம்
நமது பிராமண பையன்களுக்கு விடிவு ஏற்ப்பட்டுவிடுமா? இந்த காலத்தில் ஒரு பிராமணபையனை பார்த்து
அவன் பிராமணண் என்று சொல்லமுடியுமா? ஏனென்றால் அவர்களும் சகலவித மீசைகள்,தாடிகள்,கிருதாக்கள் என பவனி வருகிறாற்களே.மற்ற விஷயங்களிளும் முன்னோடியாகத்தான்
இருக்கிரார்கள். நல்ல சம்பாதித்யமும்உண்டு. ஆனால் நாம் நமது குல பெண்களை மூலம்,கேட்டை,ஆயில்யம் அது இது என்று பழைய பல்லவியை சொல்லி அ ந்த பெண்களுக்கு மணம்
செய்துவைக்காமல் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள். இவ்வளவிற்க்கும் நாம் தான் பொறுப்பு.
அவர்கள் மற்ற சமூக பையங்களை காதலித்து மணம் செய்துகொண்டால் என்ன அவர்களின் மாமனார்,
மாமியார் மண்டையை போட்டுவிடுகிரார்களா என்ன? என்னே பிராமணசமூகம்.அழிவு காலத்தை நோக்கி
அல்லவா போய்க்கொண்டு இருக்கிரோம்.இதை எல்லாம் தங்களை மாதிரி பெரியோர்கள் நமது சமூக
மக்களுக்கு அரிவார்தமாக எடுத்து சொல்லவேண்டும் என்று ப்ராத்தித்துக்கொள்கிரேன்.

வணக்கத்துடன், நரசிம்ஹன்

bmbcAdmin
09-04-2013, 11:35 AM
ஶ்ரீ:

ஒரு பெண் தன்னை கவரும்படியாக நடந்துகொள்ளவேண்டும் என்றுதான் குறிப்பிடலாமேயொழிய
ஒரு பெண்ணை எப்டியெல்லாம் கவர்வது என்று விளக்கம் தேவைப்படுகிற நிலையில் உள்ள
பையனால் ஒருகாலும் ஒரு பெண்ணையும் கவர முடியாது.
பருவப் பிள்ளைகளுக்கு இது இயற்கையாக இருக்கவேண்டியது,
மேலும், ஒவ்வொரு சூழலுக்கும் தக்கவாறு மாறக்கூடியது.

ஆயினும் அடியேன் குறிப்பிட வந்தது இதுவல்ல.
பெரியவர்கள், தங்கள் பிள்ளைகளிடம் உனக்குப் பிடித்த ஒரு பிராமணப் பெண்ணை நீயே
தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற சுதந்திரத்தை மட்டும் அவர்களுக்கு அளித்துப் பாருங்கள்
வேறு எதுவும் தேவையில்லை, தானாக எல்லாம் நிறைவேறிவிடும்.

உங்களால் அப்படிக் கூறமுடியுமா என்று ஒரு எதிர்க்கேள்வி எழக்கூடும்?!
ஆம், அடியேனுடைய குமாரனுக்கு அப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்தை அவன் கல்லூரிக்கு
ப்ரவேசம் செய்யும் முதல் நாளிலேயே வழங்கிவிட்டேன், அவன் மனைவியை அவனேதான்
தேர்ந்தெடுத்துக்கொண்டான், எங்களது எந்தக் குறுக்கீடும் இன்றி.

இந்த சுதந்திரத்தை அளித்ததனால், தன் தகப்பனாரின் சமூக அந்தஸ்துக்கு எந்த குந்தகமும்
வரக்கூடாது என்ற எண்ணம் அவனுக்குத் தானகவே ஏற்பட்டுவிட்டதால், அவன் தன்
பெற்றோர் பெரியோருக்காக, ஒரு ஶ்ரீவைஷ்ணவப் பெண்ணைத்தான் தேர்ந்தெடுத்தான்,
மிக நன்றாக ஸம்ப்ரதாயப்படி திருமணம் நடைபெற்றது.

மேலும், கேட்டை, மூலம், விசாகம், ஆயில்யம் போன்ற நக்ஷத்திரங்களின் அபவாதங்கள் மட்டுமின்றி,
ஜாதகம் பார்ப்பதே சாஸ்திரத்தில் விதிக்கப்படாத ஒன்று என்பது பற்றியும் நிறைய பத்திரிகைகளில்,
முடிந்தவரை ஆதாரத்துடன் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், 90களில் ப்ரபலமாக அவை பேசப்பட்டன.
டி.விக்களில் பேட்டிகள் வெளியிடப்பட்டன.
தத்கால, அஹோபிலமடட ஆஸ்தான வித்வான் போன்ற மஹான்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

குறிப்பு:- தாங்கள் (அரிவார்த்தமாக) அறிவார்த்தமாக எடுத்துச் சொல்லவேண்டும் குறிப்பிட்டமையால் ஒரு தகவலுக்காக இவற்றை வெளியிட்டுள்ளேன். தற்பெருமைக்காக அல்ல.
தாஸன்.
என்.வி.எஸ்

R.Varadarajan
12-04-2013, 10:03 AM
என்.வி.எஸ். அவர்களுக்கு,
மிக அருமையானபதில். நீங்கள் சொன்னபடி கொஞ்சம் சுதந்திரம்கொடுத்தால்,வரதக்சினைஎன்றுபிடுங்காமல்இருந்தால் நிறையவாலிப பிராமணர்கள் திருமணம்செய்துகொண்டுஇருப்பார்கள்.
நம் சமூகத்தைகாக்கஇப்படிசெய்ய தொடங்கினால் என்ன?
எல்லோரும்யோசிக்கவேண்டிய தருணம்

P.S.NARASIMHAN
12-04-2013, 11:19 AM
என்.வி.எஸ். அவர்களுக்கு,
மிக அருமையானபதில். நீங்கள் சொன்னபடி கொஞ்சம் சுதந்திரம்கொடுத்தால்,வரதக்சினைஎன்றுபிடுங்காமல்இருந்தால் நிறையவாலிப பிராமணர்கள் திருமணம்செய்துகொண்டுஇருப்பார்கள்.
நம் சமூகத்தைகாக்கஇப்படிசெய்ய தொடங்கினால் என்ன?
எல்லோரும்யோசிக்கவேண்டிய தருணம்


அன்புடையீர் வரதராஜன் அவர்களே ,
நமது பிராமண சமூகம் மதி கெட்டு,தரம் கெட்டு ,பாரம்பரியத்தையும் கெடுத்து எல்லாவற்றையும் விட்டு விட்டு நாசத்தை அல்லவோ குறிப்பிட்டு சென்றுகொண்டு இருக்கிறோம். அபபுறம் என்ன நமது பிராமண பையன்களுக்கு கல்யாணமா.கனவு தான் காண வேண்டும்.என்ன யோசித்து என்ன பலன்..யாரும்
யோசிக்கபோவதில்லை .

bmbcAdmin
12-04-2013, 11:53 AM
ஶ்ரீ:
உணர்ச்சிவசப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.
"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்" - என்றால் வள்ளுவர்.
எனவே, எதையும் காலம் கடந்து யோசிப்பதால் பலன் வராது.
அடியேன் திருமண ஜாதகப் பரிவர்தனை நிலையம் வைத்து மிகப்ரபலமாக 12 வருடங்கள் நடத்தியவன், இன்றைய கம்ப்யூட்டர் ஜாதகப்பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் தமிழ் மேட்ரிமோனியலுக்கும்
அடிப்படையாக சில நூறு ஜாதகங்களை அளித்தவர்கள் அடியோங்கள்தான். ஒரு காலத்தில் சென்னையில் மட்டும் எங்களுக்கு 14 கிளைகள் இருந்தன. அந்த அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.

ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பெண் பிள்ளைக்கு துணை தேடும்போது
ஆரம்பத்தில் தங்கள் நிபந்தனைகளை மிகவும் கடுமையாக வைத்திருப்பார்கள்.
உதாரணமாக ஐந்தடி ஐந்தங்குலத்திற்கு ஒரு அங்குலம் குறைந்தாலோ, ஐந்தடி ஆறு அங்குலத்திற்கு
ஒரு அங்குலம் அதிகமானாலோ அந்த ஜாதகத்தை ஏற்கமாட்டோம் என்பார்கள்.
அவர்களிடம் அடியேன் கூறுவது,
3 வருடங்களுக்குப் பிறகு ஐந்தடியிலிருந்து ஐந்தடி ஒன்பதங்குலம் வரை இருக்கலாம் என்று
உங்கள் நிபந்தனையைத் தளர்த்துவீர்களால், அதனால் இப்போதே ஐந்தடி மூன்றங்குலத்திலிருந்து
ஐந்தடி ஏழு அங்குலம் வரை என நிபந்தனையைத் தளர்த்தினீர்களானால், உடனடியாக திருமணம்
குதிர்ந்துவிடும், இப்படி ஒவ்வொரு நிபந்தனையிலும், முடிந்தவரை தளரத்தினால் மகி விரைவாக
நல்ல குடும்பத்தில் திருமணங்கள் நிச்சயமாகும் என்பேன்.
ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் அதை ஏற்பர், மற்றும் சிலர்,
தேவரீர் ஜாதகத்தை அளிப்பதுடன் நிறுத்திக்கொள்ளும் மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
என்றுகூட கூறுவர். (அப்படிப்பட்டவர்கள் இன்றும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்).

சில உரிமை உள்ள இடங்களில் அடியேன் வலுக்கட்டாயமாகப் புகுந்து, நிபந்தனைகளை உடைத்து
திருமணங்களை நிறைவேற்றி வைத்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு:
15 ஆண்டுகளுக்கு முன், என்னுடைய பெரிய தமக்கையின் இரண்டாவது குமாரனுக்கு மூல நக்ஷத்திரத்துப் பெண்ணை
அஸ்வினி நக்ஷத்திரம் என்று சொல்லி பண்ணி வைத்தேன், இன்று அவர்கள்,
ஒரு பெண், ஒரு பிள்ளை (உபநயனம் பண்ணி வைத்துவிட்டேன்)யுடன் மிக மிக சந்தோஷமாக
இருக்கிறார்கள், பெரிய (தமக்கை) தம்பதிகளுக்கு விரைவில் சதாபிஷேகம் நடக்கப்போகிறது.

என் சிறிய தமக்கை பிள்ளைக்கு ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் பார்த்தார்கள்,
ஒரு அங்குலம் உயரம் குறைவு என்ற காரணத்திற்காக அவர்களால் விலக்கப்பட்ட ஒரு பெண்ணின்
பெற்றோரைச் சந்தித்துப் பேசித் தெரிந்துகொண்டு, என் தமக்கையையும் அத்திம்பேரையும்
வலுக்கட்டாயமாக ஒருநாள் அவர்கள் இல்லததிற்கு அழைத்துச்சென்று, குடும்ப உறுப்பினர்
அனைவரிடமும் இவர்களைப் பேச வைத்தேன். குடும்பப் பின்புலம், பெண்ணின் அழகு, தோற்றம்,
பண்பு, கல்வி போன்றவையும், பெற்றோரின் அணுகுமுறையும் மிகவும் பிடித்துப்போகவே,
அவர்களால் அதற்குப்பிறகு ஒதுக்கமுடியவில்லை.
தற்போது திருமணம் நடைபெற்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

எனவே திருமணங்களில்தான் இந்தக் குறள் வெகுவாகப் பொருந்தும்:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாது சொலல்".
என்.வி.எஸ்

P.S.NARASIMHAN
12-04-2013, 05:03 PM
என் வி எஸ் ஸ்வாமின்
தாங்கள் தங்கள் பெரிய தமக்கையின் 2வது குமாரனுக்கு மணம் செய்வித்தபடி மற்ற எல்லோரும் செய்வித்தால் நமது சமூகம் எவ்வளவோ முன்னேறி இருக்குமே. நம்மில் பலர் ஏன் அதை செய்யவில்லை .இதை நமது சமூகம் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வியாகும் .

soundararajan50
12-04-2013, 11:29 PM
Dear Sir,
Your reply to this thread is very nice.I have given full liberty to my son but he is not interested he wants a home loving girl from our brahmin community to be selected by parents and at the same time he also must like her. From our side we prefer a girl from a good family good looking and home loving with minimum SSLC qualification thats all i am searching for a girl since six years My son is good looking teetotaler B.Com subsequently qualified in Hardware/Software working in a leading MNC as project lead earning 85000/- pm well settled.But still not able to get a match now 34 yrs what to do

bmbcAdmin
13-04-2013, 10:53 AM
Sri:
All you have said is correct.
Mostly, children will not listen to their parents suggestion, because that they are having lot of intimacy
they will know their parents (mainly father's) in-capabilities (http://www.thefreedictionary.com/incapability) and have a judgement about them.

So, first of all you have to convince your son by telling,
if parents seeks a girl, they have to manage many of the girls relatives including their parents,
at the same time, if a boy seeks a girl, it is easy, that he can easily convince that girl by giving to understand
everything about him and his family.
Once a girl is convinced, then she will manage all her relative on behalf of that boy.

Also, why not your son select a family girl on his own?
அடியேனைப் பற்றிய மதிப்புச் சற்றுக் குறைந்தாலும் பரவாயில்லை என்று,
இங்கே ஒரு கதையைக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருவன், ஒரு சிறந்த குருவை அணுகி தனக்கு எல்லா கலைகளையும் கற்பிக்க வேண்டினான்.
சில காலம் கழிந்து, அந்த குரு உனக்கு அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்பட்டுவிட்டன
நீ போகலாம் என்று விடுவித்தார்.
ஊர் திரும்பியவனை ஒருவன் கேட்டான், உனக்கு எல்லா கலையும் தெரியும் என்கிறாய்,
பெண்களை வசியம் செய்யும் கலை உனக்குத் தெரியுமா? என்று வினவினான்.
அப்போதுதான் அவனுக்கு உறைத்தது, குரு நமக்கு இந்தக் கலையை மட்டும் கற்பிக்கவில்லை என்று!
குருவிடம் சென்று வினவினான்.
குரு :- காட்டில் வசிக்கும் கொம்பு மானின் கொம்பில் ஒட்டியிருக்கும் மண்ணில் இருந்து, நேரடியாக துளி மண் கொண்டுவந்தால் உனக்கு அதை உடனே கற்பித்துவிடுவேன் என்றார்.
இதற்காக அவன் காட்டில் சென்று உயரமானதொரு மரத்தில் பரண் அமைத்து,
மானுக்குப் பிடித்தமான உணவு வகைகளை மரத்தின் அடியில் போட்டு, சிறிது சிறிதாக பரணையின்
உயரத்தைக் குறைத்து வந்தான். சில வருடங்களில் மானின் கொம்பு கைக்கெட்டும் தூரத்தில்
பரணையின் உயரம் குறைந்தபோது ஒரு நாள் மானின் கொம்பில் இருந்த மண்ணை எடுத்துக்கொண்டு
குருவிடம் விரைந்தான்.
குரு அந்த மண்ணை வாங்கி தூர எரிந்துவிட்டுச் சொன்னார்:
அடே மடையா, ஒரு மானிடம் பழக்கம் ஏற்படுத்தி வசப்படுத்த உனக்குச் சில வருடங்கள் தேவைப் பட்டது.
ஒரு பெண்ணை வசப்படுத்த, அவளுக்குப் பிடித்தமானவற்றைச் செய்துகொண்டு
பின்தொடர்ந்து வா, சில நாட்களிலேயே அவள் வசப்பட்டுவிடுவாள் - இதுதான் அந்தக் கலையின்
ரகசியம் என்றாராம்.

பெரும்பாலான ஆண்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக்கூடியவர்கள்,
பெரும்பாலான பெண்கள் உணர்வு பூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்கள்.

எனவே தங்கள் குமரனை இந்த போரத்தின் உறுப்பினராகி, அடியேனிடம் அவன் சந்தேஹங்களைக்
கேட்கச் சொல்லுங்கள், ஒரளவு தெளிய வைக்க முயற்சிக்கிறேன்.

உண்மையைச் சொல்லப்போனால், அடியேன் இந்த போரம் தொடங்கியதே,
இளைஞர்களை உறுப்பினர்களாக்கி, இந்த ப்ராஹ்மண சமூகத்தின் எதிர்காலத்திற்கு
சில நல்ல ப்ரஜைகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான். பொழுதுபோக்கிற்காக அல்ல.
நன்றி,
என்.வி.எஸ்

soundararajan50
14-04-2013, 09:04 AM
ஶ்ரீ
தங்களைப் பற்றிய மதிப்பு சிறிது குறைந்தாலும் என்று தொடங்கியுள்ளீ ர் மன்னிக்கவும் மதிப்பு கூடத்தான் செய்கிறது தங்கள் கதையைப் படித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை தாங்கள் கூறியுள்ளது போல் seeking/selecting a girl என்பதை காதல் என்று பெயர் கொடுத்து அந்த வார்த்தையைக் கேட்டாலே ஒரு அவர்ஷன் அவனுக்கு காரணம் புரியவில்லை