Announcement

Collapse
No announcement yet.

யார் இந்த முருகன்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யார் இந்த முருகன்?

    பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர் எவ்வித ஆசையும் இல்லாதவர். மகாஞானி. அவர் ஆசையே இல்லாதாவரா என்பதை சோதித்தறிய பார்வதிஆசைப்பட்டாள். சிவனும் ஒப்புக்கொண்டார்.
    அவர்கள் சனத்குமாரர் முன் தோன்றினர். சனத்குமாரர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
    ""நான் ஒன்றும் இவர்களை நினைத்து தவமிருக்கவில்லையே! எதற்காக இங்கே வந்தார்கள்'' என்று எண்ணியவர், அவர்களிடம் பேசக்கூட இல்லை. அவரிடம் கோபத்துடன் பேச்சைத் தொடங்குவது போல் நடித்தார் சிவன்.
    ""ஏ சனத்குமாரா! நீ மகாஞானியாக இருக்கலாம். அதற்காக, லோகமாதா பிதாக்களான எங்களையே அவமதிக்கும் அளவு உனக்கு கர்வமா? வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து உபசரிக்கும் பண்பு கூட உன்னிடம் இல்லையே!''
    சனத்குமாரர் எதற்கும் அஞ்சாதவர். அருமையாகப் பதிலளித்தார்.
    ""உலகில் எல்லாரையுமே கடவுளாகப் பார்ப்பவன் நான். நீங்களும் அதில் ஒருவர். உம்மைக்கண்டு என் உடல் வேண்டுமானால் அச்சப்படலாம். ஆனால், ஆத்மா நடுங்காது,'' என்றார்.
    ""சரி...போகட்டும், ஏதாவது வரம் கேள், தந்து விட்டு போகிறேன்,'' என்றார் சிவன்.
    இதற்கும் சனத்குமாரர் அஞ்சாமல் பதிலளித்தார்.
    ""எனக்கு எந்த வரமும் தேவையில்லை. வேண்டுமானால், என்னிடம் நீர் ஒரு வரம் கேளும். உமக்கு வேண்டுமானால், நான் தருகிறேன்,''.
    ""அப்படியா! நீ என் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்,''.
    ""அவ்வளவுதானே! ஆனால், வரம் கேட்ட நீர் மட்டுமே என்னைப் பெற வேண்டும். இதோ! உன் அருகில் நிற்கும் இந்தத்தாய் என்னிடம் ஏதும் கேட்கவில்லை. ஒருவர் கேட்காமல் ஒன்றைக் கொடுக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். எனவே, தாயின்
    சம்பந்தமில்லாமல் நான் பிறக்க வேண்டும்,''.
    இதுகேட்ட பார்வதி பதறினாள்.
    ""சனத்குமாரா! இது நியாயமல்ல. என் கணவர் ஒன்றைக் கேட்கிறார் என்றால், அது என்னையும் உத்தேசித்து தான். கணவருக்குள் மனைவி அடக்கம் என்பதை அறிவாய் அல்லவா?''
    ""ஒப்புக்கொள்கிறேன்... அதற்காக நான் நேரடியாக உன் வயிற்றில் பிறக்கமாட்டேன். ஒரு காலத்தில் பஸ்மாசுரனுக்கு சிவன் ஒரு வரம் கொடுத்தார். அதன்படி, அவன் யார் தலையில் கை வைக்கிறானோ, அவன் பஸ்பமாகி விடுவான். அவன் சிவனையே சோதிக்க வந்தான். அவர் மறைந்து விட்டார். அந்தக்கவலையில், நீ தண்ணீராய் உருகிப்போனாய். அதுவே சரவணப்பொய்கை. அதற்குள் உன் கணவர் என்னைக் கிடத்தட்டும். அப்படியானால், உ<ன் ஸ்பரிசமும் எனக்கு கிடைத்தது போல் ஆகிவிடும். சரிதானே!'' என்றார்.
    பார்வதி சம்மதித்தாள். இருவரும் மறைந்தனர்.
    இதுபற்றி தந்தை பிரம்மாவிடம் கேட்டார் சனத்குமாரர்.
    ""குமாரா! நீ முற்பிறப்பில், தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்துவது குறித்து வேதங்களில் இருந்து தெரிந்து கொண்டாய். அப்போதெல்லாம், அந்த அசுரர்களை அழித்து விடமாட்டோமா என மனம் கொதிப்பாய். அதன்படி, இப்போது பத்மாசுரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் அழிக்க சிவன் உன்னைப் பயன்படுத்தப் போகிறார். எதை நினைக்கிறோமோ அதுவாகவே
    நாம் மாறுகிறோம் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்,'' என்றார்.
    இந்த சனத்குமாரரே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து, தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். சூரபத்மனைக் கொன்றார். உடை மீது கூட ஆசை இல்லாமல், பழநியில் கோவணத்துடன் அருள்செய்கிறார்.
    இந்தக்கதை "திரிபுரா ரகஸ்யம்' என்ற கிரந்த நூலில் உள்ளது.
    -பரணிபாலன்
Working...
X