Announcement

Collapse
No announcement yet.

விழுந்து வணங்க வேண்டாம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விழுந்து வணங்க வேண்டாம்!

    வாரியார் ஒரு சமயம் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க, தன் சீடர்களுடன் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு சென்றார். சீடர்கள், மகாபெரியவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். வாரியாரின் உடம்பு மிகவும் பருத்தது. அதை கஷ்டப்பட்டு வருத்தி, அவரது காலில் விழ முயற்சித்தார். அப்போது பெரியவர் சைகையால், "அவரை வணங்க வேண்டாம்' என்று தடுத்தார். திடுக்கிட்ட வாரியார் மனவருத்தம் கொண்டார். அவரது சீடர்களும் புரியாமல் விழித்தனர்.
    எல்லோரும் சென்றபின்பு, வாரியார் அவரிடம், ""சுவாமி! மகாபெரியவரான தங்களை வணங்கும் பாக்கியத்தை எனக்கு மட்டும் ஏன் மறுத்தீர்கள்!'' என்றார் வேதனைக் குரலில்.
    பெரியவர் அவரிடம், ""நீங்கள் கழுத்தில் ஏராளமான ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கிறீர்கள். சில ருத்ராட்சங்களில் லிங்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் பூமியில் வீழ்ந்து என்னை வணங்கும்போது, சிவலிங்கங்களும் பூமியில் விழுந்து என்னை வணங்குவது போலாகிவிடும். என்னுடைய ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு,'' என்றார். பெரியவரின் பதில் கேட்ட, வாரியாரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அன்றிலிருந்து பூமியில் விழுந்து வணங்கும் பழக்கத்தையே நிறுத்தி விட்டார்.

    வாரியாரைத் தடுத்த மகாபெரியவர்
Working...
X