Announcement

Collapse
No announcement yet.

உப்பு சீடை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உப்பு சீடை

    முதலில் உப்பு சீடை

    தேவையானவை :

    பச்சரிசி 2 கப்
    ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
    தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
    எள் கொஞ்சம்
    பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
    வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு
    பொறிக்க எண்ணை

    செய்முறை:

    முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
    இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
    அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
    எள்ளை பொறுக்கி வைக்கவும்
    தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
    ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
    வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
    மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டி )
    ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை' யாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
    அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    'கரகர' ப்பான 'உப்பு சீடை ' ரெடி

    குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
    ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது


    1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம்.
    Last edited by krishnaamma; 28-04-13, 12:30.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X